Tuesday, March 25, 2025

Sozhipalayam - Sri 1008 Neminath Jinar jain temple - சோழிப்பாளையம் - ஸ்ரீ 1008 நேமிநாதர் ஜினாலயம்

 

ஸ்ரீ 1008 நேமிநாதர் ஜினாலயம்

Sri 1008 Neminath Jinar small jain temple 





Location: 13.237584, 80.169596

At Vinayagar koil street…

Adjacent to Orakkadu road, Cholavaram Road – advance to shri Agastheeswaram Temple 


புழலில் இருந்து சுமார் 12  கிமி தொலைவில் உள்ள சோழவரம் பகுதிக்கு உட்பட்ட சோழிப்பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. 

 

அவ்வூரில்  ஒரு வீட்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் ஒரு அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் மூலவராக அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தங்கரர் சிலை 22வது தீர்த்தங்கரர் நேமி நாதருக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளதாக வீட்டின் சொந்தக்காரர் தெரிவிக்கிறார். 

 

இவர் இந்த ஊரின் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். சமணத்தின் பால் பற்று கொண்ட அவரது பாட்டனார் அதை தனது இல்லத்தில் வைத்து பூஜிக்க எண்ணி, வீட்டின் முன்புறம் சிறிய ஆலயம் கட்டி அதில் நிறுவியுள்ளார். இச்செய்தியை கேள்வியுற்ற சில வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்ச் சமணர்கள் நேரில் சென்று பார்த்து அவரைப் பாராட்டியதோடு அச்சிலையை தொழும் முறையைச் சொல்லிச்சென்றதாக அவரது பெயரன் தெரிவிக்கிறார்.

 

தீர்த்தங்கரர் மிகவும் தொன்மையான வடிவத்துடன் காணப்படுகிறது. ஜினருக்கான எட்டு வகைசிறப்புகளையும் வடித்துள்ளார்கள். அதன் விபரங்கள் அனைத்தும் தேய்ந்திருந்தாலும் அடையாளம் முழுவதுமாக தென்படுகிறது.  

 

அதன் அருகே இசாகொளத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்டு ஸ்தாபனை செய்யப்பட்டுள்ள  இயக்கி தர்மதேவியும் வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

இந்த அருகர் (நேமிநாதர்) சிலை 12ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்கலாம் என்பது பல அறிஞர்களின் கூற்று. மிகவும் தொன்மையான சிலைவடிவமும் அதன் தேய்மானமும் அவர்களது கணிப்பை நீரூபிப்பது போல காணப்படுகிறது.

 

 














Video 





Sozhipalayam is a village in the Cholavaram region, about 12 km from Puzhal.

 

In that village, a small temple built in front of a house a beautiful Tirthankara sculpture. The owner of the house says that this Tirthankara statue is dedicated to the 22nd Tirthankara, Nemi Nath.

 

It is said that he was recovered from the pond of this village. His grandfather, who was fond of Jainism, wanted to keep it in his house and worship it, so he built a small shrine room with a viman on the top, in front of the house. Hearing this news, some historians and Tamil Jains went to see him in person, praised him and told him how to worship the Lord during that time.

 

The Tirthankara seems to be very ancient form. It has carved eight types of special features for Jinar.  Although all its details are worn out, the identity is completely visible.

 

It is noteworthy that the idol of Dharmadevi, which was brought from Isakolathur and installed near it, is also installed adjacent to that  statue.  

 

Many scholars claim that this Arugar (Nemi Nath) idol may be before the 12th century. The very ancient shape of the idol and its wear and tear seem to confirm their guess.



Sunday, March 23, 2025

vichoor - Shri Adhinath Bhagawan Shrine ---- விச்சூர் ஸ்ரீ ஆதினாத பகவான் சிற்றாலயம்


ஸ்ரீ ஆதினாத பகவான் 



Location: (13.2167, 80.24467) 

 

Between sembarampakkam – vichoor - cholavaram road adjacent to Perumal temple turning (corner) place and nearing before Govt High School – Vichoor, the temple is situated.

 

முற்கால புழல்கோட்டத்தில், இக்கால திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் செம்பரம்பாக்கம் - விச்சூர் சாலையில் உயர்நிலைப்பள்ளிக்கு முன்னதாக வரும் திருப்பத்தில், மேலும் சோழவரம் சாலைத்திருப்பத்திற்கு முன் வரும் திருப்பத்திருக்கு அருகில் விச்சூர் பஞ்சாயத்திலுள்ள பெருமாள் கோவிலுக்கு அருகில் எடுப்பான தோற்றத்துடனான ஸ்ரீ ஆதிநாதர் சிற்றாலயத்தைக் காணலாம்.

 

காண்பதற்கு அழகானத் தோற்றத்துடனுடனான இச்சிற்றாலயம்; கிழக்கு நோக்கிய கருவறை மற்றும் பிரார்த்தனைக் கூடத்துடனுடனான சிற்றாலயத்தின் கருவறைக்கு மேலுள்ள விமானம், ஆறுபட்டைக் கூம்பு (நகாரா விமானம் மாதிரி) வடிவமைப்புடனும் மேற்கலசத்துடனும் சிமெண்ட், மணலால் போன்ற மூலப்பொருளால் உருவாக்கம் பெற்றது.

மூலவர் கருங்கல் சில மிகவும் வசீகரத்துடன், சாந்த ஸ்வரூபியான முகச்சாயலும் இருபுறமும் சாமரைத்தேவர்கள், மேல் முக்குடை, பிரபாமண்டலம் மற்றும் பிண்டி மர அம்சங்களுடன், சிங்காதத்தின் பின் புறம் திவ்யத்வனையை நினைவூட்டும் வகையில் மத்தளம் போன்ற அமைப்புடன் திகழ்கிறது.

 

எந்த ஒரு லாஞ்சனமும் தென்படவில்லை. அதனால் முதலில் கண்டவர்  இவரை, இந்த யுகத்தின் முதல் ஜினரான ஆதிநாதர் என்றே கருதியுள்ளதாக தெரிகிறது.

 

அதிகமான அரிமானம் இல்லை என்றாலும் சிங்காதனத்தின் கீழ் இருந்துள்ள இரண்டடிக்கும் மேலான கருங்கல் மேடையின் எச்சங்கள் காணாமல் போயிருக்கலாம். அதனால்  மூன்றடிக்கும் கூடுதலான உயரமுள்ள ஆதிநாதர் சிலையின் கீழ்தட்டுலுள்ள  மேடை ஆழத்தின் அளவு குறைவாகத் தென்படுகிறது.

 

மற்றபடி அதிகமாக சிதிலங்களுக்கான எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை. சிலையின்  மேற்புற அரிமானம் அதிக தென்படவில்லை.  ஆதலால் சற்றோப்ப 500 ஆண்டுகளில் செதுக்கப்பட்டதாக இருக்கலாம்.

நல்லதொரு  பராமரிப்பில் உள்ள இந்த  சிற்றாலத்தைக்  கண்டு தரிசித்தபின் மனமகிழ்வுடன் அடுத்த ஸ்தலமான பள்ளிபுரத்தை நோக்கி பயணப்பட்டோம்.

 

.










In the ancient Puzhalkottam, in the present-day Ponneri taluk of Thiruvallur district, at the turning, before the high school on the Chembarambakkam-Vichur road and also near the turnoff before the Cholavaram road, Near the Perumal temple in Vichur panchayat, you can find the Sri Adinathar small temple with a beautiful appearance.

 

This shrine with a beautiful appearance to see; The small temple with an east-facing sanctum and a small colonnaded hall, the vimana above the sanctum of the small temple, is made of cement and sand with a six-sided cone-shaped (like nagara vimana) design and a kalash at the top.

 

The moolnayak statuary made up of granite stone is very charming, with a gentle face and a chamaraigods on both side, a upper Mukkudai (tri-umbrella), with prabhamandala and a ashoka tree.

Although there is no great value, the remains of the two-foot-high black stone platform under the throne may have disappeared. Therefore, the depth of the platform at the bottom of the Adinathar statue, which is more than three feet high, appears to be less.

 

No lanchanam is visible. Therefore, it seems that the first person who saw may considered it to be Adinathar, the first Jinar of this era.

 

Otherwise, there is no sign of any major damage. The top texture of the statue is smooth one. Therefore, it may have been carved in the last 500 years.

 

After visiting this well-maintained temple, we happily traveled towards our next destination, Pallipuram.


Videos

































Saturday, March 22, 2025

Pallipuram Thirthankar (isolated) statue - பள்ளிப்புரம் தீர்த்தங்கரர் (தனித்துவிடப்பட்ட்சிலை

 


அரகந்தர் சிலை, பள்ளிப்புரம்





Location:   (13.243255, 80.258013)

 

Lies at 20 KMs From Puzhal jain temple


Arugar,

But known as the Ennaikara-Samiyar by the native villagers

 

This Tirthankara statue was found in the fields of Pallipuram, a place in Subbareddypalayam area. He sits below the sky, no roof is there. Therefore, he has been sitting in deep meditation for about a thousand years or more.. in the sun and rain.

Historians say that the statue of this Tirthankara belongs to the Chola period of Kulothunga I (1070).

This statue is proof of the religions such as Hinduism, Jainism, and Buddhism were respected and protected during his time. So they flourished simutaneously

The Tirthankara is seen sitting on the half-padmasana with a peaceful face in a meditative posture. The two Samaradharis are beautifully carved on both sides of the Tirthankara. The Prabhamandal is carved behind the Tirthankara's head, around it are the branches of the Ashoka tree and a triumbrella(Mukkudai) above his head. The hands are slightly damaged.

 

The villagers call this Tirthankara as Ennaikara-Samiyar...

There is a folk tale  is prevailing amoung the villagers.

 

A folk tale is told that; Once upon a time, an oil merchant was passing through this place. He died suddenly while he crossing the place. So they carved an idol was  worshipped since. Therefore, those who  visit to that place;   do not ask where the Tirthankara idol is, but rather, where the Ennaikara-Samiyar idol is located, to identifying the spot of the idol.












எண்ணை சாமியார் என்று அழைக்கப்படும் அருகர்.

 

எண்ணைச் சாமியார் எனப்படும் இந்தத் தீர்த்தங்கரரை சுப்பாரெட்டிபாளையத்தின் ஒரு பகுதியான பள்ளிபுரம் எனும் ஸ்தலத்தின் வயல்வெளியில் காண முடிந்தது. வானமே கூரையாக அமர்ந்துள்ளார் இவர். அதனால் வெய்யிலிலும் மழையிலும் சுமார் ஆயிரம் வருடங்களாக ஆழ்நிலைத் தியானத்தில் அமர்ந்து இருக்கின்றார்.

வரலாற்று ஆய்வாளர்கள் இத்தீர்த்தங்கரர் சிலை முதலாம் குலோத்துங்கச்(1070) சோழர்காலத்தைச் சார்ந்தவராக கூறுகின்றனர்.

அவர் காலத்தில் இந்து, சமணம், பெளத்தம் போன்ற மதங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்தன என்பதற்கு சான்று இச்சிலைவடிவம். அதனால் சமகாலத்தில் அவை வளர்ச்சியடைந்துள்ளன என்பது வரலாறு

 

தீர்த்தங்கரர் சாந்த முகத்துடன் தியானக் கோலத்தில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தபடி காணப்படுகின்றார். சாமரதாரிகள் இருவரும் தீர்த்தங்கரரின் இருபுறமும் அழகாக வடிக்கப்பட்டுள்ளனர். தீர்த்தங்கரரின் தலைக்குப் பின்புறம் பிரபா மண்டலமும், அதைச் சுற்றி அசோக மரத்தின் கொடிகளும், அவர் சிரசிற்கு மேலே முக்குடையும் செதுக்கப்பட்டு உள்ளது. கைகள் சிறிதளவு சிதலம் அடைந்த நிலையில் உள்ளது.

 

கிராம மக்கள் இந்தத் தீர்த்தங்கரரை எண்ணைக்காரர் சாமியார் அழைக்கின்றனர்... அதற்காக செவிவழி வழியாக கூறப்படும் கதை ஒன்று அக்கிராம மக்களிடையே நிலவுகிறது.

 

ஒரு சமயம் ஒரு எண்ணை வணிகர் இவ்வழியே வந்து கொண்டு இருந்தாராம். அவர் திடீரென அவ்விடத்தில் இறந்து விடவே அவருக்கு சிலைஎழுப்பி வழிபடுவதாகக் ஒரு பாமரக் கதையொன்று கூறப்படுகிறது. அதனால் அவரை தரிசிக்கச் செல்பவர்கள் தீர்த்தங்கரர் சிலை என்று கேளாமல், எண்ணைச்சாமியார் சிலை எங்கேயுள்ளது என்று வினவினால்ல் உடன் சிலையுள்ள ஸ்தலத்தை அடையாளம் காட்டுவர்.








Courtesy:  Mr. Bharat and Mr. Nemiraj - Puzhal.



Wednesday, March 19, 2025

Mogappair Digamber Jain temple - முகப்பேர் திகம்பர் ஜினாலயம்

 ஸ்ரீ 1008 சந்திரப்பிரப தீர்த்தங்கரர் ஜினாலயம்.



Location: Mogappair West, Chennai. With Coordination of (13.086, 80.174)

Address: Sri Chandraprabhu Thirthankar Jinalayam, Vellala Street, Mogappair West, Chennai (Tamil Nadu), India, Pincode : 600037

 

முகவரி: ஸ்ரீ சந்திரபிரபு தீர்த்தங்கர் ஜினாலயம், வெள்ளாள தெரு, மொகப்பேர் மேற்கு, சென்னை (தமிழ்நாடு), இந்தியா, பின்கோடு: 600037


Shri CHANDRNATHAR MAIN DEITY  -  ஸ்ரீ சந்திரநாதர் மூலவர்  



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



 

சென்னை முகப்பேரில், 10வது தீர்த்தங்கரரான சந்திரபிரபுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமணக் கோயிலான ஸ்ரீ சந்திரபிரபு தீர்த்தங்கர் ஜினாலயத்தைக் காணலாம், மேலும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் சிலைகள் உள்ளன.

இடம்: மொகப்பேர் மேற்கு, சென்னை.

மொகப்பேர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீ சந்திரபிரபு தீர்த்தங்கர் மற்றும் யக்ஷி ஸ்ரீ ஜ்வாலமாலினி ஆகிய தெய்வ உருவங்களின் கிரானைட் கல் சிலைகள் இந்த கோயிலில் உள்ளன.

இந்தச் சிலைகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது, ஸ்ரீ சந்திரபிரபு சிலை தோராயமாக 1000 ஆண்டுகளுக்கும் மேலானது.

சமணக் கோயிலுக்கு மிக அருகில் ஸ்ரீ சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

 







In Mogappair, Chennai, you can find the Sri Chandraprabhu Thirthankar Jinalayam, a Jain temple dedicated to Chandraprabhu, the 10th Tirthankara, and features stone idols discovered in the area.

Location: Mogappair West, Chennai. With Coordination of (13.086, 80.174)

Dedicated to: Chandraprabhu Tirthankara, the 10th Tirthankara of Jainism.

The temple houses granite stone idols of Chandraprabhu Tirthankar and Yakshi Jwalamalini, which were discovered in Mogappair area.

History: The idols are believed to be ancient, with the Chandraprabhu idol being approximately more than 1000 years old.

Very near to the jain temple a Sri Santhana Srinivasa Perumal Koil is also be there.

 






Monday, March 10, 2025

Bhagawan chinthamani Partswanathar Jain temple , puzhal - பகவான் சிந்தாமணி பார்ஸ்வநாதர் ஜினாலயம் - புழல் -



 ஸ்ரீ 1008 பார்ஸ்வநாதர் ஜினாலயம் 

புழல்.



View through Google map : (13°09'50.9", 80°12'21.5)



Bhagavan Chintamani Parswanathar Digambara Jinalayam, Lakshmi Ammal Temple Street, Puzhal, Chennai (Tamil Nadu)

Village/City: Puzhal, District: Chennai, State: Tamil Nadu, Country: India, Pincode: 600066

View through Google map : (13°09'50.9", 80°12'21.5)


தமிழகத்தில் இடம்: 

பகவான் சிந்தாமணி பார்ஸ்வநாதர் திகம்பர ஜினாலயம், லட்சுமி அம்மாள் கோயில் தெரு, புழல், சென்னை (தமிழ்நாடு)

கிராமம்/நகரம்: புழல், மாவட்டம்: சென்னை, மாநிலம்: தமிழ்நாடு, நாடு: இந்தியா, பின்கோடு: 600066.



 


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 




ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Features:


Famous for its prison.

Located on the banks of Puzhal Lake.

Rail: Chennai Central Railway Station

Bus Station: Koyambedu, Central Bus Stand.

Flight: Chennai International Airport. Meenam Pakkam.


சிறப்புகள்:


சிறைச்சாலைக்கு பெயர் பெற்றது.

புழல் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.

ரயில்: சென்னை மத்திய ரயில் நிலையம்

பஸ் நிலையம்: கோயம்பேடு , மத்தியப் பேருந்து நிலையம்.

விமானம்: சென்னை சர்வதேச விமான நிலையம். மீனம் பாக்கம்.








இந்த ஜினாலயம் ஒரு சமவசரண வகை கருவறையைக் கொண்டுள்ளது, அதில் நான்கு பக்கங்களிலும் ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரர் கல் உருவங்கள் கந்தக்குடியில் பிண்டி மரநிழலில் வைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் கோயிலில் பஞ்ச பரமேஷ்டி, ஸ்ரீ பார்ஸ்வநாதர், ஸ்ரீ மகாவீரர் தனி கருங்கல் உருவச்சிலைகள் உள்ளன;

ஸ்ரீ பிரம்மதேவர் மற்றும் ஸ்ரீ பத்மாவதி யக்ஷி ஆகியோரின் கருங்கல் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.


This Jinalayam has a Samavasaran type sanctum sanctorum, in which stone images of Sri Parswa Tirthankara are placed on all four sides in the shade of a Pindi(Ashoka) tree in Kandhakkudi.

 

The temple also has separate granite images of Pancha Parameshti, Sri Parshvanatha, Sri Mahavira;

Granite images of Sri Brahmadev and Sri Padmavathi Yakshi are also placed.










புழல் பகுதியின் வரலாறு

 

தொண்டை மண்டலம் சங்ககாலத் தமிழகத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

தொண்டைமான் இளந்திரையன் இந்நாட்டின் சங்ககால அரசன். பின்னர் சோழர்கள் கைப்பற்றினர்.

பின்னர் நான்காம் நூற்றாண்டிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் நாடாகத் திகழ்ந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூற்று.

 

பல்லவப் பெருவேந்தர்கள் காலத்தில் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் திகழ்ந்தன. மகேந்திர பல்லவன் தொடக்கத்தில் சமண சமயச் சார்புடையவனாகத் திகழ்ந்து, பின்பு சைவ சமயத்திற்குப் பேராதரவு அளித்தான்என்பதை இலக்கியங்கள், கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

 

தொண்டைமண்டலத்தை குறும்பர்கள் ஆண்டபோது, ​​புழல் கோட்டம், புலியூர் கோட்டம், வேலூர் கோட்டம், படுவூர் கோட்டம் என 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. புழல் மற்றும் புலியூர் கோட்டத்தின் கீழ் இன்று மெட்ராஸ் என்ற பகுதி வந்தது. திருவொற்றியூர், புழல், அயனாபுரம் ஆகியவை முன்பும், மயிலார்பில், எழுமூர், பூந்தமல்லி, பல்லாவரம், தாம்பரம் ஆகியவை பின்னாலும் இருந்தன.

தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் 'பள்ளிச்சந்தம்' என்பது சமணப் பள்ளிகளுக்கென (சமணர் வழிபடும் கோயில்கள்) விடப்பட்ட வரியில்லாத நிலங்களாகும். அரசர்கள் சார்ந்துள்ள சமயம் எதுவாய் இருந்தாலும் பிறசமயக் கோயில்களுக்கும் ஆக்கம் கொடுத்தனர்.


Thondai Mandalam was a part of Tamil Nadu during the Sangam(spanned from 300 BCE to 300 CE.) period.

Thondaiman Ilandhiraya was the Sangam king of south India. Later, the Cholas conquered it.

Later, historians say that Kanchipuram was under Pallavas, who ruled from the fourth century to the ninth century.

 

During the time of the Pallava kings, Buddhism, Jainism, Saivism, and Vaishnava were the religions. It can be known from literature and inscriptions that Mahendra Pallava was initially a follower of Jainism and later gave great support to Saivism.

 

During the rule of the Kurumbars, Thondai Mandalam was divided into 24 parts, namely Puzhal Kottam, Puliyur Kottam, Vellore Kottam, and Paduvur Kottam. The area called Madras today came under Puzhal and Puliyur Kottam. Thiruvottriyur, Puzhal, and Ayanapuram were in the front, and Mayilarupil, Egmore, Poontamally, Pallavaram, and Tambaram were in the back.

 

Like Devadanam and Brahmatheyam, 'Palli Chandam' were tax-free lands left for Jain temples (temple worshipped by sadhus). The kings, regardless of their religion, also gave construction to temples of other religions.












videos


காணொலி 1







***