Wednesday, May 14, 2014

AGALUR - அகலூர்

'


Sri Adhinathar Jain Temple - ஸ்ரீஆதிநாதர் ஜினாலயம் 





Front View  -  முன்புற தோற்றம்  

Location: click here

Map for Jain pilgrimage centres:   Click    AGALUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

Tindivanam  Nattarmangalam  panappakam  aviyur  Agalur:  Total = 23 k.m.

Gingee Nattarmangalam  panappakam  aviyur Agalur:  Total = 14.5 k.m.

Desur  Chitharugavur  Thondur  Agalur: Total = 16.5 k.m.


செல்வழி:

திண்டிவனம் நாட்டார்மங்கலம்  பனப்பாக்கம்  அவியூர்  அகலூர் 23 கி.மீ.

செஞ்சி  நாட்டார்மங்கலம்  பனப்பாக்கம்  அவியூர்  அகலூர் 14.5 கி.மீ.


தேசூர்  சித்தருகாகவூர்  தொண்டூர்-அகலூர் 16.5 கி.மீ.




ANTIQUITY :

Before the birth of Christ Jains were lived the ancient village. Ancient jinalaya built by  Nanthivarma Pallava in eighth century, a stone inscription was laid in the adjacent lake and Stone beds are also there.  After several years this was demolished. After few century the present  temple was built in 16 th century , the Jina Kanchi Mutt also established by that time .



தொன்மை :

அருகிலுள்ள தொண்டூர் கல்வெட்டின் மூலம் கி.பி. க்கு  முன்பே அகலூரில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவ்வூர் எரிக்கு அருகில் உள்ள பாறையில் கற்படுக்கைகள் உள்ளன.  அங்குள்ள நந்திவர்ம பல்லவர் காலத்திய இரு கல்வெட்டுகளில்; ஒன்றில் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் ஜிநாலயம் ஒன்று இருந்ததாக செய்தியுள்ளது.  அந்த ஜிநாலயம் அழிந்து விட்டபின் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் இவ்வாலயம் நிறுவப்பட்டுள்ளது. அப்போதிருந்த மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்தின் தோற்றத்திற்கு பின், கீழ்திசை நோக்கிய தற்போதைய ஜினாலயம் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது(நன்றி: தொண்டைநாட்டுச் சமணக்கோயில்கள்.)


MAIN DEITY
 -  
மூலவர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 




 Open
 corridor views - திருச்சுற்று தோற்றங்கள்




LEFT SIDE -  இடதுபுறம்


RIGHT SIDE  -  வலதுபுறம் 
 




LAYOUT:

East facing Sri Adhinathar is in sancturm santorium. Artha mandap  maha mandap  and fortified corridor is the layout. A manasthampa , balibeedam (altar)garden and a well are in the corridor. On the southern side of corridor Shri Padmavathy deity and on the northern Shri Kshethrabalagar deity were there.  Apart from the deities Thirthangars, yakshas and yakshis alloy metal idols also kept inside.


அலய அமைப்பு :

கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகிய பகுதிகளை கொண்டது. ஸ்ரீஆதிநாதர் மூலவராக கொண்ட இவ்வாலயத்தின் தெற்கில் ஸ்ரீபத்மாவதி சன்னதியும், வடக்கில் ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் உள்ளன. நுழைவாயிலை கடந்தவுடன் பலிபீடமும், மனதூய்மை கம்பமும் உள்ள்து. மற்றும் பிரஹாரத்தின் வடபுறம் நந்தவனம், கிணறு போன்றவை உள்ளன. மேலும் இக்கோவிலில் தீர்த்தங்கரர்கள், யக்ஷண், யக்ஷி மற்றும் பல அழகிய உலோகப்படிமைகளும் உள்ளது.



Festivals:

  In addition to the daily pooja; special festivals like, third day of  thai tamil month, Yugathi, Akshaya thrithi urchav is celebrated every year. On Yugathi festival Shri Padmavathy deity cart festival, and in Navarathri Shri Saraswathy nine day festival is specially celebrated by  native jain families.

திருவிழாக்கள்:

நித்திய பூஜா தவிர ஆண்டுதோறும் காணும் பொங்கல், தெலுங்கு வருடபிறப்பு, அக்ஷய திரிதியை  ஆகிய நாட்களில் உற்சவமும், யுகாதி அன்று ஸ்ரீபத்மாவதி அம்மன் திருவிழாவும், நவராத்திரி நாட்களில் ஸ்ரீசரஸ்வதி கொலு மண்டப விழா போன்றவை இவ்வூரிலுள்ள 20 குடும்பங்கள் ஓன்று சேர்ந்து கொண்டாடுகின்றனர்.







Sri Padmavathy Goddess -  ஸ்ரீ பத்மாவதி தேவி 





Shri BRAHMADEVAR -  ஸ்ரீ பிரம்மதேவர் 






SHRI NAVADEVATHA  -  ஸ்ரீ நவதேவதா 






1 comment: