Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Map for Jain pilgrimage centres: Click THAYANUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Tindivanam → Gingee → Melmalaiyanur- Thayanur - Total = 48 k.m.
Villupuram → Gingee → Melmalaiyanur– Thayanur - Total = 59 k.m
Tiruvannamalai → Avalurpet → Melmalaiyanur - Thayanur - Total = 33 k.m.
Vandavasi → Chetpet → Melmalaiyanur– Thayanur - Total = 52 k.m.
செல்வழி:
திண்டிவனம் → செஞ்சி → மேல்மலையனூர்- தாயனூர் = 48 கி.மீ..
விழுப்புரம் → செஞ்சி → மேல்மலையனூர்-தாயனூர் = 59 கி.மீ..
திருவண்ணாமலை→அவலூர்பேட்டை →மேல்மலையனூர்–தாயனூர் =33கி.மீ.
வந்தவாசி → சேத்பட் → மேல்மலையனூர்-தாயனூர் = 52கி.மீ..
Shri ADHEESWARAR - ஸ்ரீ ஆதீஸ்வரர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம்
அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து
நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா
புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும்
84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன்,
சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர
பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து
கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம்
அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி
மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
CIRCUITOUS CORRIDOR - ஆலய திருச்சுற்று
References from the Mackenzie fossil collection Shri Varthamanacharya was abbot of the Thayanur jain mutt then the Gingee King destroyed by persecution.
In another fossil of Mr.Kankeya Udaiyar, he gone to Karnataka, he accompany with Rev. Veesenachariyar he change many in the path of Jainism by giving initiation to the local habitants and the details mentioned . With this in AD 15th century is the age of the Jain temple has revealed. The place is known by the inscription by transfering land to the Melcittamur mutt.
East facing Jinalayam has Shri adhinathar as Main deity is very old one seems to belong to 12 / 13 th century. Now it is beautifully transformed into a completely new look. Many metal images, and in the northeast of the corridor sri Dharmat devi, Shri Patmavati Devi, Shri Brahmmatevar shrines were in position. and Navagraha ; Planets is on a platform.
=====
மெக்கன்ஸி சுவடித் தொகுப்பிலிருந்து வர்த்தமானாச்சாரியார் என்பவர் தாயனூர் மடாதிபதியாக திகழ்ந்தார், பின்னர் செஞ்சிமன்னன் துன்புறுத்தியதால் அம்மடம் அழிந்து போனதாக குறிப்பு உள்ளது. மேலும் மற்றொரு சுவடியில் காங்கேய உடையாரைப் பற்றியும், அவர் கர்நாடகம் சென்றதைப்பற்றியும், அங்கிருந்து வீரசேனாச்சாரியாரை அழைத்து வந்து பலருக்கு தீட்சை கொடுத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு கி.பி. 15 ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமணம் இவ்வூரில் இருந்தது தெரிய வருகிறது. மேல்சித்தாமூர் மடத்திற்கு இவ்வூரிலிருந்து நிலம் வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
DEITIES - சிலைகள்
No comments:
Post a Comment