Saturday, June 28, 2014

VEERANAMUR - வீரணாமூர்

Shri ADHINATHAR JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 




Location Mapclick here

Map for Jain pilgrimage centres:   Click    VEERANAMUR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:



Tindivanam →  Vellimedupettai →  Viranamur - 2 4 k.m.

Gingee →  Nattarmangalam →  Viranamur-    21 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Viramur -   31 k.m.

Chetpet →  Valathy →  kalavay →  Agalur →  Viranamur – 38 k.m


செல்வழி:

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →  வீரணாமூர் - 24 கி.மீ.

செஞ்சி →  நாட்டார்மங்கலம் → வீரணாமூர் - 21 கி.மீ..

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →  வீரணாமூர் – 31.5 கி.மீ.

சேத்பட் →  வளத்தி →  கலவை →  அகலூர் →  வீரணாமூர் - 38 கி.மீ.




SHRI ADHINATHAR DEITY  -  ஸ்ரீ ஆதிநாதர் மூலவர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




circuitous corridor  -  ஆலய திருச்சுற்று 








In ancient days Veeranamur has the name of Panditha chozhanallur, which is inscribed on a stone of 1168 age. The author of Sudamani Mandalapurudar was lived in that village. South facing jain temple has Shri Adinathar in sanctum santorium,  Shri Bahubali, shri Parshwanathar metal idols and Shri Jwalamalini, Shri Dharmadevi, Shri Padmavathy goddess also fastened in the Corridor.


சமண சமயத்தின் முக்கிய ஊராக பண்டித சோழநல்லூர் என்ற பெயரில் கி.பி.1168 -ல் வழங்கப்பட்டதாக கல்வெட்டின் மூலம் அறியலாம். சூடாமணி என்ற நிகண்டின் ஆசிரியர் மண்டலபுருர் அவ்வூரில் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்தின் தலைமை பீடாதிபதிகளாக சின்னக்குழந்தை  சுவாமி, விமலநாத சுவாமி, அப்பாவு சுவாமி ஆகியோர் தோன்றிய பெருமை இவ்வூருக்கு உண்டு. 1915 ம் ஆண்டு அப்பாவு சுவாமியார் அவர்கள் அம்மடத்தை பெரிய அளவில் உருவாக்கியவர் அவார்.

அவ்வூரில் பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பல பஞ்ச கல்யாணங்களைக் கண்ட ஜிநாலயமானதால், பழமைக்கான சான்றுகள் மறைந்துள்ளன.

ஸ்ரீஆதீஸ்வரருக்கு அர்ப்பணிக்கபட்ட இவ்வாலயம் தென்திசை நோக்கி உள்ளது. தற்போது மிகவும் குறைவான  எண்ணிக்கையில் சமணர்கள் வசித்தாலும் இவ்வூர் ஆலயம் நன்கு சீரமைக்கப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதுகருவறை வேதிகையில் சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் கருங்கல் சிலையாக வடிக்கப்பட்டு கம்பீரமாக அமர்ந்துள்ளார். கருவறையின் மேற்பகுதி இருதள விமானத்தால் மூடப்பட்டு கலசத்துடன் காட்சி தருகிறது. முதல் தளத்தில் அமர்ந்த நிலையில் ஜினரின் உருவங்களும், மேற் தளத்தின் கீரீவப்பகுதியில் நின்ற நிலையில் ஜினரின் சிலைகளும், சாமரைதாரிகளுடன் சுதையால் வடிக்கப்பட்டு அலங்கரிக்கின்றன.

அர்த்தமண்டபத்தின் நடுவே தினபூஜை மேடையில் ஸ்ரீஆதிநாதரின் சிறிய கற்சிலை உள்ளது. இருபுற மேடைகளில் உலோகச்சிலைகளால் ஆன மற்ற தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீப மாதிரிவடிவம் , பஞ்சபரமேஷ்டி, நவதேவதா, மற்றும் யக்ஷ, யக்ஷிகள் அலங்கரிக்கின்றன. மகாமண்டபமும் வெளியே முகமண்டபமும் அமைத்து வேதிப்பகுதி முடிவடைகிறது.
ஆலயத்தின் திருச்சுற்றில் அழகிய பலிபீடமும், நெடிய, அழகிய வேலைப்பாடுடன் கூடிய பீடத்தில், மனத்தூய்மைக் கம்பமும் நாற்புரம் ஜினர்களின் புடைப்புச் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் பெரிய பழைய மூலவர் சிலை அமர்ந்த நிலையில் சிறிய மண்டபத்தில் உள்ளது. மேலும் மேற்றிசை நோக்கி ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி சன்னதிகள் அமைக்கப் பட்டுள்ளது.

ஜிநாலயத்தில் நித்ய பூஜை, மற்றும் விசேஷ பூஜைகளுடன் நந்தீஸ்வர தீப பூஜை, முக்குடை, அக்ஷய திரிதியை, நவராத்திரி, சரஸ்வதி பூஜைகள் வளமைபோல் அந்தந்த காலத்தில் நடைபெற்று வருகிறது.

INTERIOR VIEW  -  உள்  தோற்றம் 






No comments:

Post a Comment