Shri ANANTHANATHASWAMY KSHETHRAM -- ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமி க்ஷேத்ரம்
Location Map : click here
Map for Jain pilgrimage centres: Click VARADOOR on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE: for Kalpetta head quarter of Wayanad
Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta = 516 kms
Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms
Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms
Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms
Then
Kalpetta - mananthavady/ road - Varadoor = 20 kms.
செல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - மானந்தவாடி சாலை - வரதூர் = 38 கி . மீ .
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பேட்டா - மானந்தவாடி சாலை - வரதூர் = 38 கி . மீ .
Main deity - மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள்
உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா
யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து
700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து!
நமோஸ்து! நமோஸ்து!
Open corridor - ஜினாலய திருச்சுற்று
The temple is situated on the roadside
of Meenangadi-Panamaram road at Varadoor. The temple constructed and
Panchakalyan held in 1977. The Main
deity Shri Anandhanadhaswamy is made in Karkala, Karnataka. The temple was
originally situated at Arapathe, and then to Kottavayal, and from there again
shifted to Varadoor in 1964. Temple was constructed under the leadership of
Late Shri. Vardhamana Gowder and present idol was installed in 1964. New
chandrasala was constructed in 1997.
A copper inscription made Jaladhara
peeda is in the temple for mentioning the contributions of idols, pooja
vessels, etc. from Karkala, Karnataka about 400 years back.
Shri Anandanadhaswamy is in the sanctum
sanctorum.
Though it is situated in Kerala. All the
idols of God, Goddess, demi-gods, Symbols, layout and way of rituals and
customs are the replica of Karnataka. A separate priest is appointed for the
Poojas and rituals. All the Jain temples are in the same layout in Wayanad area, ie chandrasala, Manasthampa, altar, Front
mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor
with Naga, Kshetrabalagar shrine r were there.
V.K. Vardhamana Gowder Auditorium
constructed in 2012. A trust is managing the temple.
These temples are the living testimony of the
cultural heritage of Wayanad.
Contact No. 04936 289930.
VV. Jinendra Prasad - +91 9447849618.
*******
மானந்தவாடி - பனமரம் சாலையில்
வரதூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1977 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஜிநாலயத்திற்கு
பஞ்ச கல்யாணம் நடந்து முடிந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்காளா என்னும் இடத்திலிருந்து
சலவைக்கல்லால் ஆன ஸ்ரீஅனந்தநாத ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில்
ஆரபதி என்னும் இடத்திலும், பின்னர் கோட்டவயல் என்னும் இடத்திலும் இருந்துள்ள இந்த ஜிநாலயம்
தற்போதுள்ள வரதூருக்கு 1964ம் ஆண்டு இடம் பெயர்ந்துள்ளது. திரு. வர்த்தமாண கவுடர் அவர்களால்
தலைமை ஏற்று நடத்தி வரப்பட்ட இவ்வாலயம் 1964ம் ஆண்டு புதிய மூலவரும், 1997ம் ஆண்டு
சந்திர சாலையும் கட்டப்பட்டுள்ளது.
நானூறு ஆண்டுகளுக்கு முன்னர்
கார்காளா, கர்நாடகாவிலிருந்து உலோகச் சிலைகளும், பூஜை செய்யும் பாத்திரங்களும் காணிக்கையாக
தரப்பட்ட செய்தி இவ்வாலயத்தில் உள்ள ஒரு செப்பேட்டின் மூலம் அறியமுடிகிறது.
ஸ்ரீஅனந்தநாத ஸ்வாமி மூலவராக அமர்ந்து அருள் பாலிக்கிவறார்.
ஆலயத்தின் அமைப்பு , மூலவர்
நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள்,
ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின்
வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம்,
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி
போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன்
இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின்
கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.
தொடர்பு எண்: . 04936 289930.
VV. ஜினேந்திர பிரசாத் - +91 9447849618.
INSIDE TEMPLE -- ஆலய உட்தோற்றம்
No comments:
Post a Comment