Shri CHANDRAPRABANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ சந்திரபிரப நாதர் ஜினாலயம்
Location map:
VIJAYAMANGALAM lies on the Google map in the
coordination of (11.24387, 77.50427) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click VIJAYAMANGALAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Puduchery → uludurpet → attur → erode → Vijayamangalam = 309 kms
Trichy → Karur → kodumudi → Perundurai →Vijayamangalam = 163 kms
Madurai → Dindigal → Dharapuram → k.chettipalayam →Vijayamangalam = 200 kms
செல் வழி :
சென்னை → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →விஜயமங்கலம் = 429 கி.மீ.
புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →விஜயமங்கலம்= 309 கி.மீ.
திருச்சி → கரூர் → கொடுமுடி → பெருந்துறை →விஜயமங்கலம் = 163 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → தாராபுரம் → கே.செட்டிபாளையம் →விஜயமங்கலம் = 200 கி.மீ.
சென்னை → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →விஜயமங்கலம் = 429 கி.மீ.
புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர் → ஈரோடு →விஜயமங்கலம்= 309 கி.மீ.
திருச்சி → கரூர் → கொடுமுடி → பெருந்துறை →விஜயமங்கலம் = 163 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → தாராபுரம் → கே.செட்டிபாளையம் →விஜயமங்கலம் = 200 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
One of the ancient historical places,
the vijayamangalam belongs to 6th century AD. In the Kongus’twenty
four region it was the heart of Kurumbu reign.
It was ruled by the emperor KONGUVELIR.
He is not only a king also a Tamil scholar and poet. Perungathai , a literature
is written by him. He establish a Tamil Academy for Tamil language development,
the place is now called as Sangu vadam ( in ancient Sangu yidam). At that time a
research question was raised by a poet belongs to another Academy. King’s
servant-maid Shri Krithiyai gave the right reply to them. So this place was
also called as TAMIL MANGAI / MANGAI MANAGARAM ie Beloved Lady Town.
The Jain temple had two sections of Shri
Adheeswar thirthankar and Shri Chandrapraba thirthankar in one compus. But the
Shri Adheeswar temple was demolished over years and now the Shri Chandrapraba
statue was stolen by some miscreants.
In the front prayer hall five poets figues,
whose are the scholars of old Tamil academy and the Krithiyai the above
referred servantmaid were engraved. Inside the temple Shri Adheeswarar life time
events are engraved on the beams.
Also in the front Hall a inscription
reveals that the sister of Shri Samundarayan , the constructor of the
Gometeshwar statue in Shravanabelagola, was lived and took the fasting upto
death in the town.
According to the inscriptions in Pali and Tamil found on the pillars, a few Jain munis had attained mukthi here by fasting till death. The birth of Mahavira and his life is carved on the top as a panel.
A dance mandapam, dating back to the 13th Century, is another highlight. Now, all that remains of the ruined mandapam is a dance floor. The mythological beasts carved on the outer wall are believed to protect the sanctum sanctorum.
The temple boasts a unique
architecture. The dwajastamb, carved out of a single stone, can be seen from
afar and the images of the 24 Tirthankaras have been carved on the gopuram. The
temple, built by King Konguvelir, is an art lover's delight. The ornately
carved ceilings have images of dancing girls and flowers, and the pillars,
floral motifs. A side panel depicts the cycle of birth and death. A pregnant
woman, symbolising life, stands at one end and a reclining woman, depicting
death, on the other.
According to the inscriptions in Pali and Tamil found on the pillars, a few Jain munis had attained mukthi here by fasting till death. The birth of Mahavira and his life is carved on the top as a panel.
A dance mandapam, dating back to the 13th Century, is another highlight. Now, all that remains of the ruined mandapam is a dance floor. The mythological beasts carved on the outer wall are believed to protect the sanctum sanctorum.
Now the temple was undertaken by the
Archealogical survey of India and maintain by the State Government.
நெட்டை கோபுர கோவில்:
இவ்வூர் பண்டைக்காலத்தில் வரலாற்றுச்
சிறப்பு மிக்க நகரமாக விளங்கிற்று. கி.பி. 6 ம் நூற்றாண்டில் கொங்கு இருபத்து நான்கு
நாட்டினுள் குறும்பு நாட்டைச் சார்ந்திருந்தது.
கொங்கு நாட்டின் நடுவில் உள்ளது.
விஜயமங்கலத்தை தலைநகராக கொண்டு
கொங்கு வேளிர் என்ற ஜைனப் பேரரசர் ஆட்சிப் புரிந்து வந்துள்ளார். அவர் புலவராகவும் விளங்கியதால் பெருங்கதை என்ற பெருங்காப்பியத்தை
இயற்றியுள்ளார். தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் தொண்டு ஆற்றியுள்ளார். அதனை நிறுவிய
சங்கு இடம் தற்போது சங்கு வடம் என்று அழைக்கப்
படுகிறது. அக்காலத்தில் மற்றொரு தமிழ் சங்கமும்
இருந்துள்ளது. அச் சங்கத்தினர் எழுப்பிய
வினாவிற்கு சரியாக விடை பகர்ந்த அவ்வரசரின் பணிப் பெண் கிருத்தியை போற்றி புகழ்ந்ததை
கொங்கு மண்டல சதகம் பகர்கின்றது. அதன் காரணமாக
அந்நகரை தமிழ் மங்கை என்றும் மங்கை மாநகரம் என்றும் அக்காலப் புலவர்கள் போற்றியுள்ளனர்.
அக் கொங்கு வேளிர் அமைத்த அந்த
ஜிநாலயத்தில் உட்புறம் ஸ்ரீஆதிநாதருக்கும், ஸ்ரீ சந்திரப்பிரபருக்கும் ஆலயங்கள் அமைத்துள்ளார்.
வீரசங்காதப் பெரும் பள்ளி எனவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஸ்ரீஆதிநாதர் ஆலயம் சிதைந்து காணப்படுகின்றது.
ஆனால் தற்போது ஸ்ரீசந்திரப்பிரபரின் சிலை களவாட பட்ட நிலையில் வெற்று பீடத்துடன் உள்ளது. முன் மண்டபத்தில் மேற் சொன்ன தமிழ்ச் சங்கத்தில்
வீற்றிருந்த ஐந்து புலவர்களின் சிலைகளும் மற்றும் கிருத்தியை என்ற பணிப் பெண்ணின் உருவச்
சிலையும் அலங்கரிக்கின்றன. உள் மண்டபத்தில் மேற்புறத்தில் பகவான் விருப தேவரின் வாழக்கை
வரலாற்றுச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்து ஜிநாலயங்களில் எங்கணும் காண வியலாத
அரிய சிற்பங்களும். வரலாற்று சிறப்புகளும்
பெற்றுள்ள இத்தலம் தற்போது தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பிலும். தமிழக இந்து
அறநிலைய துறையினராலும் நிர்வாகம் செய்யப் படுகின்றது. இருப்பினும் அதன் சிறப்புகள் முழுவதும் வெளிக் காட்டபடாத நிலையில்
உள்ளது.
அவ்வாலயத்தில் முன் மண்டப கல்வெட்டு
ஒன்று, சரவண பெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலையை தோற்றுவித்த சாமுண்டராயன் தங்கை,
புல்லப்பை என்ற அம்மையார் இக்கோவிலில் சல்லேகனா (வடக்கிருத்தல்) விரதமிருந்து உயிர் விட்டார்கள் என்பதை தெரிவிக்கின்றது.
அழகிய வேலைப்பாடுள்ள
இவ்வாலயத்தின் துவஜஸ்தம்பம் ஒரே கல்லால் ஆனது. இருபத்து நான்கு ஜினர்களின்
உருவங்களின் சிற்பங்களை கொண்ட கோபுரம், நாட்டிய மாதர்கள் மற்றும் பூக்களுடன் கூடிய
சிற்பங்களால் அலங்கரிக்கும் தூண்களையும், சிற்ப நகாசு வேலைப்பாடுடன் உள்ள
மேற்கூரையை கொண்ட மண்டபங்கள் இந்த ஜினாலயத்தை அழகு படுத்து கின்றன. கொடுங்கைகளின்
உட்புறம் கருவுற்ற பெண்ணின் சிற்பமும், வயதான பெண்ணின் சிற்பகும் மற்றொரு புறம்
பிறப்பு, இறப்புகளை வெளிப்படுத்தும் முகமாக செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீமகாவீரரின்
வாழ்க்கை சரிதத்தில் சில நிகழ்வுகளை மேற்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் சில
சமண முனிகள் சல்லேகனா விரதமேற்று முக்தி பெற்றதை சித்தரிக்கின்றன.
பதிமூன்றாம்
நூற்றாண்டைச் சேர்ந்த நாட்டிய மண்டபத்தின் பல இடிபாடுகளுக்குப் பின் மேடை மட்டுமே காட்சியளிப்பது இதன் தொன்மைக்கு
சான்றாக உள்ளது.
புராணகாலத்து யாளி
போன்ற விலங்களின் சிற்பங்களை கொண்ட கருவறையின் வெளிச் சுவர்கள் அரணாக
அமைந்துள்ளது.
No comments:
Post a Comment