Tuesday, September 30, 2014

GOONAMPADI - கூனம்பாடி



Shri MALLINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ மல்லிநாதர் ஜிநாலயம் 





Goonambadi lies on the clicked map in the coordination of (12.42132, 79.52981) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூனம்பாடி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Thellar   GOONAMPADI = 29 k.m.

Gingee → Pennagar road → vedal → Kunnagampundi →  GOONAMPADI = 25 k.m.

Vandavasi → Tindivanam road  → Kunnagampundi road  GOONAMPADI = 18 k.m.

Villupuram → Gingee → Pennagar road vedal → KunnagampundiGOONAMPADI = 65 k.m.

Chetpet  → Mazhaiyur   → Desur turn → Desur (Thellar road) GOONAMPADI = 30 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு கூனம்பாடி  = 29கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் கூனம்பாடி  = 25 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → கூனம்பாடி  18 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி → பென்னகர்   வெடால்  கூனம்பாடி  = 65 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → தேசூர்   → தெள்ளாறு சாலை  
கூனம்பாடி  =  30 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி  திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Koonambadi,  a village in Vandavasi, about 18 kms.  in the southwest direction near Agarakorakottai. A beautiful, well-maintained Jinalaya built by the native jains, living several centuries ago. However, the Panchkalyan was celebrated 45 years ago, the frequent cleaning, regular colour washing, repairing and polished metal idols make the temple as new one.

The nineteenth Thirthankar Shri Mallinathar statue resides in the sanctum with eight features. That is crownd by two stages shikara and a kalash. In the Arthamandap a white marble made Shri Mallinathar statue, for daily rituals; 24 thirthankars stone made idol, metal idols of Thirthankars, Yakshas, Yakshis , Nandheeswara Dheepam, Maha meru models are arranged on a dias. Muga mandap comprises of Shri Dhrmadevi shrine and multicolored art pictures.

East facing entry and compound wall are surrounded the corridor. An altar and a tall Manasthamp has thirthankars engravings on four sides of bottom and a vimanam with four statues of Shri mallinathar on the top.

Regarding Poojas: Daily pooja, Nandheeswara pooja, margazhi month Mukkudai and special Poojas are conducted regularly.

Annually a procession festival  celebrated on the day of Akshaya thirithiyai for Shri Ananthanathar idol.      



கூனம்பாடி என்னும் கிராமம், வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் (அகரகொரக்கோட்டைக்கு அருகில்) மேற்கு திசையில் தெள்ளாறுகுன்னகம்பூண்டி சாலையில் 18 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த ஊரில் சமண இல்லறத்தார்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான சான்றே இவ்வாலயம் ஆகும். 45 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சகல்யாணம் செய்யப்பட்டிருந்தாலும் , தற்போது சீரமைக்கப் பட்டது போன்ற புது பொலிவுடன் பராமரித்து வருகின்றனர். அடிக்கடி வர்ணம் பூசுவதோடு மட்டுமல்லாது, புதிது போல் காணும் திருமேனிகளின் அணிவகுப்பும், பல சீரமைப்பு பணிகளும் சான்றுகளாக உள்ளது.

நிகழ்கால ஜினர்களின் வரிசையில் 19 வது தீரத்தங்கரரான  ஸ்ரீமல்லிநாதரை கருவறையில் மூலவராக  கொண்டு  விளங்குகிறது.  எட்டு சிறப்புகளையும் கொண்டுள்ள அவரது கற்படிமம் பல நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. கருவறையில் மேல் இரு அடுக்குகள் கொண்ட சிகரமும், மேற் கலசமும் பாங்காக அமைக்கப் பட்டுள்ளது.  அதற்கடுத்து  அர்த்த மண்டபம்; அதனுள் ஸ்ரீமல்லிநாதரின் வெண்பளிங்கு கல்லால் ஆன படிமம் நித்ய நியமங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலையும் , மற்றும் பல உலோக படிமங்களால் ஆன தீர்த்தங்கரர்கள் (பிரபையுடன்), யக்ஷன், யக்ஷி யின் திருவுருவங்கள், நந்தீஸ்வர தீபம், போன்ற சமண சமய விழாக்களுக்கு கேற்ற படிமங்கள் வரிசையாக மேடையில் வைக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தில்; சுவர்களில் வண்ண ஓவியங்களும், ஸ்ரீதர்மதேவி சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளது.

திறந்த வெளி திருச்சுற்றில் அழகிய பலிபீடமும், உயரமான மனத்தூய்மைக் கம்பம்: நாற்புரம் தீர்த்தங்கரர் உருவ சிற்பங்களுடனும், மேற்புர விமானத்தில் நான்கு திசையிலும்  ஸ்ரீமல்லி நாதரின் சிலைகளுடனும் அமைக்கப் பட்டுள்ளது. ஆலய  திருக்சுற்றுக்கு, கிழக்கு நோக்கிய நுழைவாயிலும், மதிற்சுவரும் கட்டப்பட்டுள்ளது.  மேலும் அழகிய நந்தவனமும் பராமரிக்கப்பட்டுள்ளது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜைகளும் வளமைபோல்  நடைபெற்று வருகின்றது. அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஅனந்தநாதர் திருவீதியுலா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.





Monday, September 29, 2014

KORAKOTTAI - கொரக்கோட்டை


Shri ADHINATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 




Location:  
lies on the Google map in the coordination of (12.39852, 79.51681) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click Korakottai
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கொரக்கோட்டை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Thellar  Korakottai = 27 k.m.

Gingee → Pennagar road → vedal → Kunnagampundi → korakottai = 29 k.m.

Vandavasi → Tindivanam road → korakottai = 15 k.m.

Villupuram → Tindivanam → Vandavasi road → korakottai = 68 k.m.

Chetpet  → Mazhaiyur   → Desur turn → Desur (Thellar road)→ korakottai = 30 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு →  கொரகோட்டை  = 27கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → கொரகோட்டை  = 29 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   →  கொரகோட்டை  15 கி.மீ.

விழுப்புரம் திண்டிவனம் → தெள்ளாறு  →  கொரகோட்டை  = 68 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → தேசூர்   → தெள்ளாறு சாலை  
→  கொரகோட்டை  =  30 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



பெரிய கொரக்கோட்டை எனவும் வழங்கப்படும் இச்சிற்றூர் வந்தவாசியிலிருந்து தென்மேற்கு திசையில் தெள்ளாறுதேசூர் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. (பல்லவ மன்னன் நந்திவர்மன் வடக்கே குருக்கோட்டையை வென்றதின் நினைவாக இப்பெயரிட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.) அங்கே பல நூற்றாண்டுகளாக சமண இல்லறத்தார்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நினைவூட்டும் வகையில், இவ்வாலயம் பல  ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.

கிழக்கு நோக்கிய வாயிலின் மீது ஐந்து தள கோபுரம்; தீர்த்தங்கரர்கள், கந்தர்வர்கள், கோபுரம் தாங்கிகள்  போன்ற சுதை பிம்பங்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஆலய திருச்சுற்றினை வளைத்து மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தென்கிழக்கில் கலச மண்டபம் முழுவதுமாக அடைக்கப்பட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது. ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள கிணற்றருகில் சிதிலமடைந்த ஸ்ரீபத்மாவதி சிலை ஒன்றுள்ளது. சுற்று முடிந்து கிழக்கில்துவஜமரத்துக்கான அடிபீடத்தில் காளைச் சிலை ஒன்று வைக்கப் பட்டுள்ளது. அடுத்து பலிபீடம், நெடிதுயர்ந்த மனத்தூய்மைக் கம்பம் நாற்புறம் ஜினரின் புடைப்பு சிற்பங்களுடன் அழகாக நிற்கிறது.

ஸ்ரீஆதிநாதர், எட்டு சிறப்பு அம்சங்களுடன் வடிக்கப்பட்ட கற்சிலை, பல நூற்றாண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதற்கான கல் வெட்டுகள் மறைந்து போய் விட்டது. அதனை அடுத்து அந்தராளம்அர்த்த மண்டபம் உள்ளது. அதில் பல உலோகச் சிலைகள் உள்ளன. குறிப்பிடும் படியாக அனந்த விரத நோன்பிற்கான 14 தீர்த்தங்கரர் படிமம், மகாமேரு, நந்தீஸ்வர தீபம், திரிகால தீர்த்தங்கரர்கள், ரத்தினத்திரய தீர்த்தங்கரர்கள், கணதரர், ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜ்வாலாமாலினி படிமங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. அதனை அடுத்து மகாமண்டபம் தெற்கு வடக்காக இரு வாயிலுடனும், உயரமான முக மண்டபமும் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
நித்ய பூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, விசேஷ பூஜைகள் அனைத்தும் வளமைபோல் நடந்து வருகிறது. மேலும் ஆடிவெள்ளிகாணும் பொங்கல் ரிஷபநாதர் திருவீதியுலா, அக்ஷய திரிதியை விழா போன்றவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.


தற்போது ஆலய திருப்பணி துரிதகதியில் நடைபெற்று வருவதால் ஆலய நிகழ்வுகள் அனைத்தும் பஞ்ச கல்யாணத்தை எதிர் நோக்கி யுள்ளன. 

நிர்கந்த முனிவர் அவ்வூரில் வாழந்துள்ளதற்கு சான்றாக, அவ்வாலயத்திற்கு வடக்கே சிறிது தொலைவில் சாமியார் பாறை என்றழைக்கப்படும் நிர்கந்தர் பாறையில் முனிவரின் இரண்டு பாதங்கள் பெரிய பாறை மீது செதுக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் கமண்டலம், பிஞ்சம்  கோடுகளாக வரையப்பட்டுள்ளன.  கிராமத்தார்கள் மழைப்பாறை என்று அழைக்கின்றனர். பூஜை செய்தால் மழை வரும் என்கின்றனர்.



Korakottai, called as Periayakorakottai village located 15 kms from Vandavasi in Thellar-desur road. A Jinalya is constucted by the native jains, living so long years in the village.

East facing entrance is crowned by five stages tower with Thirthankars, kantharvars and supporting giants cement made icons. Now the renovation work takes place, very soon the temple going to celebrate the Panchakalyan festivals. In the southeast a closed pavilion with doors, northside a broken idol of Shri Padmavathy is in the platform of the temple well. In front of vedi-block a bull is placed upon a stand, then an altar, a tall Manasthamp has four thirthankar sculptures engraved around the pillar.

An ancient stone-carved Shri Adhinathar statue embraces the sanctum. Then Arthamandapam has many alloy idols of Thirthankars, Yakshas, Yakshis and models of Nandheeswara dheep and Maha meru. Then a Maha mandapam has unusual opening on both side of north and south. There is a Muga mandapam also built, in front of the block.

Daily pooja, Nandheeswara Pooja and special poojas conducted regularly. Akshaya thirithiyai, Audivelli festival and Kanum pongal festivals celebrated annually. (However, there is a break for the ensuing panchakalyan festival).

A boulder with two footprints of Nirgantha muni is few meters north of the temple. Line drawings of Kamandalam, pincham also engraved near to it. It reveals that a Muni maharaj staying in the village long years back. They called as Mazhai Parai.