Saturday, September 13, 2014

ALAGRAMAM - ஆலகிராமம்


Shri ADHINATHAR JINALAYAM  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 






Map for Jain pilgrimage centres:   Click  Alagramam
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  ஆலக்கிராமம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  kutteripattu  →  Alagramam  =     18 k.m.

Villupuram →  kutteripattu → Alagramam   =   25 k.m.

Gingee →  Deevanur →  Alagramam   =  30 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Deevanur →  kutteripattu   →Alagramam   =  50 k.m.



செல்வழி:

திண்டிவனம் → கூட்டேரிபட்டு → ஆலகிராமம்   =  18 கி.மீ.

விழுப்புரம் → கூட்டேரிபட்டு → ஆலகிராமம்  =  25 கி.மீ.

செஞ்சி → கூட்டேரிபட்டு→ ஆலகிராமம்   =  30 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →   கூட்டேரிபட்டு →  ஆலகிராமம்  =  50 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

 
 
 

விழுப்புரம் மாவட்டம், மைலம் தாலுக்காவில் அமைந்துள்ள சிற்றூர் ஆலக்கிராமம்.  30 க்கும் மேற்பட்ட சமணக் குடும்பங்களின் நடுவே வடக்கு நோக்கிய வாயிலுடன் ஜிநாலயம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 600 ஆண்டுகளைக் கடந்த மூலவர் விமானத்தைக் கொண்ட  இவ்வாலயத்தில் அதற்கான சான்றுகள் பல முறை சீரமைப்பு செய்துள்ளதால் மறைந்துவிட்டது.

அரணுக்குள் அமைந்துள்ள திருச்சுற்றின் ஊள்ளே நுழைந்ததும் இடது புறம் பெரிய மண்டபமும், வலது புறம் மகா அபிஷேக மண்டபம் பல படிக்கட்டுகளுடனும் அழகாக காட்சி தருகிறது. அதன் பின் மகாமண்டபம் அதன் நடுவே துவஜ மரம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. பலிபீடமும், முக மண்டபமும், பல உலோக சிலைகள் அடங்கிய அர்த்த மண்டபம், உள்ளாலை, கருவறை சிகரத்துடன் காணப்படுகின்றது. அதன் நடுவே ஸ்ரீஆதிநாதர் எட்டு சிறப்புகளுடன் கம்பீரமாக அமர்ந்துள்ளார். அந்த கட்டிற்கு அடுத்த படியாக ஸ்ரீபிரம்ம தேவர், ஸ்ரீகூஷ்மாண்டினி சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.

தினமும் இருவேளை பூஜையும், நந்தீஸ்வர தீப பூஜையும், நவராத்திரி விழா போன்ற வற்றுடன் ஆண்டு தோறும் ஆடி மாத நந்தீஸ்வர நாட்களில் ((ஸப்தமி - பிரதமை)  ஸ்ரீ பார்ஸ்வநாஹ்ட ஜினரின் உலோகத்திருமேனிக்கு 10 நாட்கள் பிரம்மோற்சவமும் திருவீதியுலாவும், புத்தாண்டு போன்ற விசே திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆலயம் அவ்வூர் மக்களால் மிகவும் போற்றி பாதுகாக்கப் பட்டு வருகிறது.

 
 
 
 

Alagramam : a small hamlet in mailam taluk, Villupuram district. A north facing Jain temple was built more than 600 years ago. The antiquity of the temple was disguised by the frequent renovation work. More than 30 families were take care of the temple.
Sri Adhinathar resides in sanctum with viman; then arthamandap consists of metal idols of thirthankars, Yaksha, Yakshis, Meru, Nandeeswara temples model, sruthaskandam pattern;  Mugamandapam annex Mahamandapam with Thuvajasthampam (fine shaped) and altar were built.  Fully compounded fortified walls with North entry, circumbulance corridor. Mahaabishega mandapam is on the top of a platform with Vimanam connected with few stairsteps. Shri Brahmadevar and shri Dharmadevi shrines were separated from  the center block.
Daily twice pooja, Special poojas, Nandeeswara Pooja, Navarathri celebrations were conducted regularly. A 10 days Bramorchavam festival celebrated  every year. 


 
 
 
 


1 comment:

  1. Pls correct.
    MukhaMandap-am, not Mugamandapam
    DhwajaStambh-am, not Thuvajasthampam
    Brahmotsav-am, not Bramorchavam

    Note:The 'am' is added in Tamil pronunciation, not in sanskrit. Stambh is Stambham. Just like 'aa' sounds is added as suffix, eg. Ram is Rama in Tamil.

    ReplyDelete