Wednesday, September 17, 2014

ATCHIPAKKAM - ஆட்சிப்பாக்கம்


Shri PARSWANATHAR  ROCK  TEMPLE - ஸ்ரீபார்ஸ்வநாதர்  பாறைக் கோவில்




Map for Jain pilgrimage centres:   Click on ATCHIPAKKAM
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஆட்சிப்பாக்கம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  Markkanam road  →  Brammadesam →  Atchipakkam =     24 k.m.

Villupuram → Tindivanam → Markkanam road → Brammadesam → Atchipakkam =  61 k.m.

chennai →   Avanipur road, / before Tindivanam  → Avanipur →  Atchipakkam   =  124 k.m.

Vandavasi  → Maruvathur → Avanipur road, / before Tindivanam  → Avanipur 

                                                                                                                      Atchipakkam    =  61 k.m.



செல்வழி:

திண்டிவனம் → மரக்காணம் சாலை  → பிரம்மதெசம் → ஆட்சிப்பாக்கம்     =  24 கி.மீ.

விழுப்புரம் → திண்டிவனம் → மரக்காணம் சாலை→பிரம்மதெசம்→ஆட்சிப்பாக்கம் =  61 கி.மீ.

சென்னை → ஆவணிப்பூர் சாலை → ஆவணிப்பூர் → ஆட்சிப்பாக்கம்  =  124 கி.மீ.


வந்தவாசி →  மருவத்தூர் → ஆவணிப்பூர் சாலை → ஆவணிப்பூர் → ஆட்சிப்பாக்கம் = 61 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 

 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





திண்டிவனத்திற்கு 23 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் உள்ளது ஆட்சிப்பாக்கம். சோழர்கள் சமணர்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்த கி.பி. 9 ம் நூற்றாண்டில் இந்த பாறைச் சிற்பக் கோவில் தோன்றியிருக்கிறது. அதன் சிற்பக் கலையைக் காணும் போது அவ்வூரில் அநேக சமணர்கள் வாழ்ந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. ஆனால் தற்போது அருகில் ஒரு சமணக் குடும்பமும் வசிக்கவில்லை.

ஊருக்கு சற்று வெளியேயுள்ள பள்ளிக்கு பின் புறம், குன்றின் மேல் அமைந்துள்ள அச்சிற்பத் தொகுப்பில் பத்மத்தின் மேல் நிற்கும் ஸ்ரீபார்ஸ்வநாதர், தலை முதல் கால்வரை ஐந்து தலை நாகத்துடன் அழகாக காட்சி தருகின்றார். பொதுவாக அனைத்து இடங்களிலும் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. சராசரி மனிதன் உயரமுள்ள அச்சிற்பத்திற்கு வலது புறத்தில் ஸ்ரீதரணேந்திரன் வணங்கிய நிலையிலும், இடப்புறம் ஸ்ரீபத்மாவதி தேவியர் கையில் குடையுடன் காணப்படுகின்றார்.  அவருக்கு வலது மேலே கமடன் சினத்தை வெளிப்படுத்து முகமாக, எண்கரங்களுடன், நான்கு கரங்களில் பாறை ஒன்றினை சுமந்து வருவது போலவும், மற்ற இரண்டில் ஆயுதத்துடனும். மேலும் இரண்டில் பயமுறுத்தும் கோலத்துடனும் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். (மற்ற இடங்களில் இரண்டு, நான்கு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.) இடது மேல்புறம் தேவ அரசன் புஷ்பக விமானத்தில் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் எல்லைக்கடந்த பொறுமையும், சகிக்கிப்புத்தன்மையும் வெளிப்படுத்தும் முகமாக தத்ரூபமாக அமைத்து அவரின் அஹிம்சை யுணர்வை வெளிக்காட்டியதில் வெற்றி கொண்டுள்ளார்கள். இருப்பினும் பாறையின் உஷ்ண மாறுபாட்டால் அவர் உருவத்தில் இரு பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

பேராவூரைச் சேர்ந்தவர்களும் மற்றும் அருகில் உள்ளவர்களும், குன்றின் மேல் அமைந்த அப்பாறைச் சிற்பத்திற்கு கருவறையை அமைத்து   கதவிட்டு ஆலயம் போல் பாதுகாத்துள்ளனர். மேலும் அடிக்கடிச் சென்று பூஜை செய்தும், ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் தினத்தன்று திரளாக சென்று விசே அபிஷேக ஆராதனை செய்தும் வருகின்றனர்.
தென் இந்திய சமணர்கள் அடிக்கடி சென்று வருவது அவ்வாலயம் மேலும் அழியாமல் இருக்க ஏதுவாகும்.





Atchipakkam, a hamlet, 23 kms from Tindivam in the northeast direction. In the village a monolith rock sculpture was encraved on a hill in the 9th century of Chola period. During the period, it proves many Jains were lived near but no jains were there now.

The hill lies on the back of a School. Shri Parswanathar, standing posture of 5 feet, with five headed snake backed from top to bottom of the sculpture. On right bottom Shri Dharanendrar, Yaksha in a worshiping posture, left bottom Shri Padmavathy matha hold a long stick umprella. Right top Kamatan, eight handed figure try to hit with a huge rock on his four hands, two had some weapons, remaining two in threating posture, shows his enmity on Shri Parswanath. Left top King of devas on a flying viman shows his surprise on his face. Total cluster of the sculpture convey the patience and tolerance of Shri Parswa jinar. This reveals the Ahimsa consciousness to us. Two rifts are formed on the sculpture of Shri parswanathar, due to difference of tempture on the rock.

The nearby Peravur jain families and others were taken a step to built a structure to enclose the sculptures. It was safely locked. Every year on pongal day, these people conducting a special pooja to the Lord.

Frequent visit to the place by the south Indian jains should preserve the treasure.





No comments:

Post a Comment