Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Location:
Kallakulathur lies
on the map in the coordination of (12.13424, 79.64495
) ie put the
latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click Kallakulathur
(Tamil nadu & Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கள்ளகுளத்தூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
ROUTE:
Tindivanam → trichy road → mailam road → Kallakulathur = 16 k.m.
Villupuram → Chennai road → mailam road → Kallakulathur = 34 k.m.
Gingee → Deevanur → mailam road → Kallakulathur = 33 k.m.
Vandavasi → Vellimedupettai → Deevanur → mailam road → Kallakulathur = 50k.m.
செல்வழி:
திண்டிவனம் → திருச்சி சாலை → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 16 கி.மீ.
விழுப்புரம் → சென்னை சாலை → மைலம் சாலை →கள்ளகுளத்தூர் = 34 கி.மீ.
செஞ்சி → தீவனூர் → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 33 கி.மீ.
வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → மைலம் சாலை → கள்ளகுளத்தூர் = 50 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு தென்கிழக்கில்
16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கள்ளகுளத்தூர் கிராமத்தில் அருகில் உள்ள வீடூர்
போன்று மிகவும் தொன்மையான காலத்தில் சமணக் குடும்பங்கள் குடியேறியுள்ளனர். ஆனால்
பல ஆண்டுகள் கழித்து இவ்வாலயத்தை உருவாக்கி இருக்க வேண்டும். அதனால் அதன் அமைப்பு
300 ஆண்டுகளுக்குள் உள்ளதாக தோன்றுகிறது.
ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட கீழ்திசை நோக்கிய இவ்வாலயத்தில்
கருவறை, அர்த்த மண்டப ஆரம்ப மேடையில் பழைய மூலவர், 24 தீர்த்தங்கரர், நவதேவதை,
மானஸ்தம்பத்தின் ஸ்தூபியாக இருந்த நான்முக அமைப்பு (இடி விழுந்த காரணத்தால்), போன்ற
கற்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து
பல தீர்த்தங்கரர்கள் சிலைகள், யக்ஷ, யக்ஷிகள் போன்ற பல உலோக பிம்பங்கள் மேடையில்
வைக்கப் பட்டுள்ளது.
அடுத்து முகமண்டபமும், ஆலய நுழைவாயில், மதிற்சுவருடன்
அமைக்கப் பட்டுள்ள திருச்சுற்றின் ஆரம்பத்தில் ஸ்ரீபத்மாவதி தேவியின் தனி
சன்னதியும், முடிவில் நவக்கிரக மேடையும் உள்ளது. அதற்கருகில் ஆலய நிகழ்வுகள் அனைத்தும்
நடத்துவதற்கு ஏதுவாக ஒரு பெரிய மேடையும் அமைத்துள்ளனர்.
தின பூஜை,
விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர பூஜை, மற்றும் நவராத்திரி விழா, மார்கழி மாத முக்குடை,
அக்ஷய திரிதியை (ஆலய வலம் வருதல்), கன்னிப் பொங்கல் அன்று ஸ்ரீபார்ஸ்வநாதர்
திருவீதியுலா அனைத்தும் தொடர்ந்து நடைபெறுகிறது.மேலும் ஆலயத்திற்கு அருகில்
அமைந்துள்ள முனிவர் ஸ்ரீபரமஜின தேவரின் பாதங்களுக்கு விசேஷ பூஜையும் நடந்து
கொண்டிருக்கிறது.
Kallakulathur;
a small village 16 k.m.s from Tindivanam in Villupuram district. 600 years age
few jain families were migrated to that village. But they built a Jain temple
after 300 years stay. The temples shows such influences of features.
Lord
Adhinathar embraces the sanctum, next to it stone idols of thirthankar, 24
thirthankars cluster, navadevatha and old top portion of manastham (fallen by
lightning) were arranged on a platform. In addition few alloy idols of
thirthakars, Yakshas, Yakshis were seated.
No crowned
entrance of fortified corridor. At the beginning Shri Padmavathy matha shrine,
lastly Navagraha statues stand and a huge dias were built beautifully.
Daily
pooja, Special jain pooja and rituals; Navarathri festival, markazhi month
mukkudai series of light festival, Akshaya thrithiyai and Kanum pongal day
festival are celebrated regularly. A special pooja and rituals were conducted
for the footprints of Munivar. Paramajinadevar ie nearby to the temple.
No comments:
Post a Comment