Shri Adhinathar Jain Temple - ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்
Location:
lies on the Google map in the coordination of (12.16361, 79.635) ie put the latitude, Longitude on the search
box
Map for Jain pilgrimage centres: Click Kiledayalam
(Tamil nadu & Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கீழ்எடையாளம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
ROUTE:
Tindivanam → trichy road → Kiledayalam = 12 k.m.
Villupuram → Chennai road → Kiledayalam = 34 k.m.
Gingee → Deevanur → kutteripattu → Kiledayalam = 33 k.m.
Vandavasi → Vellimedupettai → Deevanur → kutteripattu → Kiledayalam = 54 k.m.
செல்வழி:
திண்டிவனம் → திருச்சி சாலை → கீழ்எடையாளம் = 12 கி.மீ.
விழுப்புரம் → சென்னை சாலை → கீழ்எடையாளம் = 34 கி.மீ.
செஞ்சி → தீவனூர் → கூட்டேரிபட்டு → கீழ்எடையாளம் = 33 கி.மீ.
வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூட்டேரிபட்டு → கீழ்எடையாளம்= 54 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
There is a Jinalaya at kizhedayalam, which was built in 15th century and got support from the king, during the period. At the beginning, the santum of Shri Adhinathar and arthamandap was built then the mahamandap and a pierced manastham, gopuram and Shri Brahmadevar shrine were structured. The antiquity of the temple evidences were destroyed at the time of renovations take place.
Shri Adhinathar resides in sanctum, in arthamandap Shri Kooshmandini statue, 24 thirthankar stone figures and alloy thirthankars, Jinavani, Shri Brahmadevar with goddess Poorna & Pushkala devis, etc. were stored.
In the northeast of corridor, a mandap and three Munivars rooms were constructed. In 16th century Shri Mallisenar, Shri Vamanacharior, Shri Vimalajinadevar were lived.
Daily pooja, Nandheeswara deep pooja were conducted regularly. On pongal day and Audi month special aradhana was conducted.
Old palm leafs of inscriptions, jain literatures and philosophy, were preserved in the temple. Few years back they deposit these at Mudibidri, Karnataka Jinalaya as Sidhandham. For remembrance of that incident on Yuhathi day, a Sidhantha feast was arranged and serves every year to the devotees.
Near to the temple adjacent to the lake inscriptions sankrit and figures of four footsteps, Kamandala, Book stand were engraved. It contains praising words of Shri Mallisenar and Shri Vamanacharior. Another inscription conveys the news of Shri Vimalajinadevar footsteps and bookstand.
*********
கி.பி. 15 ம் நூற்றாண்டில் ஸ்ரீஆதிநாதருக்கான ஜிநாலயம் ஒன்று இக் கிராமத்தில் தோற்று விக்கப் பட்டுள்ளது. அப்போதிருந்த அரசரின் தானங்களில் இவ்வாலயம் சிறப்புற்றுள்ளது. ஆரம்பக்காலத்தில் கருவறை, அர்த்த மண்டபத்துடன் இருந்து பின் காலங்களில் மகாமண்டபம், முக மண்டபம் மற்ற சன்னதிகள் தோன்றியுள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன் இவ்வாலயம் முழுவதுமாக புதுப்பிக்கப் பட்டதில் தொன்மைக்கான ஆதாரங்கள் பல அழிந்து விட்டன. இருப்பினும் 18 ம் நூற்றாண்டில் கோபுரமும், திருச்சுற்றில் உள்ள சன்னதிகளும், கருவறையின் விமானம் போன்றவை கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீஆதிநாதர் கருவறையில் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதர்மதேவி உருவ சிலையும் 24 தீர்த்தங்கரர் கற்சிலையும் உள்ளது. மேலும் தீர்த்தங்கரர் பலரது உருவங்கள், தரணேந்திரர், சர்வாண்ண யக்ஷன், கணதரர், ஸ்ரீபிரம்ம தேவர் தம் பூர்ண, புஷ்கலா தேவியர்கள்,ஜினவாணி போன்ற உலோகத்திருமேனிகள் பாதுகாக்கப் பட்டு வருகிறது. அடுத்து முகமண்டபமும். அதனுள் குடைந்து செல்லும் 35 அடி உயர மனத்தூய்மைக் கம்பமும் சிறப்பாக அமைத்துள்ளனர். அதன் தென் புறத்தில் ஸ்ரீபிரம்மதேவர் சன்னதியும் அமைந்துள்ளது. வடகிழக்குப்பகுதியில் மண்டபமும், அதில் மூன்று முனிகள் வாசம் செய்த அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வறைகளில் மல்லிசேனாச்சாரியார், வாமனாச்சாரியார், விமல ஜினதேவர் போன்றோர் தவநெறி பூண்டு ஒழுகி யுள்ளனர்.
நன்கு பராமரிக்கப் பட்டு வரும் இவ்வாலயத்தில் தின பூஜை, நந்தீஸ்வர பூஜை போன்றவையும், பொங்கலன்றும், ஆடிமாதம் பக்தாமர ஆராதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் யுகாதி தினத்தன்று முனிவாசத்தில் வசித்து வந்த மூன்று ஆச்சார்யார்கள் குருவரர்களுக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகின்றது.
அவ்வூரின் ஏரிக்கரையில் சித்தர் பாறை ஒன்றுள்ளது. அதில் நான்கு பாதங்கள் இரு கமண்டலங்கள், இரு சாமரங்கள், புத்தக தாங்கி (சிக்கு பலகை) போன்ற உருவங்கள் வட்டவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றை சுற்றி மல்லி சேனருக்கும், வாமனருக்கும் வணக்கம் செலுத்தி வடமொழியில் கல்வெட்டும் உள்ளது. சற்று தொலைவில் ஸ்ரீவிமல ஜினரது பாதங்கள், புத்தகத் தாங்கியும் வடமொழி கல்வெட்டும் உள்ளது, அத்திருவடி களுக்கு யுகாதியன்று விசேஷ பூஜைகள் செய்யும் படியாக மேடை ஒன்றும் அமைத்துள்ளனர்.
இவ்வாலயத்தில் பல்வேறு இலக்கியங்கள், தத்துவ நூற்கள் ஓலைச் சுவடிகளாக பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அவற்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா விலுள்ள மூடுபத்திரையில் உள்ள ஜிநாலயத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனை நினைவு கூறும் முகமாக யுகாதியன்று வழிபட வரும் அன்பர்களுக்கு சித்தாந்த சாப்பாடு என்னும் சமாராதனை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகின்றது.
I am living only about 4km away from this place of interest. Would like to visit as soon as possible
ReplyDeleteVery happy about your statement. Thank you Dr. sir
Delete