Friday, September 12, 2014

NEDIMOZHIYANUR - நெடிமோழியனூர்


Shri PARSWANATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம்






Location  lies on the map in the coordination of (12.13969, 79.56384) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Nedimozhiyanur
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : நெடிமோழியனூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  kutteripattu  →   Nedimozhiyanur  =     25 k.m.

Villupuram →  Veedur dam → Nedimozhiyanur   =   28 k.m.

Gingee →  Keezh mampattu →  Keezh vailamur  → Nedimozhiyanur   =  30 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Deevanur →  kutteripattu   → Nedimozhiyanur   =  59 k.m.



செல்வழி:

திண்டிவனம் → கூட்டேரிபட்டு → நெடிமோழியனூர்   =  25 கி.மீ.

விழுப்புரம் → வீடூர் அணை → நெடிமோழியனூர்  =  28 கி.மீ.

செஞ்சி → கீழ்மாம்பட்டு →  கீழ்வயலாமூர் → நெடிமோழியனூர்   =  30 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →   கூட்டேரிபட்டு →  நெடிமோழியனூர்  =  59 கி.மீ.



 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Nedimozhiyanur ; a small village in mailam taluk, Villupuram District; a Jain pilgrimage centre. A Jain temple aged 200 years nearly was structured here. Evidences of inscriptions were concealed  because of regular repairs and renovations in the past. But it reveals the Dravidian temple art culture by the style of construction.

Lord Parswanathar, marble statue, resides in the sanctum. It comprises of Main gateway with rectangular compound walls. Inside a block consists of Mugamandap, Arthamandap, passage, shrine with viman. All are in built in Proportionate . An altar is ahead of the centre block in a ciucumbulance corridor. Apart from main deity, Shri Kooshmandini statue and alloy metal made Thirthankars with top shields, Yaksha, Yakshi, Nandeeswara deepam, sruthaskandam models were arranged beautifully.

Decending population of the jain inhabitants the temple is maintained in a fair mannar. But all Poojas ie daily, monthly and annual festivals are going on smoothly.  

*********

விழுப்புரம் மாவட்டத்தில், மைலம் தாலுக்காவைச் சேர்ந்த நெடிமோழியனூர் ஜிநாலயம் 200 ஆண்டுகளைக் கடந்து இருக்கலாம். அவ்வாலயத்தில் அடிக்கடி நடந்துள்ள சீரமைப்பு பணியின் காரணமாக அதன் தொன்மைக்கான அடையாளங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதன் கட்டிடக்கலையின் அமைப்பு பழைய திராவிடக்கலையை ஒட்டியே அமைந்துள்ளது.

மூலவராக பளிங்குக்கல்லால் ஆன ஸ்ரீபார்ஸ்வநாதர் அமர்ந்துள்ளார். ஆலய நுழைவாயில் அரணுடன் அமைந்த திருச்சுற்றுக்கு நடுவே முக மண்டபம், அர்த்த மண்டபம், உள்ளாலை, விமானத்துடன் கூடிய கருவறையுடன் சரியான அளவுடனும், அழகாகவும் அமைந்துள்ள ஜிநாலயம் ஆகும். மேலும் ஸ்ரீகூஷ்மாண்டினி கற்சிலையுடன், மேலும் தீர்த்தங்கரர் சிலைகள் பிரபாவளியுடன், யக்ஷ, யக்ஷி, நந்தீஸ்வர தீபம், ஸ்ருதஸ்கந்தம் போன்ற உலோகச் சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. 


 அருகி வரும் சமண இல்லறத்தார்களின் காரணமாக சற்று ஆலய பராமரிப்பு குறைவாக தெரிகிறது. இருப்பினும் நித்ய பூஜை, விசேஷ காலங்களில் நடக்கும் பூஜைகள் அனைத்தும் வளமைபோல் நடந்து வருகின்றது.



No comments:

Post a Comment