Monday, September 22, 2014

PERAVUR - பேராவூர்


Shri MAHAVEERAR JAIN TEMPLE  -  ஸ்ரீ மகாவீரர்  ஜினாலயம் 





Location  lies on the map in the coordination of (12.16151, 79.74769) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  on Peravur
(Tamil nadu & Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பேராவூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

(முழுவதும் குறிக்கபடாத )



ROUTE:

Tindivanam →  Pondy road  →  Kodipakkam →  Peravur =     23 k.m.

Villupuram →   mailam  →  Kodipakkam →  Peravur   =   52 k.m.

Gingee →   mailam  →  Kodipakkam →  Peravur   =  50 k.m.

Vandavasi  → Tindivanam →  Pondy road  →  Kodipakkam →  Peravur   =  60 k.m.



செல்வழி:

திண்டிவனம் → பாண்டி சாலை  → கோடிப்பாக்கம் → பேராவூர்      =  23 கி.மீ.

விழுப்புரம் → மைலம்  → கோடிப்பாக்கம் → பேராவூர்    =  52 கி.மீ.

செஞ்சி → மைலம்  → கோடிப்பாக்கம் → பேராவூர்  =  50கி.மீ.

வந்தவாசி →  திண்டிவனம் → பாண்டி சாலை  → கோடிப்பாக்கம் → பேராவூர் =  60கி.மீ.







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


 
 
 
 
 
 
 
 
 
 
 


திண்டிவனத்திற்கு 23 கி.மீ. தென் மேற்கில் உள்ளது பேராவூர் என்னும் சிற்றூர். அதில் 600 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஜினாலயம் ஒன்றுள்ளது.  ஸ்ரீமஹாவீரர் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

 மிகவும் பழமையான தெய்வ சூழ்நிலையை கொண்டுள்ள கருவறையை கடந்து அர்த்த மண்டபமும் அதில் பளிங்குச் சிலை ஸ்ரீபுஷ்பதந்த தீர்த்தங்கரரும், உலோகச்சிலைகளில் தீரத்தங்கரர்கள், 24, 72 தீர்த்தங்கரர்கள், ஸ்ருதஸ்கந்தம், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் மற்றும் யக்க்ஷ, யக்க்ஷிகள் மேடையமைத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபிர்ம்மதேவர், ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும் அதில் அடங்கும். அதற்கு அடுத்து மகாமண்டபமாக 16 கால் மண்டபமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சுற்றில் அழகிய 38 அடி உயர மனத்தூய்மைக்கம்பம், ஸ்ரீமகாவீரர், ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீசந்திரப்பிரபர், ஸ்ரீசாந்திநாதர் உருவச்சிலைகளை நான்கு புறமும் கம்பத்தின் கீழும். மேலும் விமானத்தின் மேல்புறத்திலும் அமைக்கப் பட்டுள்ளது. பலிபீடம். தர்மச் சக்கர கம்பமும், தென்கிழக்கு பகுதியில் ஸ்ரீஆதிபட்டாரகர்(ஸ்ரீஆதிநாதர்)  சன்னதியும் (ஜிநாலயத்தை சீர்செய்யும் போது அந்த ஆதிநாதர் சிலை கிடைத்துள்ளது), மேற்கு புறம் முனிமகராஜ் விராக் சாகர் மற்றும் முனிமகராஜ் விவர்ஜன் சாகர் பாதங்கள், கம்பத்தில் ஸ்ரீபிரம்ம தேவர் சிலையும் உள்ளது. நவக்கிரக சிலைகள் மேடையும், சிறிய மண்டபமும், ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் அமைத்துள்ளனர்.

நித்ய பூஜை, விசேஷ பூஜைகள், நந்தீஸ்வர தீப பூஜை வளமைபோல் நடைபெறுகிறது. அட்சய திரிதியை, யுகாதி அன்று இருவேளயும் தீர்த்தங்கரர் வீதியுலா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மேலும் ஆடி வெள்ளியில் ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி தேவி உருவச்சிலைகள் வீதியுலாவும் வளமைபோல் நடைபெறுகிறது.


இவ்வாலயம் தவிர அதன் எதிர்புறம் பஜனைக் கோவில் கட்டியுள்ளனர்.  அதில் நவராத்திரி தினங்களில் ஆராதனைகள் செய்து விழா எடுக்கின்றனர். கடைசி நாளில் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றது.

 
 
 
 
  

Peravur, a hamlet, 23 kms from Tindivanam in Villupuram district. There is a Jain temple of more than 600 years old. Shri Mahaveerar as main deity of this temple.

Next to the ancient divine sanctum, a marble statue of Shri Pushpathanthar, alloy made many thirthankars, 24, 72 cluster of thirthankars, Sruthaskandam, Nandeeswara deepa temples model, Yaksha, Yakshis, Shri Brahmadevar, Shri Dharmadevi statues were arranged on a platform on either side of Artha mandap.  Then a big pavilion of 16 pillars was built.

Around the centre block, in a corridor, a big gateway crowned by three stage tower with shikar and five kalashes; Dharmachakra pillar; an altar; Manasthamp pillar,38 feet height, covered with four thirthankar statues around it; a Shri Adhipatarahar (Shri Adinathar) shrine, two stone foot-steps of Munivars. Shri Viragsagar and Shri Vivarjansagar were fixed. Then Shri Brahmadevar shrine on a short stem; a square Navagra idols stand, a mandap and Shri Kshetrabalagar shrine were well placed.

Daily pooja, Special pooja and Nandheeswara deepa pooja are going on regularly.  On Akshaya thirithiyai day and Yuhathi day a festival with procession was celebrated every year. Apart from a festival on the third Friday of Audi tamil month another festival is also celebrated.

One more temple named Bhajan koil was built opposite side of the temple street. Every year 10 days function was conducted on Dasara holidays. Last day of dasara a festival was conducted.


 
 
 
 

4 comments: