Shri PARSWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம்
SENDIYAMPAKKAM lies on the Google map in the
coordination of (13352, 79.54603) ie put the latitude,
Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click Sendiyampakkam
(Tamil nadu & Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : செண்டியம்பாக்கம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
ROUTE:
Tindivanam → kutteripattu → Sendiyampakkam = 25 k.m.
Villupuram → Veedur dam → Sendiyampakkam = 28 k.m.
Gingee → Keezh mampattu → Keezh vailamur → Sendiyampakkam = 32 k.m.
Vandavasi → Vellimedupettai → Deevanur → kutteripattu →Sendiyampakkam = 60 k.m.
செல்வழி:
திண்டிவனம் → கூட்டேரிபட்டு → செண்டியம்பாக்கம் = 25 கி.மீ.
விழுப்புரம் → வீடூர் அணை → செண்டியம்பாக்கம் = 28 கி.மீ.
செஞ்சி → கீழ்மாம்பட்டு → கீழ்வயலாமூர் → செண்டியம்பாக்கம் = 32 கி.மீ.
வந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூட்டேரிபட்டு → செண்டியம்பாக்கம் = 60 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ
பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம்
நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன
மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா
புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை
உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர
யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர
பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண
சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண
பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய
மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Sendiyampakkam
Jinalaya is similar to the area /stlye of Perani jain temple and also constructed in Chola dynasty. A Jain family, who is only jain
occupant to take care of the temple, doing the Pooja and other rituals here.
East facing
temple having Shri Parswanather as Main deity. In artha mandap alloy metal
Theerthankars, Yaksha idols are preserved tightly. In front of the Muga mandap
Shri Padmavathy (beautiful sculture) shrine fasten there.
Daily pooja,
special poojas were conducted. In the month of Markazhi, Mukkudai also
celebrated for five days. No more rituals and poojas were conducted because no
other jain family lived in the village.
The degeneration of the jain
temples in the past is due to decreasing population of the village jain families.
Frequent visits to these village jain temples by all the jains in south india can
preserve the old monuments. At least an annual visit can prevent the
deterioration.
**********
சோழப்பேரரசர்கள் ஆதரித்த சமணக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
பேரணி ஜிநாலயத்திற்கு 2 கி.மீ. வடமேற்கில் அமைந்துள்ளது. அதே பரப்பில் அமைந்துள்ள பழமையான
திராவிட பாரம்பரியத்தில் உதித்ததாகும். பல
நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இவ்வாலயத்தை தற்போது பாதுகாத்து வருவது ஒரு சமண குடும்பமே (பலர் வசித்து வந்ததற்கு அடையாளம் இவ்வாலயத்தை கண்டால் தெரிகிறது.) அக்குடும்பத்தினர்
இவ்வாலயத்தை தூய்மையாக வைத்துள்ளனர்.
கீழ் திசை நுழைவாயில் மதிற் சுவற்றுடன் கூடிய திருச்சுற்றுக்கு
நடுவே சிகரத்துடன் கொண்ட கருவறையில் ஸ்ரீபார்ஸ்வநாதர் மூலவராக அமர்ந்துள்ளார். இவ்வாலயத்தின் அர்த்த மண்டபத்தில் சில தீர்த்தங்கரர்கள்,
யக்ஷன் போன்ற உலோகச் சிலைகள் தூய்மையாகவும், பத்திரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முக மண்டபத்தின் வலது பகுதியில் ஸ்ரீபத்மாவதியின் அழகிய உருவச்சிலை ஸ்தாபனை செய்யப்பட்டு
தனி சன்னதியாக்கப்பட்டுள்ளது.
தினபூஜையும், விசேஷ பூஜைகளும், மார்கழி மாத முக்குடை தீபம் சில
நாட்களும் கொண்டாடப் பட்டு வருகிறது. சமணக்
குடும்பங்கள் அதிகம் இல்லாமையால் மற்ற விசேஷங்கள் அரிதாகி விட்டது.
இப்பகுதியில்
பல ஜிநாலயங்கள் அவ்வூரில் வாழ்ந்த சமணக்
குடும்பங்கள் அருகி வந்தமையால் போற்றி பாதுகாக்க
படாமல் காலச்சூழலுக்கு இரையாகி அழிந்துள்ளன.
அந்நிலை இது போன்ற சிற்றூர்களுக்கு ஏற்படாமல் இருக்கும்
வண்ணம், தென்இந்திய சமணக் குடும்பத்தினர்கள் ஆண்டுக் கொரு முறை மாறிமாறி வந்து
பூஜைகளும் விழாக்களும் எடுப்பதோடு
நினைவுச் சின்னங்களை
அழியாமல் பாதுகாக்க சில சீரமைப்புகளையும்
செய்தால், அந்நிலை மீண்டும் வராமல்
தடுக்கலாம்.
ஆகவே
கோவிலைப் பாதுகாக்கும் முகமாக தென்இந்திய சமண
குடும்பத்தினர்கள் ஆண்டுக் கொருமுறையாவது இதுபோன்ற ஊர்களுக்கு சென்று வருவது சாலச் சிறந்தது ஆகும்.
No comments:
Post a Comment