Shri MUNISUVIRATHA JAIN TEMPLE - ஸ்ரீ முனிசுவிரத ஜினாலயம்
Map for Jain pilgrimage centres: Click on Vempundi
(Tamil nadu & Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வேம்பூண்டி கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாத )
ROUTE:
Tindivanam → Gingee road → Vempundi = 6 k.m.
Villupuram → Tindivanam → Gingee road → Vempundi = 47 k.m.
Gingee → Tindivanam road → Vempundi = 24 k.m.
Vandavasi → Tindivanam → Gingee road → Vempundi = 40 k.m.
செல்வழி:
திண்டிவனம் → செஞ்சி சாலை → வேம்புண்டி = 6 கி.மீ.
விழுப்புரம் → திண்டிவனம் → செஞ்சி சாலை → வேம்புண்டி = 47 கி.மீ.
செஞ்சி → திண்டிவனம் சாலை → வேம்புண்டி = 24 கி.மீ.
வந்தவாசி → திண்டிவனம் → செஞ்சி சாலை → வேம்புண்டி = 40கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீமுனிசூவிரத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து ராஜகிரக நகரத்து ஹரி வம்சத்து சுமித்திரன் மகாராஜாவிற்கும் பத்மாவதி
தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீல (கருப்பு) வண்ணரும்
20 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும்
கூர்மம் (ஆமை) லாஞ்சனத்தை உடையவரும் புருவர யக்ஷன் மகாரூபிணி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் மல்லிசேனர்
முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில்
பால்குண கிருஷ்ண துவாதசியில் 99 கோடாகோடி 99 கோடி 99 லட்சத்து 999 முனிவர்களுடன் நிர்ஜர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமுனிசூவிரத
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து!
நமோஸ்து!
திண்டிவனத்திலிருந்து செஞ்சி
சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேம்பூண்டி கிராமம். மிக குறைந்த சமணக்
குடும்பங்கள் வசிக்கும் அவ்வூரில் 2 நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஓர் ஜிநாலயம்
உள்ளது. அனைவரும் மிக ஆர்வம் கொண்டு
தற்போது அவ்வாலயத்தை முழுவதுமாக சீரமைத்து
வருகின்றனர்.
முனிசூவிரத நாதரைக் மூலவராக
பிரதிஷ்டை செய்ய உள்ளனர். அழகிய பளிங்குக் கல்லால் ஆன மூர்த்தி கருவறையை
அலங்கரிக்க உள்ளார். மேலும் பல உலோக பிம்பங்களையும்
உள்ளடக்கிய இவ்வாலயத்தின் அர்த்த மண்டபத்தில் அழகிய ஸ்ரீநேமிநாதர் கற்சிலையும்,
முக மண்டபத்தில் இடது புறம் ஸ்ரீபத்மாவதி தேவி, வலது புறம் ஸ்ரீதர்மதேவி
கற்சிலைகளும் உள்ளது. அந்த மைய
கட்டமைப்புக்கு வெளியே ஆலய நுழை வாயிலுக்கு எதிரே அழகிய வெள்ளை பளிங்குகல் மனத்தூய்மை கம்பத்தை சில
மாதங்களுக்கு முன்னர் நிறுவி உள்ளனர். ஆலய திருச்சுற்றில் ஸ்ரீபிரம்மதேவர், நவக்கிரக தெய்வங்கள் மற்றும்
ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சன்னதியும் அமைந்துள்ளன.
பஞ்சகல்யாண
பெருவிழாவிற்கு தயாராக உள்ள இவ்வாலய ஜினரின் புனித சடங்கு நிகழ்வுகளுக்கு அனைத்து சமண மக்களையும் அவ்வூர் இலலறத்தார்கள் எதிர்
நோக்கியுள்ளனர். மற்ற ஜிநாலயங்களைப் போல
தினபூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, நவராத்திரி மற்றும் அனைத்து சமண பண்டிகைகளையும்
கொண்டாட காத்து நிற்கிறது
வேம்பூண்டி ஜினாலயம்.
Vempundi , a small village,
near to Tindivanam (6 kms) on Gingee
road. Few jain families were living there. They proposed to renovate the
Jinalayam of more than 200 years old.
Lord Munisuviratha going
to pritista in the sanctum very soon. In the arthamandap regular alloy idols in
all the jain temples and a Lord Neminathar of granite made. Apart from the
Mugamandap, Shri Padmavathy devi and Shri Dharmadevi shrines were there. On the
outside of the whole block, a newly made marble Manasthamp has been erected
four months back. In the circumambulace corridor Shri Brahmadevar, Shri
Kshetrabalagar and Navagraha statues were resided.
The new temple is waiting for the Panchakalyan festival and the resident jains invite all the south for the holy function.
Photos on 15-08-2022
No comments:
Post a Comment