Wednesday, October 15, 2014

ARPAKKAM - ஆர்பாக்கம்


Shri  ADHINATHAR  JAIN  TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 






Map for Jain pilgrimage centres:   Click ARPAKKAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஆர்பாக்கம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam Vandavasi→kanchipuram road→ Uthiramerur rdARPAKKAM   = 81 k.m.

Gingee Vandavasi→kanchipuram road→ Uthiramerur rd ARPAKKAM      = 91 k.m.

Vandavasikanchipuram road→ Uthiramerur rd ARPAKKAM = 44 k.m.

Arni  → Cheyyar→ Mamandur road   ARPAKKAM     = 62 k.m.

Kanchepuram  → Ayyankargulam turnARPAKKAM    = 15 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை →உத்திரமேரூர் சாலை ஆர்பாக்கம்=84 கி.மீ.

செஞ்சி வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை →உத்திரமேரூர் சாலை ஆர்பாக்கம் = 91 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம் சாலை →உத்திரமேரூர் சாலை ஆர்பாக்கம்   = 44 .மீ.

ஆரணி  → செய்யார்    → மாமண்டூர்  →   ஆர்பாக்கம்    = 62கி.மீ.

காஞ்சிபுரம்
உத்திரமேரூர் சாலை  → ஆர்பாக்கம்    =  15 கி.மீ






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் சாலையில் 15 கி.மீ. தொலைவில் ஆர்பாக்கம்  எனும் கிராமம் உள்ளது. அங்கு 10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜிநாலயம்  தற்போதும் பல சீரமைப்புகளைக் கண்டு கம்பீரமாக நிற்கிறது. அந்த ஜிநாலயம் அக்காலத்தில் பள்ளிச்சந்தம் என்ற வகையில் அரசாங்க மான்யமாக நிலமும், பொற்காசுகளும் பெற்றதாக கல்வெட்டின் மூலம் தெரிகிறது.

அவ்வாலயம் ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்டுள்ளது. அவரை ஸ்ரீஆதிபட்டாரகர் என புகழ்ந்து பாடி உள்ளனர். சமண மத இல்லச் சடங்கில் ஒன்றான குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதுகுத்தும் விழாவினை அவ் வாலயத்தில் நடத்தி அருள் பெறுவது அனைவருக்கும் வழக்கமாக உள்ளது. (அதே நேர்த்திக்கடனை திருநறுங்குன்றம் ஸ்ரீஅப்பாண்டைநாதரான ஸ்ரீபார்ஸ்வநாதருக்கும் செய்வது மரபாக பல குடும்பங்கள் கொண்டுள்ளனர்.) ஆகவே அவ்வாலயம் நாளும் விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

தற்போதுள்ள ஸ்ரீஆதிநாதர் கற்சிலை 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவைக் கொண்டுள்ளது. கருவறையின் பீடத்தில் கீழ்திசை நோக்கி அமர்ந்துள்ளார். அதற்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தில் நித்ய பூஜைக்கான திருவுருவங்கள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 தீர்த்தங்கரர், ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி போன்ற சாசன யக்ஷியர்களின் கற்சிலைகளும் வழிபாட்டிற்காக மேடையில் அலங்கரிக்கின்றன. அதற்கு முன் முகமண்டபம் படிகளுடன் அமைந்துள்ளது.


ஆலயத்தின் நுழைவாயில் கிழக்கில் அமைத்து. குடவரையின் மேற்புற மாடத்தில் தீர்த்தங்கரர் சிலையும் உள்ளது. அதில் துவஜஸ்தம்பம், பலிபீடம், மானஸ்தம்பம் போன்றவையும் நிறுவப்பட்டுள்ளது. திருச்சுற்று மதிலும் அமைத்து உள்ளனர்.



Arpakkam is a village at a distance of 15 kms towards south.( In the Uthramerur road take the eastern route at the stopping.) A Jinalaya, built in the 10th century AD is there. East facing temple is dedicate to Shri Adhinathar as main deity in the sanctum.

The Lord is praised as Adhipattarahar in the songs and poems. The temple got some grant from the King of that period called as Pallisantham in goldcoins and lands, is inscribed on a stone. All the surrounding Jain families have a custom of ear pierceing ceremony in the chamber of this temple for their children. So the temple always in such a celebration place. (Also the same ceremony was celebrated in the Thirunarunkundram Jinalaya, for Shri Parshvanathar, by several families.)

Shri Adhinathar, granite stone statue, a design of 200 years old type, is upon the plinth. It was totally engraved three dimensionaly, not like plate engraved sculptures. The Arthamandap got several stone idols for regular poojas, as 24 thirthankars, Shri Brahmadevar and Shrikooshmandini are arranged on a platform. All metal idols are stored in a separate pedestal. And a muhamandap has few steps for raising.

East entranceway was decorated by a small gallery on the top with a Thirthangar statue. After getting in, a Thwajasthambam, altar and a Manasthamp pillar were installed in the Open corridor. All are fenced by a high wall around the corridor.


All the important Pooja, rituals and festivals are conducted regularly at the appropriate time in the Jinalaya of all aspects.





No comments:

Post a Comment