Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
காஞ்சிபுரம்→ வந்தவாசி சாலை → மருவத்தூர் சாலை → பிருதூர் = 43 கி.மீ
Map for Jain pilgrimage centres: Click Biruthur
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பிருதூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Vandavasi→ Melmaruvathur
road→ Birudur = 4 k.m.
Gingee → Vandavasi→ Melmaruvathur→
Birudur = 53 k.m.
Melmaruvathur → Vandavasi road → Birudur = 25 k.m.
Arni → Vandavasi→ Melmaruvathur
road→ Birudur = 47 k.m.
Kanchipuram → Vandavasi→ Melmaruvathur
road→ Birudur = 43 k.m.
செல்வழி:.
வந்தவாசி→ மருவத்தூர் சாலை→ பிருதூர் = 4 கி.மீ.
செஞ்சி → வந்தவாசி→ மருவத்தூர் சாலை→ பிருதூர் = 53 கி.மீ.
மருவத்தூர்→வந்தவாசி சாலை → மருவத்தூர் சாலை → பிருதூர் = 25 கி.மீ .
ஆரணி → வந்தவாசி → மருவத்தூர் சாலை → பிருதூர் = 47 கி.மீ.
காஞ்சிபுரம்→ வந்தவாசி சாலை → மருவத்தூர் சாலை → பிருதூர் = 43 கி.மீ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
பிருதூர் கிராமம்
வந்தவாசியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூர் சாலையில் உள்ளது. அங்கு வடதிசை நோக்கிய ஜிநாலயம்
சில நூற்றாண்டுகளாய் உள்ளது. அதன் அமைப்பு திராவிட பாரம்பரியத்தில் இருந்தாலும் பல
சீரமைப்பை கண்டதால் அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைந்துள்ளன. எனினும் அதன் தூண்கள்
ஆலய அமைப்பு போன்றவை சோழர் காலத்தில் உருவானது போல் தோன்றுகிறது. நல்ல வண்ணத்தில் பொலிவுடன்
இருக்கும் இவ்வாலயத்தை சுற்றி சமணர்கள் பலர் வாழ்கின்றனர். முனிகள் வாசம் செய்யும்
இல்லமும் உள்ளது. இதிலிருந்து பல துறவிகள் வந்து தங்கி சென்றதை அறியலாம்.(தற்போது பரம
பூஜ்ய ஆர்யிகா 105 சிந்தன்ஸ்ரீ மாதாஜி அவர்கள் மழைக்கால
தங்கலில் உள்ளார்)
சென்ற நூற்றாண்டில்
பிரதிஷ்டை யான ஸ்ரீஆதிநாதரின்(கருங்கல்லில் செதுக்கப்பட்டது) அழகிய திருவுருவம் வேதி
மேடையை அலங்கரிக்கிறது. கருவறையின் மேல் துவிதள விமானம் கட்டப்பட்டு நாற்புறமும் தீர்த்தங்கரர்
சிலைகள் ,கீழ் தளத்தில் அமர்ந்த நிலையிலும்,
மேல் தளத்தில் நின்ற நிலையிலும் சாமர தாரிகளுடன், சிகரம், கலசத்துடன் காட்சியளிக்கிறது.
வாயிலின் இருமருங்கிலும் கோமுக யக்ஷன்,
ஸ்ரீசக்ரேஸ்வரி யக்ஷி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தில் உலோகச்சிலைகள்; முக்கிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள், ரத்தினத்திரய மூவர்கள், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, பாகுபலி போன்றவை அனைத்தும்
பாதுகாப்புடன் மேடையை அலங்கரிக்கின்றன. அருகில் வடபுறம் உள்ள மேடையில் ஸ்ரீவர்த்தமானர்
கற்சிலை அபிஷேகம் செய்ய ஏதுவாக வடிதொட்டி மேடையுடன்
உள்ளது. மேலும் 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதா மற்றும் சதுர்முகி (சர்வோபத்ரர் எனவும் குறிப்பிடுகின்றனர்)போன்ற கற்சிலைகள்
உள்ளன.
அடுத்து மகாமண்டபம்
நடுவில் நித்ய பூஜை மேடை மூர்த்தியுடன் காணப்படுகிறது. அதற்கடுத்து சிறிய முகமண்டபம்
இரும்பு தட்டிகள், கதவுகளுடன் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நுழைவாயிலின் (குடவரை)
இருபுறமும் அழகிய மண்டபங்கள் உள்ளன. அதில் வடபுறம் ஜினசாசன தேவ,தேவியர் சன்னதி உள்ளது. அதனுள்
ஸ்ரீசாமயக்ஷன், ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி மற்றும் ஜினவாணி போன்ற உலோகச் சிலைகள் அலங்கரிக்கின்றன. இடதுபுற மண்டபத்திற்கு
அடுத்து நவக்கிரக மேடை ஒன்பது கற்சிலைகளுடன் காட்சி அளிக்கிறது. பலிபீடம், மனத்தூய்மைக்கம்பம், நாற்புறமும் தீர்த்தங்கரர்
திருவுருங்கள், கீழ்புறம் அமர்ந்த நிலையிலும்,
மேற்புறம் சிறிய மண்டபத்தினுள் நின்ற நிலையிலும், விமானத்தில் அமர்ந்த நிலையிலும்
கல்லினால் செய்யப்பட்டு நெடிதுயர்ந்து நிற்கிறது. ஆலய திருச்சுற்று முழுவதுமாய் உயர
மதிற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்திற்கு
வெளியே மானஸ்தம்பத்திற்கு மேற்கு திசையில் நெடிய உயரத்தில் ஸ்ரீமகாவீரரின் 16 அடி முழுஉயர சிலை ( கி.பி.
2012 ம் ஆண்டு) மேடையில் நிறுவப்பட்டுள்ளது. சிரவணபெலிகொலா ஸ்ரீபாகுபலி நாதரின் கம்பீரத்தை
நினைவுறுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றின் வடபுறம் வரும் போது
நம்மை அமைதியுற செய்யுமாறு பார்வை உள்ளது. ஒரே கல்லினால் ஆன அச்சிலை, பவ்வியர், வணக்கத்திற்குரிய திரு. சின்னத்துரை
நைனார் அவர்களால் பல லட்ச ரூபாயில் இவ்வாலயத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
சிங்கமும்,
காளையும் ஒரே கிராமத்தில் !!!
நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் பல
விசேஷ பூஜைகளும், திருவிழாக்களும் செவ்வனே நடைபெற்று
வருகிறது.
Birudur village is located in the Melmaruvathur
road at 4 kms from Vandavasi town. A Dravidian temple art Jinalaya built by the
natives of Jains in the village since several centuries ago. Frequent repairs
and renovation work might screen the evidences of antique. Jain familes are
living around the beautiful temple. An ascetic home is there; so many saints have
been boarded here on their way. (His holiness Param poojya Aryiga 108 Chinthan
shri Mathaji is on winter stay at the village)
Shri Adhinathar got the sanctum plinth. Closed by
two tier viman has four thirthankar idols in the sitting at the bottom and in
standing postures at the top with chamara maids, below the shikara and kalash.
In Arthamandap shri Komuga yaksh and Shri Chakreswari Yakshi statues are placed
on both sides of aisle. All metal idols of thirthankars, 24 thirthankars
cluster, Navadevatha, Mahameru, Rathnathraya tri-thirthankars, Bagavan Bahubali
are arranged on a platform. Also Shri Mahaveerar stone engrave idol, 24
thirthankar cluster and chadurmuhi are seated on another platform.
Fore chamber of Arthamandap called
as Mahamandap, has daily pooja platform with metal idol of Moolavar and a
Mugamandap closed by iron gril panel and doors for safeguarding the treasure
incide. There are two pavilions on north and south of entranceway. In the north
Yakshas and Yakshis shrine and adjacent to the south pavilion Navagraha idols
are established upon a pedestal. An altar and a Manasthamp made of single stone
pillar having four thirthankar engraving at the bottom and a viman at the top,
four thirthankars statues in standing incide and sitting postures over it. All
features are surrounded by a high wall structure.
Adjacent to the Jinalaya and north
of Manasthamp a 16 feet monolithic stone carving statue of Shri Mahaveera is
installed on a platform in the year of AD 2012. It resembles like the gigantic
Statue of Bagavan Bahubali at Shravana Belagola, Karnataka. Huge statue of
Mahavera watched us while we are rounding the northern corridor. A noble man, Bavyar, Shri Chinnadurai nainar,
Birudur devoted the high valued statue of several lakhs rupees to the Jinalaya.
We must bow our head for his dedication.
Lion and Bull are in one village !!!
Daily poojas, special poojas and
annual festivals, urchavs are conducted and celebrated recurrently.
ஆலய வளாகத்திற்கு வெளியே மானஸ்தம்பத்திற்கு வடக்கு திசையில் நெடிய உயரத்தில் ஸ்ரீமகாவீரரின் 16 அடி முழுஉயர சிலை. ******** சிலை மானஸ்தம்பத்திற்கு மேற்கு திசையில் உள்ளது
ReplyDelete