Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click ERUMBUR
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : எறும்பூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi → Karanai road → Erumbur = 47 k.m.
Gingee → Desur →Mazhaiyurroad → Arasur road → Erumbur = 48 k.m.
Vandavasi → Karanai road → Erumbur = 10 k.m.
Villupuram → Tindivanam → Vandavasi → Karanai road → Erumbur = 87 k.m.
Chetpet → Vandavasi road→ Arasur road → Erumbur = 31 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 47 கி.மீ.
செஞ்சி → தேசூர் → மழையூர் சாலை → அரசூர் சாலை→ எறும்பூர் = 48 கி.மீ.
வந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 10 கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → எறும்பூர் = 87 கி.மீ.
சேத்பட் → அரசூர் சாலை→ எறும்பூர் = 31 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Between Arni road and Chetpet road
at 9 kms from the vandavasi town, Erumbur village lies. A east facing jinalaya
is in the village, built before 300 years.
A flag mast basement, an altar and
a manasthampam with Thirthankarar figure engraved on four sides are welcoming.
Shri Adhinathar, made of white marble in sitting posture, is installed under
vidic procedure. Peculiarly, there is also another sanctum on the top of it.
(like in Melsithamur temple) . Also a staircase was built on the exterior side
of sancturm. On the first floor divine room Shri Mahaveerar is installed. So
the inside of the tower was constructed in a hollow shape. It is a different
design in traditional model temple.
In the Arthamandapam, metal idols of Thirthankars for
rituals, Yakshas, Yakshis, Navadevatha, Mahameru, 24 thirthankars cluster, are
exhibited on a platform. In addition Shri Brahmadevar and Shri Padmavathy devi
stone idols are established on a wooden stool. A mugamandap built in same scale
of Arthamandap, fenced with iron panels and gates.
On Northern corridor two shrine chamber, incide one 24
thirthangars granite stone cluster, white marble made Manathungachariar (poet of
Bakthamara) and Kundkunthar statue with palm leaves bundle. Next navagraha
thirthamkar marble statues are arranged on a round platform.
Nithya pooja, Nandheeswara pooja, mukkudai for full
month and a urchave on Deepavali for Lord.Mahaveerar, Aksha thirithiyai
festivals are celebrated recurrently.
Olden days a resident Jain of this village, is making
coronation as Madathipathy at Jina kanchi mutt, Melsithamur.
எறும்பூர் கிராமம், வந்தவாசிக்கு தெற்கே 11 கி.மீ. தூரத்தில்
ஆரணி சாலைக்கும், சேத்பட் சாலைக்கும் இடையே அமைந்துள்ளது. திருச்சுற்று மதிலுடன் கிழக்கு நோக்கிய வாயிலுடன் ஸ்ரீஆதிநாதர்
ஆலயம் 300
அண்டுகளுக்கு முன்னர் அமைக்கப் பட்டுள்ளது.
ஆலய முகப்பில் கொடிமர
மேடையும், பலிபீடமும், அதன் பின் மானஸ்தம்பம் நெடிதுயர்ந்து,
நாற்புறமும் தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சின்னங்களுடன் காணப்படுகின்றது. ஆலயத்தின் நடுவே
கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் வெண்பளிங்குச் சிலை அழகான மேடையில் நிறுவப்பட்டுள்ளது.
அக் கருவறைக்கு மேலே (மேல்சித்தாமூர் ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆலயத்தில் உள்ளது போல்) மற்றொரு
கருவறை அமைக்கப்பட்டு அதில் ஸ்ரீமகாவீரர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவ்வாலயத்திற்கு
செல்வதற்கு பின்புறம் படிகள் அமைக்கப் பட்டுள்ளது. அதில் பளிங்குக் கல்லால் ஆன ஸ்ரீமகாவீரர் கம்பீரமாக அமர்த்தப் பட்டுள்ளார். (பிரத்யேகமான அமைப்பும், சிறப்பும் இதுவரை கண்ட ஆலயங்களில் இது இரண்டாவதாகும்.) அதனால் அதன்
சிகரம் உள்கூடாக அமைக்கப் பட்டுள்ளது. பாரம்பரிய ஆலய வடிவமைப்பில் இருதளங்களில் கருவறைகள்.
ஆலய அர்த்த மண்டபத்தில் உலோக பிம்பங்கள் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டிற்கேற்ற வகையில் பல தீர்த்தங்கரர்கள், நவதேவதா, பஞ்சபரமேஷ்டிகள், ஸ்ருதஸ்கந்தம்,
மேரு, 24 தீர்த்தங்கரர்கள் ஒட்டமைப்பு, போன்றவைகள் பாதுகாக்கப் பட்டு வருகிறது. மேலும்
ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீபத்மாவதி கற்சிலைகள் வழிபாட்டிற்காக மரமேடையில் வைக்கப்பட்டுள்ளது.
அதே அளவில் முகமண்டபம் அமைக்கபட்டு, இரும்பு தட்டிகள், கதவுகள் போடப்பட்டுள்ளது.
திருச்சுற்றின் வட பகுதியில் இரண்டு அறைகள் உள்ளது. ஒன்றில்
24 தீர்த்தங்கரர்கள் கற்சிலையும், மானதுங்காச்சாரியாரின் வெண்பளிங்கு சிலையும், கணதரரின்
கற்சிலையும் மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து நவக்கிரக தீர்த்தங்கரர்கள் ஒன்பது
பேரின் பளிங்குச் சிலைகள் வட்ட மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.
நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை பூஜை போன்றவை, தீபாவளியன்று மகாவீரருக்கு பூஜை, விதானம், திருவீதி
யுலா மற்றும் அக்ஷய திரிதியை திருவீதியுலா போன்றவையும் செவ்வனே நடைபெறுகிறது. முற்காலத்தில்
இவ்வூரைச் சேர்ந்த சமணர் மேல்சித்தாமூர் மடாதிபதியாக இருந்துள்ளார்.
.
plz post the new photoes of erumbue temple
ReplyDelete