Monday, October 13, 2014

KARANTHAI - கரந்தை


Shri KUNDHUNATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ குந்துநாதர் ஜிநாலயம் 





Location: 

lies on the Google map in the coordination of (12.76111, 79.58717) ie put the latitude, Longitude on the search box



Map for Jain pilgrimage centres:   Click KARANTHAI
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கரந்தை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam →Vandavasi→kanchipuram road→Ayyankargulam turnKARANTHAI  = 84 k.m.

Gingee →Chetpet Cheyyar→ Kunnathur KARANTHAI     = 82 k.m.

Vandavasi → kanchipuram road→Ayyankargulam turn KARANTHAI     = 47 k.m.

Arni  → Kalavai   → Perunkattur   KARANTHAI    = 44 k.m.

Kanchepuram  → Ayyankargulam turnKARANTHAI   = 21 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை →அய்யங்கார்குளம் திருப்பம்கரந்தை= 84 கி.மீ.

செஞ்சி →சேத்பெட் செய்யார்   →  குன்னத்தூர் →கரந்தை = 82 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம்   சாலை →அய்யங்கார் குளம் திருப்பம்  →  கரந்தை   = 47கி.மீ.

ஆரணி  → கலவை   → பெருங்காட்டூர்  →   கரந்தை    = 44 கி.மீ.


காஞ்சிபுரம்
அய்யங்கார் குளம் திருப்பம்   → கரந்தை    =  21 கி.மீ






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அஸ்தினாபுர நகரத்து உக்ர வம்சத்து சூரசேன மஹாராஜாவிற்கும், ஸ்ரீகாந்த மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 35 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 95 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், மேஷ (ஆடு) லாஞ்சனத்தை உடையவரும், கந்தர்வ யக்ஷ்ன், ஜயா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 35 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் வைசாக சுக்ல ப்ரதிபன்னத்தில் 96 கோடி 32 லட்சத்து 96 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஞானதர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீகுந்துநாத  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



KARANTHAI: a village, travel over 19 kms southwest of Kanchipuram on kalavai road (Ayyankarkulam turn). There is an ancient jinalayam was built in the 9th Century AD. At present this is one of the legendary of Jain temples in south for Dravidian temple art. Many ascetics and celibacies were lived in the holy place, so it was called as Munigiri also. Acharya Muni.Agalangar has been lived in the village. He won all debates against the Buddh monks. The various shrines and porches of the elegant temple are built in different centuries.

The east facing jinalaya consists of entranceway crowned by three tiered tower with shikara and five kalashes and high wall shrouds the complex. In side the complex:

shri Kundthnathar shrine; Main sanctum comprise the Lime mortar sculpture of Shri kunthunathar, in gold colour with eight features of Jinar resides on a plinth and figurines of Indira, devas, Shamaradharis are fitted on the interior wall of hollowed viman. It has closed inner corridor with two walls.

Then a Arthamandap, on the entranceway Yaksha Kandharvan and Yakshi Jaya are engraved on the wall. This chamber was built in the 9th century AD, a stone inscription is there. (all the evidences for antiquity are not disguised in the temple complex) The Mahamandap and the Mugamandap were built in the 12th Century AD. The Portico has two side staircases. A Sthwajasthamp pillar and an altar are established. The pillars were ornamented and engraved sculptures at the bottom. An inscription refers that it was called as Veera Rajendra Palli. All the metal idols of important Thirthankars, Navdevatha, Yaksha, Yakshis are stored in safe chamber.

                                                                                                                contd..


A santhi Porch, shri Mahaveerar shrine and Shri Brahmadevar shrine is on the southern side. Initially the Mahaveerar sanctum was on the plain, and then it was mounted on a deck. It is also a 12th Century AD chamber. At a height of 50 feet more with steps of its sanctum got Lime mortar sculpture of Shri Mahaveerar in gold colour has wonderful look.

On the western side, back of main sanctum wall cell, shri Parswanathar lime mortar engraved idol was dedicated in 9th century AD. It has a portico and few steps to reach.

North side of open the corridor, shri Rishabh thirthankar shrine with sanctum embraces a stone idol. But the whole block was shifted from nearby village Aalankattamalai in the 15th Century AD. It has a Magnificient look, like a back of a sleeping elephant (design).

Then in the northern side one more shrine for Shri Kooshmandini with shikhara and kalash on the top. Inside sanctum lime mortar sculpture of Shri Dharmadevi with female shamarathari figurines are reside on a plinth. Another stone made idol also in front of the deity is for daily pooja purpose.

Next a portico with Acharya Agalangar, ascetic footprints are on a pedestal was built at the same time.


All Jain rituals and Poojas are conducted regularly at the appropriate times. A Pramaurchav also celebrated for 10 days annually is one of the famous festivals in Tamilnadu. 

                                                                                                                


கரந்தை: முற்காலத்தில் முனிவர்கள் வாழ்ந்துள்ளதால் முனிகிரி என்று அழைக்கப்பட்ட இக்கிராமம் காஞ்சிபுரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில் கலவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. (அய்யங்கார்குளம் திருப்பம்) அங்கு ஜிநாலயம் ஒன்று கி.பி. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தற்போது அனைத்து சமண ஆலயங்களுக்கும் கட்டுமானத்தில் முன்னோடியாக அமைந்துள்ளது. அங்கு அகளங்கர் என்னும் முனிகள் வாழ்ந்துள்ளார். அவர் சமண தத்துவங்களே சிறந்தது என தமது வாதத்திறமையினால் பெளத்த துறவிகளை வென்றவர். அப் பெருமை மிக்க ஆலயம் வெவ்வேறு காலகட்டங்களில் பல உள் ஆலயங்கள், மண்டபங்கள் போன்றவைகள் கட்டப்பட்டு பெரிய ஆலயமாக தற்போது வளர்ந்து நிற்கிறது.

கீழ்திசை நோக்கிய இந்த ஜிநாலயம், நுழைவாயில், மூன்று தள கோபுர (ஐந்து) கலசங்களுடன், மதிற்சுவர்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஸ்ரீகுந்துநாதரை மூலவராக கொண்ட இவ்வாலயத்தின் கருவறை, சுண்ணாம்புச் சுதையினால் பொன்நிறத்தில் அவர் உருவ சிலையும், அதனைச்சுற்றிலும், உட்கூடான சிகரம் வரை, எட்டு சிறப்பு அம்சங்களும்,இந்திரன், தேவர்கள், சாமரதாரிகள், நடனமாதர்களின் சிலைகளும் வடிக்கப்பட்டு; அதனைச்சுற்றி சுவர் அமைக்கப்பட்டு, தனி திருச்சுற்று (உட்பிரகாரம்)டன், உள்ளது. மேற்புறம் இரண்டு தள விமானம், கலசத்துடன் உயர்ந்து உள்ளது.  அதன் முன் அர்த்த மண்டபம் வாயிலில் கந்தர்வ யக்ஷன், ஜெயா யக்ஷி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கல்வெட்டுகள் பல சீரமைப்புகள் வந்த போதும் மறைக்கப்படாமல் உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி மகாமண்டபம், முகமண்டபம் போன்றவை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என தெரிகிறது. அதில் வீர ராஜேந்திரப்பள்ளி என இவ்வாலயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சுற்றில் அமைந்துள்ள சாந்திமண்டபமும்; அதற்கடுத்து உள்ள ஸ்ரீமகாவீரர் ஆலய கருவறை முதலில் கீழே அமைந்து பின்னர்  கி.பி.12ம் நூற்றாண்டில் மேலே  கட்டப்பட்டுள்ளது. சுமார் 50 அடி உயரத்திற்கும் மேல் உள்ள கருவறையில் ஸ்ரீமகாவீரரின் சுண்ணாம்பு சுதைச் சிலை நிறுவியுள்ளனர். அதனை திருக்காட்டாம் பள்ளி என அழைத்துள்ளனர்.

                                                வளர்ந்துள்ளது .....


ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீபிரம்மதேவர் ஆலயம் ஒன்றும், அடுத்து கருவறைக்கு பின் புறம் உள்ள தேவ கோட்டத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவுருவம் சுண்ணாம்பு சுதையில், நின்ற நிலையில் செய்யப்பட்டு,  தனி ஆலயமாக கி.பி. 12ம் நூற்றாண்டில் அமைத்துள்ளனர். வடமேற்கு புறம் ஸ்ரீரிபநாதரின் தனியாலயம் தனி வடிவமைப்பை கொண்டு கட்டப்பட்டுள்ளது. தூங்கும் யானையின் பின்புறம் போன்ற வடித்தில் (தூங்கானை மாடம்) சிகர, கலசங்களுடன் கி.பி. 15ம் நூற்றாண்டில் அமைத்துள்ளனர். அதனுள் கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் கற்சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவ்வாலயம் அருகிலுள்ள ஆலங்காட்டா மலை என்ற இடத்திலிருந்து தனித்தனியாக பிரித்து எடுத்து வந்து, இவ்விடம் அங்கிருந்ததுபோல் அழகாக அமைத்துள்ளனர்.

அடுத்து வடபகுதியில்  ஸ்ரீதர்மதேவி தனியாலயம் ஒன்றும் அப்போதே கட்டியுள்ளனர். அதில் சுண்ணாம்புச் சுதையினால் வடிவமைக்கப்பட்டு அழகாக வண்ணம் பூசப்பட்டுள்ளது. நித்ய பூசைக்காக ஒரு கற்சிலையும் மேடையில் வைக்கப் பட்டுள்ளது. அடுத்து நவக்கிரக மேடை யொன்றும் அமைத்துள்ளனர்.

ஆலய நுழைவுவாயிலின் வலது புறம் ஸ்ரீஅகளங்கர் மண்டபமும், அவர் திருவடிகளும் வைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் துவஜமரமும், பலிபீடமும் அமைத்துள்ளனர். அம் மண்டப தூண்களில் அழகிய சிற்பங்கள் நாற்புறமும் செதுக்கப்பட்டுள்ளது.

ஜிநாலயங்களின் முன்னோடியாக விளங்கும் அவ்வாலயத்தில் அனைத்து சமண பூஜைகளும், விழாக்களும் செவ்வனே நடைபெறுவதோடு,  ஆண்டுக்கொருமுறை 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் சிறப்பும் பெற்றதாகும்.




No comments:

Post a Comment