Thursday, October 9, 2014

KOVILAMPUNDI - கோவிலாம்பூண்டி


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 




Location:

 lies on the Google map in the coordination of (12.63633, 79.40121) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click KOVILAMPUNDI
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கோவிலாம்பூண்டி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam → Vandavasi  → Arni road → Vazhapandal road KOVILAMPUNDI      = 70 k.m.

Gingee → Chetpet → PERANAMALLUR road → Vazhapandal road   KOVILAMPUNDI   = 57 k.m.

Vandavasi → Arni road → Vazhapandal road  KOVILAMPUNDI   = 24 k.m.

Arni  → Vandavasi  road   → Vazhapandal road  KOVILAMPUNDI   = 24 k.m.

Kanchepuram  → cheyyar  Thavasi road → Vazhapandal roadKOVILAMPUNDI    = 57 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி→ஆரணி  சாலை →வாழப்பந்தல் சாலை கோவிலாம்பூண்டி= 70 கி.மீ.

செஞ்சி சேத்பெட்→ பெரணமல்லூர்  சாலை  → அரணி சாலை →வாழப்பந்தல் சாலை → கோவிலாம்பூண்டி = 57 கி.மீ.

வந்தவாசி → ஆரணி   சாலை →வாழப்பந்தல் சாலை  →  கோவிலாம்பூண்டி   = 24கி.மீ.

ஆரணி  → மேல சேஷமங்கலம்   →வாழப்பந்தல் →   கோவிலாம்பூண்டி    = 24 கி.மீ.

காஞ்சிபுரம்→ செய்யார்
சேத்பெட் சாலை → அருகாவூர் சாலை → வாழப்பந்தல்   கோவிலாம்பூண்டி    =  57 கி.மீ.







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!








வந்தவாசியிலிருந்து 33 கி.மீ. தொலைவில் ஆரணிசாலை, வாழைப்பந்தல் சாலையில் சென்று செய்யாறு ஆற்றங்கரை பாலத்தில் கிழ்திசை நோக்கி திரும்பும்,  மேல்நகரம்பேடு செல்லும் சாலையில் பயணித்தால் வருவது கோவிலாம்பூண்டி என்ற கிராமம். 10 நூற்றாண்டிற்கு முன்னரே சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்துள்ளனர். ஏனெனில் அக்காலத்தில் கட்டிய ஜிநாலயம் ஒன்று பராமரிப்பு இல்லாமல் அழிவு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தில் சமணர்களே தற்போது இல்லை.

அதன் பழமையான  வடிவமைப்பை காணும் போது, கருவறை, மேற்சிகரம், அதில் உள்ள கர்ணகூடம்(ஒன்றுதான் மிஞ்சியுள்ளது.) தேவகோட்டகத்தில் உள்ள தீரத்தங்கரர் சிலைகள், விமான அமைப்பு, கீழே உள்ள அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் அவற்றில் உள்ள உருண்டை வடிவ தூண்கள் , மேலே உள்ள வேலைப்பாடுகள் போன்றவையே ஆதாரங்களாக தொன்மையை வெளிக்காட்டுகின்றன. பல காலங்களாக முழு சீரமைப்பு இல்லாமல் இருந்துள்ளது என்பது தெரிகிறது.

கிழக்கு நோக்கிய ஜிநாலயத்தில் கோபுரம் இல்லா நுழைவாயில், சுற்றிலும் உயரமான மதிற்சுவர், நடுவே வேதியமைப்பு ஆகியவை கொண்டுள்ளது. (செல்லும் போது காலணி இல்லாததால்( முட்கள் அதிகமிருந்தது) முழுவதும் புகைப்படம் எடுக்க முடியவில்லை, ஆனால் தற்போது சமண தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் சுத்தம் செய்துள்ளனர்.)

மூலவர் ஸ்ரீஆதிநாதர், சமவசரண எட்டுவித சிறப்புகளுடன் செதுக்கப்பட்டு (லாஞ்சனம் இல்லை அதனால் மிக புராதனமான சிலை) வேதிமேடையில் நிறுவப்பட்டுள்ளார். அதற்கு முன்னர் அந்தராளத்தில் பழைய கற்சிலையான ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலை, அதற்கு அடுத்தபடியாக அர்த்தமண்டபம்; அதன் இருபுறமும் ஸ்ரீபிரம்மதேவரின் சற்று பெரிய கற்சிலையும், ஸ்ரீதர்மதேவியின் பெரிய கற்சிலையும் சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள தினபூஜை மேடையில் அழகிய ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலை படிமம் வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடபகுதியில் மேலும் ஒரு மிகப் பழமையான ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலை கற்சிலையும் உள்ளது. ஆலய வளாகத்தின் வடகிழக்கில் ஸ்ரீமஹாவீரர் சிலையும், ஸ்ரீதர்மதேவி கற்சிலையும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.


அடுத்து மகாமண்டபம், முக மண்டபத்துடன் கட்டுமானம் முடிவடைகிறது. அவற்றுக்கு முன் ஒரு பலிபீடமும் உள்ளது. அருகில் உள்ள மேலப்பழந்தை ஆலய அருச்சகர் திரு. தங்கராஜ் (தொடர்புக்கு - 9942778917) அவர்கள் தினமும் சென்று பூஜை செய்து வருகிறார்.

ஆண்டுக்கொரு முறையாவது தென்இந்திய சமணர்கள் (அனைத்து பொருட்களுடன்) சென்று வருவது அவ்வாலய அழிவை தடுக்கலாம்.


Kovilampoondi, a village 33 kms from Vandavasi.( travel thro’ Arni road, Vazhaipandal road, a right turn before Cheyyar river bridge towards Melnagarampedu village country road.) Since 10th century AD Jains were lived in the village. But now no Jain is there.

The ancient composition in the structure influences, especially Sanctum, Shikara’s Karnagood, Devakottaham comprise Thirththankar statues, Viman design, and pillar of Mandapams reveals the antiquity of the temple. Age might be 900 years old. Total repairs and renovations are not undertaken so far.
Non-crowned entrance and all round compound wall of the east facing Temple, has more bushes in the corridor.(So I can’t took more photos with out shoes. Now it was cleard by the Jain Voluntary Organisation.)

 Sanctum attain Shri Adhinathar, with Samavasarn’s eight features, is established on the vedi-pedestal. (Might be 600 years old because no thirthankar’s identification mark(Lanchan) at the bottom) In the section of Anthralam one old fashion Shri Parswanathar idol, second at the Center of the Arthamandap daily pooja platform and a third one on the northside, very ancient but in eroding nature.

Then Mahamandap and Mugamandapam consist round shaped pillars and old design top support blocks. In the southeast side of Corridor Shri mahaveerar and Shri Kooshmandini stone idols, are in eroding nature. The nearby village Melapazhandai priest (vathiar) Mr.Thangaraj (cell no. 9942778917) doing the daily pooja and rituals for the temple.

Annual visit of south Indian jains,(with essential things), can safeguard the temple. 



No comments:

Post a Comment