Wednesday, October 15, 2014

KUZHAMANDAL - கூழமந்தல்


Shri MAHAVEERAR  JAIN  TEMPLE - ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம் 





Location:

          lies on the Google map in the coordination of (12.67969, 79.66306) ie put the latitude,       
         Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click Kuzhamandal
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூழமந்தல் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam Vandavasi→kanchipuram road Kuzhamandal  = 62 k.m.

Gingee Vandavasi→kanchipuram roadKuzhamandal     = 71 k.m.

Vandavasi→kanchipuram road  Kuzhamandal  = 22 k.m.

Arni  → Cheyyar→ kanchipuram road   Kuzhamandal     = 55 k.m.

Kanchepuram  → Vandavasi road→Kuzhamandal    = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை  →கூழமந்தல்  =62 கி.மீ.

செஞ்சி வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை  கூழமந்தல்  = 71 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம் சாலை  கூழமந்தல்    = 22 .மீ.

ஆரணி  → செய்யார்    →  காஞ்சி சாலை   →   கூழமந்தல்     = 55 கி.மீ.

காஞ்சிபுரம்
வந்தவாசி  சாலை  → கூழமந்தல்   =  20 கி.மீ





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



வந்தவாசியிலிருந்து வடக்கு திசையில் காஞ்சிபுரம் சாலையில் 22 கி.மீ. தொலைவில் இடது புறம் உள்ளது கூழமந்தல் கிராமம். அக் கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பல சமணர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கு சான்றாக சென்ற நூற்றாண்டில் வயலில் புதர்களுக்கு நடுவே ஸ்ரீமகாவீரர் சிலையொன்று கிடைத்துள்ளது. அதன் உரிமையாளர் ராஜ் (காசுப்பிள்ளையின் குமாரர்) என்பவர் அருகே உள்ள நகரச் சமணர்களிடம் தெரிவித்த தோடு நில்லாமல் தனது சொந்த முயற்சியில் பாரத வர்´ய திகம்பர் ஜெயின் டிரஸ்டி ன் தென் பகுதியின் பிரதிநிதி யான திரு. எம். கே. ஜெயின் அவர்களின் உதவியுடன் ஒரு ஜிநாலயத்தை கட்டி அஹிம்சை நாயகருக்கு அர்ப்பணித்துள்ளார். அவரே தினமும் அம் மூலவருக்கு பூஜையும் செய்து வருகின்றார்.  இதிலிருந்து மஹாவீரரின் அஹிம்சை கொள்கையில் அவருக்குள்ள தீவிரம் நன்கு வெளிப்பட்டுள்ளது.

அந்த ஜிநாலயத்தின் மூலவர் ஸ்ரீமஹாவீரரின் கற்சிலை அழகாக அமைந்துள்ளது. முழுஉருவச்சிலையாக வடிக்கப்பட்டுள்ள அச்சிலை சமண முறைப்படி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.   அதன் மேல் கான்கிரீட்டால் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்புறம் ஒரு கூரை அமைக்கப்பட்டு ஒரு நுழைவு வாயிலும் அதனைச் சுற்றி மதிற்சுவரும் திருச்சுற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. வயல் காட்டின் நடுவே உள்ள அக் கட்டமைப்பு அழகாக காட்சியளிக்கிறது. தற்காலத்திற்கேற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள அவ்வாலயத்தை தூய்மையாக வைத்துள்ளார் அப்பவ்யர். அருகில் உள்ள அனைவரின் ஆதரவோடு அவ்வாலயம் தினமும் வழிபாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அச் சாலையில் செல்லும் போது அனைத்து சமணர்களும் ஜிநாலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டியது கடமையாகும்.



Kuzhamandal Jinalaya is situated 22 kms from Vandavasi in the Kanchipuram road and get a left turn at the stopping. In ancient years more jains has been lived in the village. Last century a stone idol of shri Mahaveerar was found inside the bush in a paddy field, which proves the Jains trace is in the village in olden days. But no Jain resides there now. The owner Mr.Raj, son of Kasupillai, of the land took initiate for building a Jinalaya here. He conveys the news to many jains for treasure he got. After taking earnest effort and get more help from the Bharath varshiya Digamber Jain Trust personale Mr.M.K. Jain, delegate for the south India,  he finished the construction.  Now he is the only person doing all poojas and rituals daily. What a great man he is by doing such dedication. He proves him one among the follower of Ahimsa principles.

East facing Jinalaya has Lord Mahaveera in the sanctum. An old stone statue, fully carved, embraces the sanctum plinth. In front of the womb-chamber a asbestos sheet roofed shed with entranceway. The whole block is surrounded by compound wall makes as enclosed corridor.

The surrounding residents are worshipping the Lord of the temple. The noble man does the daily Poojas. Lord Mahaveera has more devotees in that area.


 It is our duty to visit the temple and make a darshan, while passing the Jinalaya which will promote the Jainism at there. 





No comments:

Post a Comment