Monday, October 20, 2014

NELLIYANKULAM - நெல்லியாங்குளம்


Shri NEMINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ நேமிநாதர் ஜிநாலயம் 






Location  lies on the map in the coordination of (12.42903, 79.64538) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click NELLIYANKULAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  நெல்லியாங்குளம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Vandavasi→ Melmaruvathur road →Marudadu turn → NELLIYANKULAM    = 16 k.m.

Gingee  V. Pettai→ katteri→ NELLIYANKULAM  = 42 k.m.

Melmaruvathur Vandavasi road Marudadu turn→ NELLIYANKULAM   = 30 k.m.

Arni  → Vandavasi→ Marudadu turn  NELLIYANKULAM   =  60 k.m.

Kanchipuram Vandavasi→ Marudadu turn→ NELLIYANKULAM     = 53 k.m.



செல்வழி:.

வந்தவாசிமருவத்தூர்  சாலைநெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்  = 16 கி.மீ.

செஞ்சி  வெ.பேட்டை  காட்டேரி நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்   42 கி.மீ.

மருவத்தூர்வந்தவாசி சாலை  நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம் = 30 கி.மீ .

ஆரணி  → வந்தவாசி மருவத்தூர்  சாலைநெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம்= 60 கி.மீ.


காஞ்சிபுரம் வந்தவாசி   
நெல்லியாங்குளம் திருப்பம்  நெல்லியாங்குளம் =  53 கி.மீ







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து துவாரகாவதி  நகரத்து ஹரி வம்சத்து  சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும்  சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன் கூஷ்மாண்டி (தர்மதேவி)  யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர்  முதலிய 11  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட  சுக்ல சப்தமியில் 72 கோடி 700    முனிவர்களுடன்  பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



நெல்லியாங்குளம்  கிராமம் வந்தவாசிக்கு தென்கிழக்காக 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. (கீழ்வில்லிவனத்திற்கு அருகில் உள்ளது.) பல நூற்றாண்டுகளாக அவ்வூரில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக கட்டப்பட்ட ஜிநாலயம் ஒன்று உள்ளது. அதன் விரிவாக்கம் அவ்வப்போது நடந்துள்ளது. அதனை அதில் உள்ள மண்டப தூண்கள் மற்றும் வேலைப்பாடுகள் நிருபிக்கின்றன.


தென்திசை நோக்கிய குடவரையும், திருச்சுற்று மதிற்சுவரும் கொண்டுள்ள இந்த ஜிநாயத்தின் மூலவராக ஸ்ரீநேமிநாதர் காட்சியளிக்கிறார்.  கருவறையில் வீற்றிருக்கும் மூலவர் கற்சிலை முக்குடை, சாமர தாரிகளுடன் சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கீழே இரண்டு அடுக்கு மேடையும் அதன் மேல்உள்ள பத்ம மேடை மீது அமர்ந்த நிலையில் சற்று புடைப்புடன் வடிக்கப்பட்டு காட்சி தருகிறார். அதன் மீது விமானம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. திசைக்கு அமர்ந்த நிலையில் இரண்டு தீர்த்தங்கரர்களும், நின்ற நிலையில் நான்கு தீர்த்தங்கரர்களுமாக  நான்கு திசையிலும் 24 தீர்த்தங்கரர்கள் சுதையில் சிலைகள் வடிக்கப்பட்டு  சிகர, கலசங்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.


அர்த்த மண்டபத்தின் தூண்கள் மிகவும் பழமையான உருண்டை வடிவில் உள்ளது. அவ்விடத்தின் நடுவே மற்றும் (உள்ளாலைக்கு) இருபுறமும் உள்ள மேடையில் உலோகச் சிலைகள்  அழகாக அலங்கரிக்கின்றன.  அதில் முக்கிய வழிபாட்டிற்கு உரிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள், நவக்கிரக தீர்த்தங்கரர்கள், 14 ரிஷப-அனந்தர் தொகுப்பு,   பகவான்பாகுபலி, நவதேவதை, பஞ்சபரமேஷ்டி, சித்தபகவான், மகாமேரு, நந்தீஸ்வர தீபம், யக்ஷ, யக்ஷியர்கள் போன்றவை உள்ளன.


அடுத்துள்ள மகாமண்டபத்தின் தூண்கள் அடுத்த காலகட்டத்தில் கட்டப்பட்டதால் சதுர வடிவில் உள்ளது. இரு தூண்களில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அம்மண்டபம் இரும்புகம்பிகளால் கதவு அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாட்டுடன் உள்ளது. அடுத்துள்ள முகமண்டபம் அழகிய தூண்களில் தீர்த்தங்கரர்கள் உருவம் செதுக்கப்பட்டும், சுவரில் ஜினரின் முக்கிய நிகழ்வுகளின் ஓவியங்களும் காணப்படுகிறது.



மேலும் குடவரைக்கு கிழக்கிலும், மேற்கிலும் மண்டபங்கள் உள்ளன. அவை இரண்டும் மேற்கூரையினால் சென்ற நூற்றாண்டில் இணைக்கப் பட்டுள்ளது. கிழக்கு மண்டபத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உலோகச்சிலைகள் மேடையில் பிரபையுடன் அழகாக அலங்கரிக்கின்றன. அதன் முன்னர் உள்ள சிறிய மேடையில் ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலையும், ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. 


ஜிநாலயத்தில் தின பூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை தீபம், விசேஷபூஜைகளுடன் அனைத்து தீர்த்தங்கரர்களின் மோட்ச தின பூஜைகள், அக்ஷய திரிதியை ஸ்ரீரிஷபநாதர் திருவீதியுலா, காணும் பொங்கல் ஸ்ரீதர்மதேவி திருவீதியுலா போன்றவை செவ்வனே நடைபெற்று வருகிறது.  
  

Nelliyangulam village situated about 12 kms southeast of Vandavasi town (near by Kilvillivalam). Jain families are living there since several centuries. They had a Jinalaya and on it several expansions took place at various times.  Such activities were proved by different shapes of pillars and carvings on the pavilions. And the evidences of antiquity are destroyed while doing the repair and renovation works.

South facing entranceway and open corridor is surrounded by high wall. Shri Neminathar, single stone carved statue with eight features of Samavasaran thirthankar on the rear section, the thirthankar figure and three tier pedestals are in protrude form, embraces upon the sanctum plinth. It was crowned by two tier viman has two thirthankars in sitting posture and four in standing on each directions, (totally twenty four) and shikara with padmam, kalash on the top.  

In the partitioned sanctum metal idols are placed on both side of aisle. The Arthamandap supported by round shaped pillars, seems to be very old design of art, and consists of platforms with metal idols and daily pooja statues, typically the thirthankar idols; 24 thirthankar cluster, 14 cluster of Rishbh-Anantha, 9 cluster of Navargaha; Bagavan Bahubali, Navadevatha, Panchaparameti, Shruthaskandam, Nantheeswara dheepam, Mahameru and Yaksh, Yakshis are arranged beautifully.  In front a Mahamandap supported by square pillars has shri Rishabhar, shri Mahaveerar engravings was built in subsequent period, wall paintings display the   history of thirthankars. The three chambers are secured tightly by iron rod gates. Next a Mugamandap porch is in front of the temple vedi block.

Apart from, two porches are built on both sides of the Main entranceway connected by over roof. On the east side 24 thirthankar metal idols with prabha are arranged on a high platform, in front of that Shri Parswanathar, shri Brahmadevar, Shri Dharmadevi stone statues are established upon pedestals.


Especially daily pooja, Nantheeswara pooja, Mukkudai for 30 days, special poojas on Moksha day of all 24 thirthankars and Akshaya thirithiyai day Shri Rishabhdev urchav, Kanumpongal day Shri Kooshmandini urchav are celebrated recurrently.      




No comments:

Post a Comment