Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location lies on the map in the coordination of (12.55979, 79.43346) put the latitude, Longitude on
the search box
Map for Jain pilgrimage centres: Click PERANAMALLUR
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பெரணமல்லூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi → Arni road → PERANAMALLUR = 61 k.m.
Gingee → Chetpet →PERANAMALLUR road → PERANAMALLUR = 46 k.m.
Vandavasi → Arni road → PERANAMALLUR = 23 k.m.
Arni → Vandavasi road → PERANAMALLUR = 23 k.m.
Kanchepuram → cheyyar → Thavasi road → PERANAMALLUR = 56 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வந்தவாசி → ஆரணி சாலை → பெரணமல்லூர் = 61கி.மீ.
செஞ்சி → சேத்பெட் → பெரணமல்லூர் சாலை → பெரணமல்லூர் = 46 கி.மீ.
வந்தவாசி → ஆரணி சாலை → பெரணமல்லூர் = 23 கி.மீ.
ஆரணி → வந்தவாசி சாலை → பெரணமல்லூர் = 23 கி.மீ.
காஞ்சிபுரம் → செய்யார் → தவசி சாலை → பெரணமல்லூர் = 56 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Peranamallur
village is located 23 kms from Vandavasi on the Arni road. The structure of the
temple influences 18th century
temple type. Frequent repairs and renovations are disguising the antiquity of
the temple. But the natives are resided more than the age of temple.
The
Jinalaya has east facing entry, an altar, and a manasthamp of 30 feet height,
made of cement mortar with Thirthankars engrave on four sides. The
corridor is surrounded by a compound wall. Northwest of the
corridor Shri Padmavathy shrine is constructed as a separate temple. On the
northeast, Navagraha idols are installed upon a platform.
Inside
the sanctum Shri Adhinathar granite idol was established on a vedi-platform. It
comprises off eight features of samavasaran Jinar. Next in Antharalayam metal
idols of Thirthankars for worship, 24 thirthankar clusters, Navadevatha,
Panchaparameshti, Nantheeswara dheep, Mahameru, Yakshas, Yakshis are arranged
on a tiered platform.
Then
Arthamandap consists of Shri Brahmadevar on the south and Shri Kooshmandini on
the north, on the center platform regular pooja idols
were seated. In front of arthamandap a Mahamandap has two openings, south and
north of corridor. Then small Mugamandap also constructed and guarded by iron
grill doors.
Daily
pooja, special pooja, Nandheeswara pooja, Mukkudai and Akshaya thirithiyai
festival are conducted regularly like other Jinalayas.
பெரணமல்லூர், ஆரணி சாலையில் வந்தவாசியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் சற்று இடதுபுறமாக அமைந்துள்ளது. ஆலய அமைப்பைக் காணும்போது இரு நூற்றாண்டைக் கடந்த ஆலயம் போல்
தோன்றுகிறது. அதற்கு முன்பே
பல நூற்றாண்டுகளாய் சமணப் பெருமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பல முறை சீரமைப்பு
பணிகள் நடந்ததால் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டு விட்டன.
கீழ்திசை நோக்கிய நுழைவாயிலின்
உள்ளே பலிபீடம், அடுத்து மனத்தூய்மைக் கம்பம் சிமெண்டினால் 30 அடிக்கு மேல் உயரமாக
கட்டப்பட்டு நாற்புறமும் தீர்த்தங்கரர் உருவங்கள் சுதையினால் செய்யப்பட்டுள்ளது.
அழகிய வண்ணப்பூச்சினால் அலங்கரிக்கப்பட்டு நிற்கிறது. திறந்தவெளி திருச்சுற்றினை சுற்றி
மதிற் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வடமேற்கில் ஸ்ரீபத்மாவதி தேவிக்கு சன்னதி
முன்மண்டபத்துடன் ஆலயமாய் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக சிலைகள்
மேடையில் அமைக்கப்பட்டு தனிச்சன்னதியாக விளங்குகிறது.
ஆலய கருவறையில் ஸ்ரீஆதிநாதர்
கருங்கற்சிலை எண் சிறப்புகளுடன், உச்சியில் யாளி சற்று வெளிப்புறமாக
அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே பழைய மூலவர் சிலையும் மேடையில் அமர்ந்துள்ளது. அடுத்த
அந்தராளப்பகுதியில் இருபுறமும் ஏறுபடி மேடையில் அனைத்து உலோகச்சிலைகளும்
வைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய வழிபாட்டுக்கான தீர்த்தங்கரர்கள், 24
தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, நந்தீஸ்வர தீபம், மஹாமேரு
மற்றும் முக்கிய யக்ஷன்,யக்ஷிகள் அலங்கரிக்கின்றனர்.
அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தில்
தென்புறம் ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலையும், வடபுறம் ஸ்ரீகூஷ்மாண்டினி கற்சிலையும்
இடம் பெற்றுள்ளது. நடுவே உள்ள மேடையில் வழக்கம் போல் தின பூஜைக்கான சிலைகள்
வைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் மகாமண்டபம் இருபுறமும் திருச்சுற்றுக்கு செல்ல
வாயில் இரும்புக் கதவுகளுடனும், அதன் முன்னர் உள்ள முக மண்டபம் இரும்பு தட்டிகள்,
கதவுகளுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற ஆலயங்கள் போல் தினபூஜை, விசேஷ
பூஜைகளுடன், நந்தீஸ்வரம், முக்குடை தீபத்துடன், அக்ஷய திரிதியை விழாவும் வளமைபோல்
நடைபெறுகிறது.
No comments:
Post a Comment