Thursday, October 2, 2014

PONNUR HILL (Shri MAHAVEERAR HILL TEMPLE) - பொன்னூர் மலை (ஸ்ரீ மகாவீரர் (மலை)ஜிநாலயம்)




Shri MAHAVEERAR HILL TEMPLE  -  ஸ்ரீ மகாவீரர்  (மலை) ஜிநாலயம்





Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






பொன்னூர் மலை: நீலகிரி மலை, தபகிரி என்றும் வழங்கப் பட்டு வரும் இம்மலை வந்தவாசி யிலிருந்து சேத்பட் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இம் மலையில் பல சமணத் துறவியர்கள் தங்கிச் சென்றதால் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. மேலும் ஆந்திராவின் குந்தகுந்த என்ற ஊரில் பிறந்து தமிழகம் வந்த துறவி ஹேலாச்சாரியார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்துள்ளார். அவரே குந்த குந்தர் எனவும் அழைக்கப்பட்டார். இப் பகுதியில் சமணம் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். இம் மலையில் தங்கியிருந்த போது 84 நூல்களுக்கு மேல் அனைவருக்கும்  வழங்கியுள்ளார். அதில் ஒன்று இன்று உலகளவில் பொதுமறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திருக்குறளாகும். மேலும் இம் மலை ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷி உறைவிடமாக ஏற்றுக் கொண்டு குந்தகுந்தர், அகளங்கர் போன்றோருக்கு காட்சி தந்துள்ளார். இம்மலையில் பல குகைகளில்  துறவியர்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. புனிதமான சுற்றுலாத்தலமாக காட்சி தரும் பொன்னூர் மலை பத்ரபாகுமுனிவரின் சீடர் விசாகாச்சாரியார் தமது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் தங்கியிருந்துள்ளார். பல கல்வெட்டுகள் கல்படுக்கைகளும்,  ஸ்ரீமஹாவீரர் சிலையொன்றும் நிறுவப்பட்டுள்ளது. அது அருகிலுள்ள ஏரிக்கரையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அவருடைய கற்சிலைக்கு அருகில் ஸ்ரீகுந்தகுந்தர் திருவடிகளும் அமைந்துள்ளன. அதனைச் சுற்றி ஒரு மண்டபமும், ஆலய சிகரமும் அமைக்கப் பட்டுள்ளது.  ஆலயத்திற்கு செல்லும் வழி அரம்பத்தில் ஒரு தர்ம சக்ர கம்பம் உள்ளது. ஏறக்குறைய 350 படிகள் கடந்து சென்றால் குன்றின் மேல் ஆலயமும், பாதங்களும் உள்ளது. மிகவும் அழகான பள்ளத்தாக்கில் உள்ள ஆலயங்களின் தோற்றமும் கண்கொள்ளாக்  காட்சியாக உள்ளது. 


அனைத்து சமணரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது வந்து தரிசித்து செல்ல வேண்டிய புனிதமான ஸ்தலமாகும்.எதிரே தங்குமிடங்களும் வசதியாக உள்ளது.



Ponnur malai is located 9 kms from Vandavasi in the Chetpet road. It is a holy place because many ascetics stayed in the hill. About 2000 years back saint Holiness.Helachariyar stayed here, who was born at Kundkundh, a village in Andhra Pradesh. So he called as Kundkundhar. He promotes Jainism in the surrounding places during the period. He wrote more than 82 holy books out of which THIRUKKURAL is taken as common veda for all in the world. Moreover, Yakshi Shri Jwalamalini devi abode the place and blessed the saints Helacharior and Agalangar. It houses many cavern, stone beds and inscriptions. Great muni.Padrabahu’s disciple Holiness.Veerahacharior and his thousands of disciples were staying long period in the hill.

Shri Mahaveerar statue, found in a lake bank near the place installed and the footprints of Kundkundh Archarya are houses in a pavilion on the top of the hill which is crowned by a small tower. It has about 350 stone steps to attain the top. The scenaries and panoramic view added the beauty of the hill. It attracts all for best holy tourism place. A rest houses for staying, in the down of the slope. A Dharmachakra pillar invite the devotees at the beginning of the trekker.


We must visit once in a year for getting charge from the divine place.





No comments:

Post a Comment