Sunday, October 5, 2014

PONNUR HILL (Shri Munisuvirath Temple) - ஸ்ரீ பொன்னூர் மலை (ஸ்ரீ முனிசுவிரதர் ஜிநாலயம் )



Shri MUNISUVIRATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ முனிசுவிரதர் ஜிநாலயம் 




Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  → Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.



விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீமுனிசூவிரத தீர்த்தங்கராதி சகல முனி    கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ராஜகிரக நகரத்து ஹரி வம்சத்து சுமித்திரன் மகாராஜாவிற்கும் பத்மாவதி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீல (கருப்பு) வண்ணரும் 20 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் கூர்மம் (ஆமை) லாஞ்சனத்தை உடையவரும் புரு­வர யக்ஷன் மகாரூபிணி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் மல்லிசேனர் முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பால்குண கிருஷ்ண துவாதசியில் 99 கோடாகோடி 99 கோடி 99 லட்சத்து 999 முனிவர்களுடன்  நிர்ஜர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமுனிசூவிரத தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Ponnur hill is located 8 kms from Vandavasi on the Chetpet road. About 300 meters from the hill foot, a ITI is there. Inside the campus, on the western side, a Jain temple was built by the founder.

Shri Munisuvirathar a black marble made idol resides in the sanctum. A beautiful Mukkudai made of white marble and a viman with kalash on the top. Superstructure of the sanctum was surrounded by a munmandap act as corridor and also an entrance on the eastern side is something different. A compound wall and a gate is also provided.

Daily pooja and other rituals are conducted regularly.





பொன்னூர் மலை, வந்தவாசியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேத்பட் சாலையில் அமைந்துள்ளது. அதன் அடிவாரத்திலிருந்து சிறிது தூரம் மேற்கில் சென்றால் தொழிற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதன் வளாகத்தின் உள்ளே மேற்கு பகுதியில் திறந்த வெளியில் ஸ்ரீமுனிசுவிரத ஸ்வாமி ஜிநாலயம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவருக்கு நடுவே நந்தவனத்தில் ஆலயம் சிறியதாகவும் சிறப்பாகவும் அமைத்துள்ளனர். கருவறையில் ஸ்ரீமுனிசுவிரதரின் கரும் சலவைக்கல் சிலை மேடையில் நிர்மாணிக்கப்பட்டு,  சிரசின் மேல் அழகிய வெள்ளை சலவைக்கல் முக்குடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை சிகரம் மற்றும் கலசத்துடன் வண்ணம் தீட்டப்பட்டு கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி பிரஸ்தரத்தோடு இணைந்த முன் மண்டபம் ஒன்று திருச்சுற்றாக புதுமையாக அமைத்துள்ளனர்.

மூலவருக்கு தின புஜையும், விசேஷ பூசைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.  

No comments:

Post a Comment