Shri Mahaveerar Jain Temple - ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click SETHARAKUPPAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : சேதராகுப்பம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Vandavasi→ Athipakkam road→ Setharakuppam = 4 k.m.
Gingee → v. Pettai→ Nedunkuppam road→ Setharakuppam = 53 k.m.
Melmaruvathur → Vandavasi →Setharakuppam = 25 k.m.
Arni → Vandavasi→ Athipakkam road→ Setharakuppam = 47 k.m.
Kanchipuram → Vandavasi→ Athipakkam road→ Setharakuppam = 43 k.m.
செல்வழி:.
வந்தவாசி→ மருவத்தூர் சாலை→ சேதராகுப்பம் = 4 கி.மீ.
செஞ்சி → வந்தவாசி→ மருவத்தூர் சாலை→ சேதராகுப்பம் = 53 கி.மீ.
மருவத்தூர்→வந்தவாசி சாலை → மருவத்தூர் சாலை → சேதராகுப்பம் = 25 கி.மீ .
ஆரணி → வந்தவாசி → மருவத்தூர் சாலை → சேதராகுப்பம் = 47 கி.மீ.
காஞ்சிபுரம்→ வந்தவாசி சாலை → மருவத்தூர் சாலை → சேதராகுப்பம் = 43 கி.மீ
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Setharakuppam, a hamlet, is
situated at about 8 kms southeast of Vandavasi town. More Jain familes has been
lived several centuries ago. Now only seven Jain residents are there. They offered
their worshiping to Lord.Mahaveera in a remnant of old Jinalaya. Then they proposed
to construct a new structure. They finished the construction in the year AD
2005, by getting donations from devotees and aid from Bharatha Varshiya
digamber Jain Mahasabha Tamilnadu branch.
The new compact Jinalaya has fine
structure of less maintanence. But they have a proposal to expand it in future.
South facing temple got Shri Mahaveerar,
stone carving idol with all features, on the plinth. Above the garbahiruha a
viman has four thirthankar statues in sitting posture with chamara maids and
shikara with tri-umbrella as kalash on the top (as unique). At the aisle of
sanctum Shri Kooshmandini idol is placed in east platform. On the west one has
metal idols of Shri Parshwanathar, Shri Mahaveera, 24 thirthankar cluster, Shri
Dharanendra, shri padmavathy, shri Jwalamalini and so on were seated.
Next to the chamber a terrace hall
is enclosed with walls and Iron gril gate for security. Above the entranceway a
small gallery with Thirthankar was placed. Top of the hall Lion icons on four
corners also placed. An open corridor with pavement is surrounded the temple
structure.
In addion to the daily pooja and special
pooja; Ayutha pooja, shri Mahaveerar Jayanthi and Kanum pongal day urchav for Lord.Mahaveera
are celebrated in grand manner.
வந்தவாசிக்கு
தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் அத்திப்பாக்கம் வழியாக சென்றால் வருவது சேதராக்குப்பம்
கிராமம். அங்கு பல நூற்றாண்டுகளாக சமணர்கள்
வசித்து வருகின்றனர். ஒரு ஆலயம் இருந்து இடிந்ததில் உள்ள மண்டபத்தில் ஜினரை வைத்து
வணங்கி வந்துள்ளனர். தற்போது உள்ள ஏழு சமண இல்லறத்தார்கள் நூதன ஜிநாலயம் கட்ட முடிவு
செய்து, நல்லறம் கொண்ட பலரது உதவியுடனும், பாரத வர்´ய திகம்பர மகாசபை தென் மண்டல கிளையின் உதவியுடனும்
கி.பி. 2005ல், கட்டி முடித்து ஸ்ரீமகாவீரருக்குஅர்ப்பணித்துள்ளனர்.
புதிய சிறிய ஜிநாலயம் மிக அழகாக கச்சிதமான அளவில் பராமரிக்க எளிதான முறையில் கட்டப்பட்டுள்ளது.
தற்கால சூழலுக்கு உகந்ததான அவ்வாலயத்தை பின்னர் விரிவாக்கம் செய்யவும் அவ்வூர் மக்கள் திட்ட
மிட்டுள்ளனர்.
தென்திசை
நோக்கிய ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீமகாவீரரின் கருங்கற் சிலை மிக எளிமையான உருவத்துடன்
அழகாக வடிவமைக்கப்பட்டு வேதி மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்புற விமானம்
நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகளுடன், சிங்க உருவ பொம்மைகளுடன்,சிகரத்தின் மேல் முக்குடை
போன்ற கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள மூலவர் உறையும் அறைக்கு
வெளியே ஸ்ரீகூஷ்மாண்டினி தேவியின் திருஉருவம் மேடையை அலங்கரிக்கின்றது. எதிரே உள்ள
மேடையில் 24 தீர்த்தங்கரர்கள், ஸ்ரீபார்ஸ்வ ஜிநர், ஸ்ரீமகாவீரர் மற்றும் சாசன தேவதைகளான
ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜ்வாலாமாலினி போன்ற தெய்வங்களின் உலோகச்சிலைகள்
வைக்கப்பட்டுள்ளன.
கருவறை
பகுதிக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்களின் சுதை
உருவம் வடிக்கப்பட்டு, கூடம் அமைத்து நுழைவு வாயிலில் பாதுகாப்பு கதவுகள் அமைத்துள்ளனர்.
அதன் மேற்புறம் சிறிய மாடமும் அதில் ஜினரின் உருவம் உள்ளது. நாற்புறமும் சிங்க உருவச்சிலைகள் அமைத்துள்ளனர். அதனை சுற்றி திருச்சுற்றுக்கான வழித்தடம் அமைத்துள்ளனர்.
நித்திய
பூஜைகள், விசேஷபூஜை களுடன், ஆயூத பூஜை,
ஸ்ரீமகாவீரர் ஜெயந்தி, போன்ற பண்டிகைகளும், காணும் பொங்கல் ஸ்ரீமகாவீரர் திருவீதி யுலாவும்
சிறப்பாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment