Shri PARSWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click THENSENTHAMANGALAM
செல்வழி:.
சேத்பட் → அரசூர் சாலை→ தென்சேந்தமங்கலம் = 29 கி.மீ.
Location lies on the map in the coordination of (12.53573, 79.54035)ie
put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click THENSENTHAMANGALAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : தென்சேந்தமங்கலம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi → Karanai road → Thensenthamangalam = 47 k.m.
Gingee → Desur →Mazhaiyurroad → Arasur road → Thensenthamangalam = 46 k.m.
Vandavasi → Karanai road → Thensenthamangalam = 9 k.m.
Villupuram → Tindivanam → Vandavasi → Karanai road → Thensenthamangalam = 86 k.m.
Chetpet → Vandavasi road→ Arasur road → Thensenthamangalam = 29 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → தென்சேந்தமங்கலம் = 47 கி.மீ.
செஞ்சி → தேசூர் → மழையூர் சாலை → அரசூர் சாலை→ தென்சேந்தமங்கலம் = 46 கி.மீ.
வந்தவாசி → கரணை சாலை → தென்சேந்தமங்கலம் = 9 கி.மீ.
விழுப்புரம் →திண்டிவனம் → வந்தவாசி → கரணை சாலை → தென்சேந்தமங்கலம் = 86 கி.மீ.
சேத்பட் → அரசூர் சாலை→ தென்சேந்தமங்கலம் = 29 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
தென்சேந்தமங்கலம், வந்தவாசிக்கு மேற்திசையில் 9 கி.மீ. தொலைவில்
ஆரணி சாலைக்கும், சேத்பட் சாலைக்கும் இடையே அமைந்துள்ளது. அவ்வூரில் அதிகமான சமணக்
குடும்பங்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் தற்போது கால் நூற்றளவிலே உள்ளது. பழைய ஆலயத்தின் தூண்கள் அகற்றப்பட்டிருப்பதைக்
காணும் போது, ஜிநாலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. அதன்
அமைப்பு கட்டுமானங்களைக் காணும்போது அருகில் அந்த வயதினை ஒத்த ஆலயங்களை போலவும் காட்சி
தருகிறது. நவாப் காலத்தில் அவரிடம் காணிக்கையாக நிலத்தை பெற்று நடத்தி வந்ததாக அவ்வூர்
மக்கள் தெரிவிக்கின்றனர். நல்ல பராமரிப்பில் உள்ள ஜிநாலயத்தில், தற்போது 29 அடி உயரத்தில்
மானஸ்தம்பம் எழுப்ப முயற்சி செய்து வருகின்றனர்.
ஸ்ரீபார்ஸ்வநாதரை மூலவராக கொண்ட ஜிநாலயமாகும். ராஜகோபுரமில்லாத
நுழைவாயிலுடன், ஆலயத்தைச் சுற்றி
உயரமான மதிற்சுவருடன்
மத்திம பரப்பளவில் அமைத்துள்ளனர். குடவறையின் இருபுறம் அலுவலகமும் திருச்சுற்றின் முடிவில் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளது.
வடகிழக்கில் சாந்தி(கலச) மண்டபமும் அமைந்துள்ளது.
கருவறையில் ஸ்ரீபார்ஸ்வ ஜிநர், நின்ற கோலத்தில் , சிரசில் ஐந்து தலை நாகத்துடன், ஆள் உயரத்தில் கம்பீரமாக
காட்சி தருகிறார், அர்த்த மண்டபத்தில் படிபோன்ற மேடைகளில் உலோக சிலைகள், வழிபாட்டிற்கு
முக்கியமான தீர்த்தங்கர்கள், 24, 14 (அனந்த நாதர் வரை) தொகுப்பு படிமம், நவதேவதை, பஞ்சபரமேஷ்டி,
ஸ்ருதஸ்கந்தம், யக்ஷ, யக்ஷிகள், ஸ்ரீஜினவாணி, மகாமேரு, ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலை போன்றவை
அழகான பராமரிப்புடன் அலங்கரிக்கின்றன. அதனை அடுத்து முகமண்டபமும் பாதுகாப்பான இரும்பு
தட்டிகளும், அதன் முகப்பில் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் துவஜஸ்தம்பமும் (திருவிழா இருந்திருக்க
வேண்டும்) நடப்பட்டுள்ளது.
அருகில் உள்ள சாந்தி மண்டபத்தில் அழகிய கற்சிலைகள் நாற்திசையிலும்
அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர் (ஸ்ரீஆதிநாதர் சிலை என்றும் சொல்கின்றனர்)
எண்சிறப்புகளுடன் , ஸ்ரீபிரம்மதேவர் (உயரமான கற்சிலை ஆலய சிரமைப்பு பணியில் தோண்டு
போது கிடைத்துள்ளது), ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜ்வாலாமாலினி , ஸ்ருதஸ்கந்தம், இருபுறமும்
ஸ்ரீதர்மதேவி போன்ற கற்சிலைகள் தனித்தனி மேடையில் அமைக்கப்பட்டுள்ளன.
நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை மார்கழி மாதம் முழுவதும்
மற்றும் விசேஷகால
பூஜைகள், மாட்டுப்பொங்கல் அன்று ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் உலோக மூர்த்தியின் திருவீதியுலா
போன்றவையும் செவ்வனே நடைபெற்று வருகின்றது.
Between Arni road and Chetpet road
at 9 kms from the vandavasi town, Thensenthamangalam village lies. Ancient time
more Jain families were resided but now few numbers are living. A jinalaya was
built by the then jains. It has more than 400 years old structure by surveying the dilapidated pillars of Mugamandap.
Apart from they got subsidiary and lands from the King. Navabh, the ruler of that region. The residents are proposed to erect a Manasthamp pillar of 29 feet high.
East facing gate, not crowned, of Shri Parsvanathar
jinalaya is surrounded by tall compound wall. Adjacent to the entrance an
Office room on left and Navagraha shrine on the right. North east of open
corridor a Shanthi (Kalash) mandap enclosed and with south entrance.
Sanctum got Shri Parswanathar granite idol, 5 feet
tall, standing posture, having five headed snake on the back, as mool nayak. Arthamandap
consists metal idols of some important thirthangars, 24, 14 (Anandh virath
purpose), Yakshas, Yakshis, Jinavani, Nandheeswara dheep model, mahameru and
stone idol of Shri Brahmadevar (small one) are arranged on a tiered platform. And a Mugamandap, fenced with grill and an altar
at front edge. A Dwajasthampam (may have more urchavams) also installed in
front of the mahamandap.
Inside the santhi mandap Stone idols are established on
individual platforms. Shri Adhinathar (two no.s or Shri Mahaveer), Shri
Brahmadevar, Shri Padmavathy, Shri Jwalamalini, Shruthaskandam with two statues
of Shri Kooshmandini on both sides were arranged nicely.
Daily Pooja, Nandheeswara pooja, Mukkudai pooja,
special poojas and also a Urchavam in the Month of Thai(January) for Lord.
Parswanathar, are conducted regularly.
No comments:
Post a Comment