Shri MAHAVEERAR JAIN TEMPLE - ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click VAZHAPANDAL
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வாழைப்பந்தல் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )
ROUTE:
Tindivanam → Vandavasi → Arni road → Vazhapandal = 70 k.m.
Gingee → Chetpet → PERANAMALLUR road → Vazhapandal = 57 k.m.
Vandavasi → Arni road → Vazhapandal = 32 k.m.
Arni → Vandavasi road → Vazhapandal = 13 k.m.
Kanchepuram → cheyyar → Thavasi road → Vazhapandal = 56 k.m.
செல்வழி:.
திண்டிவனம் → வந்தவாசி → ஆரணி சாலை → வாழைப்பந்தல் = 70 கி.மீ.
செஞ்சி →சேத்பெட்→ பெரணமல்லூர் சாலை → அரணி சாலை → வாழைப்பந்தல் = 57 கி.மீ.
வந்தவாசி → ஆரணி சாலை → வாழைப்பந்தல் = 32கி.மீ.
ஆரணி → மேல சேஷமங்கலம் → வாழைப்பந்தல் = 13 கி.மீ.
காஞ்சிபுரம்→ செய்யார்→சேத்பெட் சாலை → அருகாவூர் சாலை → வாழைப்பந்தல் = 57 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Vazhapandal, a village located North east direction of
Vandavasi at about 32 kms in the Arni road. However the jains were living
several centuries of years, they built a Jinalaya few centuries back. North
opening of the temple was renovated frequently, would endow to disguise the antiquity.
Ancient years the entry was not crowned. But after years they
built a salai and devakottam with Thirthankar statue on the top. It gives a
grand look. A compound wall is built around the main daity block but now it is
damaged at some sections. So the native jains are proposed to renovate the
temple in near future.
Sanctum got Shri Adhinathar, made of granite and eight
features of Jinar, on a platform. next section of old arthamandapam converted
as Anthralam. Then the new Arthamandap has metal idols of important
thirthankars for worship,
Yakshas, Yakshis are arranged on both side of
openings. Shri Brahmadevar and Shri Kooshmandini stone idols also placed. Next
section named as mahamandap has Thuvarabalagar protrude mortar idols are
engraved on both sides. Then an altar is placed in front of entrance.
All daily, monthly and annual poojas and festivals are
conducted regularly like other Jinalayas.
வந்தவாசியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் வடமேற்கு
திசையில் ஆரணிசாலையில் அமைந்துள்ள கிராமம் வாழைப்பந்தல். அவ்வூரில் பல
நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்துள்ளனர். ஆனால் சில நூற்றாண்டுக்கு முன் தான் ஓர்
ஜிநாலயத்தை உருவாக்கியுள்ளனர். முழுவதும் சிமெண்ட் காரையினால் சீரமைப்பு
செய்ததினால் அதன் தொன்மை சரியாக விளங்க வில்லை. வடக்கு முகமாக அமைத்துள்ளனர்.
ஆலய நுழைவாயில் கோபுர மில்லாமல் இருந்துள்ளது. பிற்
காலத்தில் அதில் சாலையும், தேவகோட்டமும் அதில் தீர்த்தங்கரர் சிலை அமைத்து அழகுபடுத்தியுள்ளனர். சுற்றிலும் மதிற்சுவர்கள் அமைந்துள்ளது. ஆனால் ஆங்காங்கு
பழுதாகியுள்ளது. மேலும் பல சீரமைப்பு பணிகளும் ஆலயத்தில் நிறைய உள்ளது.(அதற்கான
ஏற்பாடுகள் ஆலய நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர்.)
ஆலய திருச்சுற்றுக்குள்
அமைந்துள்ள வேதிப்பகுதியில், கருவறை ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்டுள்ளது. எட்டு
சிறப்புகளுடன் கூடிய கருங்கல்லினால் செய்யப்பட்ட ஜிநரின் (லாஞ்சனம்
பொறிக்கப்படவில்லை) சிலை நிறுவப்பட்டுள்ளது.
அதற்கு முன் ஒரு அர்த்த மண்டபம் உள்ளது.
சில காலம் கழித்து ஒரு
மண்டபம் கட்டி அர்த்தமண்டபமாக மாற்றியுள்ளனர், அதன் இருபுற மேடையில் உலோகச்
சிலைகள் அணிசெய்கின்றன. மேலும் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும்
அலங்கரிக்கின்றன. முகமண்டபமும்
கட்டியுள்ளனர். அதில் இருபுறமும் துவாரபாலகர்கள் சுதையினால் புடைப்புடன் வடித்துள்ளனர். அதன் முன்னர் பலிபீடம் பதித்துள்ளனர்.
பிற ஆலயங்களைப் போல் அனைத்து பூஜைகளும் செவ்வனே நடந்து
வருகின்றது.
No comments:
Post a Comment