Shri MAHAVEERAR JAIN TEMPLE - ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம்
ESAKULATHUR lies on
the Google map in the coordination of (12.4491, 79.42686) ie put the latitude, Longitude on the search box
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : இசாகுளத்தூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Tindivanam → Agarakorakottai → Desur → Esakulathur = 39 kms.
chetpet → Vandavasi road → Endal cross road → Esakulathur = 16 kms.
Villupuram → Gingee → Pennagar → Esakulathur = 63 kms.
Tiruvannamalai → Gingee → Pennagar → Esakulathur = 65 kms.
Vandavasi → Chetpet road → Endal cross road → Esakulathur = 22 kms.
செல்வழி:-
திண்டிவனம் → அகரகொரக்கோட்டை → தேசூர் → இசாகுளத்தூர் = 39 கி.மீ.
சேத்பட் → வந்தவாசி சாலை → ஏந்தல் கூட்டுரோடு → இசாகுளத்தூர் = 16 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → பென்னகர் / சாலை → இசாகுளத்தூர் = 63 கி.மீ.
திருவண்ணாமலை → செஞ்சி → பென்னகர் / சாலை → இசாகுளத்தூர் = 63 கி.மீ.
வந்தவாசி → சேத்பட் சாலை → ஏந்தல் கூட்டுரோடு → இசாகுளத்தூர் = 22 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Esakulathur,
jains living village, is about, 22 kms southwest of Vandavasi, 16 kms southeast
of Chetpet near to the Solaiarugavoor village. A jinalaya passed so many
centuries and was dedicated to Shri Mahaveer Thirthankar in ancient times. so, before
the construction more Jains had been living there. Now the structure has an old
look and more damages due to minimum population of Jains around the temple.
It
got more granite idols with ancient sculpture fashion. Especially the Jinalaya
is importance for Shri Dharmadevi yakshi, so three generation carvings of the
captioned idol preserved here. A native story convey us that the last one, made
for near village temple, was established by the order of Shri Kooshmandini, thro’
dream.
A
eight featured Shri Mahaveerar Jinar granite plate carving is on the plinth of
Gharbagruha. The Simmasana and the figure of Jinar is thrust out from other
features is a unique fashion of that sculpture. And two stone windows are
fitted on two side wall of that chamber. Either side of entranceway Shri
Baghwan Bahubali and Shri Parshwanathar stone sculptures are in standing
posture upon pedestal in the north and south. The chamber is crowned by three
tier Viman, shikhra and kalash. So three tiered Jinar idols are exhibits on
four directions of the tower.
Next
to womb-chamber the Anthralam and rear-section of a squared pavilion are united
for Arthamandap. It has metal idols of Shri Parshwanathar, some thirthankars,
Yaksh and Yashies on either side platforms, including the 24 thirthankars, two
navadevathas stone idols are arranged properly.
The
Mahamandap, the middle of the square pavilion, consists of Nithya pooja dias
and Shri Brahmadevar, sitting on a huge elephant, on southern side and two Shri
Dharmadevi beautiful stone idols on northern side are on individual platforms. It
has two windows and a doorway are constructed for security. Last fore-section
of the pavilion used as Mugamandap. (which is a different layout of temple
plan)
East
gate of the Jinalaya attached with the enclosed compound wall of open corridor.
An altar (only) installed at the front. A Kalash mandap also at the northeast
corner of compound wall.
Daily
pooja, Nandheeswara dheepa pooja and Mukkudai, Audi Friday special poojas are
conducted recurrently. Ii is the high-time for renovation work for minimizes the
deterioration of the ancient Jinalaya.
சேத்பட்டிலிருந்து
16 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் சோலைஅருகாவூருக்கு
அருகிலும் உள்ள கிராமம் இசாகுளத்தூர் ஆகும். ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட
மிகவும் பழமையான ஜிநாலயம் ஒன்று உள்ளது. அங்கே
பல நூற்றாண்டுகளாக அதிக அளவில் சமணக்குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கு சான்றாக இவ்வாலயம் விளங்குகிறது. ஆனால் சமணர்கள்
மிகவும் அருகிவிட்ட நிலையில் உள்ளதால் ஆலயம் சற்று பழைய தோற்றத்துடன் தெரிகிறது.
ஆலயத்தில்
பழைய கலைபாணியில் உள்ள பல கற்சிலைகள் உள்ளன. ஸ்ரீதர்மதேவியின் ஸ்தலமாக உள்ளதை அங்குள்ள
பல கற்சிலைகளை வைத்தே கண்டறியலாம். அருகிலுள்ள
தென்னாத்தூரில் நிறுவுவதற்காக வந்த ஸ்ரீதர்மதேவி சிலையும் அம்மனது ஆணைப்படி அவ்வூரிலேயே
நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மூலவரான
ஸ்ரீமகாவீரரின் கற்சிலை சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் அமைந்துள்ளது. அவர் உருவமும்,
அமர்ந்துள்ள மேடையும் அக்கற்பலகையில் சற்று பிதுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின்
மேற்கிலும், தெற்கிலும் இரண்டு கல்ஜன்னல்கள் காற்றோட்டமாக அமைத்துள்ளது சிறப்பாகும்.
கருவறைக்கு வெளியே வடபுறம் பகவான் பாகுபலியின் கற்சிலையும், தென்புறம் ஸ்ரீபார்ஸ்வ
பகவானின் கற்சிலையும் நின்ற கோலத்தில் நிறுவப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அதன் மேற்பகுதியில் மூன்று அடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டு. கலசத்துடன் உயர்ந்து நிற்கிறது. அதில் இரண்டு
அடுக்கு மற்றும் கிரீவப்பகுதிகளில் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை
அடுத்து அந்தராளப்பகுதியும், மகாமண்டபத்தின் கால்பகுதியினை சற்று உயரதளமிட்டு அர்த்தமண்டபம்
போல் அமைத்துள்ளனர். அந்தராள மேடையில் ஸ்ரீபார்ஸ்வநாதர், சில தீர்த்தங்கரர்கள், யக்ஷ,
யக்ஷியர்கள் உலோகச்சிலைகளும், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, இரு நவதேவதா , ஸ்ரீதர்மதேவி
போன்ற கற்சிலைகளும் இருபுறம் உள்ள மேடையை அலங்கரிக்கின்றன.
மகாமண்டபத்தின்
ஆரம்பத்தில் நித்ய பூஜை மேடையும், வடபுறம் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை உயரமான யானைமீதும்,
தென்புறம் ஸ்ரீகூஷ்மாண்டினியின் இரு கற்சிலைகள் தனித்தனி மேடைகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
முன் பகுதியை முகமண்டபமாக மாற்றும் முகமாக இருபுறமும் ஜன்னல்களுடன் நடுவே கதவுகள் அமைக்கப்பட்டு
மகாமண்டபம் பாதுகாப்பாக முடிவடைகிறது.(ஒரு நல்ல ஆலய வரைபடமாக அமைக்கபட்டுள்ளது)
ஆலய
நுழைவுவாயிலுடன் திறந்த திருச்சுற்றுடன் உள்ள மதிற்சுவர் கீழ்திசையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு பலிபீடம் மட்டும் உள்ளது. திருச்சுற்றின் வடகிழக்கில் ஒரு அழகான 16 கால் கலச மண்டபமும்
அமைத்துள்ளனர்.
உடனடி சீரமைப்புக்காக
காத்திருக்கும் இவ்வாலயத்தில் நித்யபூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, முக்குடை பூஜை போன்றவையும்,
ஆடிவெள்ளி போன்ற விசேஷ பூஜைகளும் வளமைபோல் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment