Shri PARSWANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜிநாலயம்
Location lies on the map in the coordination
of (12.45116, 79.28957) ie put the latitude, Longitude on the
search box
Map for Jain pilgrimage centres: Click Parikalpattu
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பரிகல்பட்டு கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Gingee → Chetpet → Nambedu → Parikalpattu = 61 kms.
chetpet → Polur road → Nambedu → Parikalpattu = 8 kms.
Arni → Chetpet → Polur road → Nambedu → Parikalpattu = 34 kms.
Villupuram → Gingee → Chetpet → Nambedu → Parikalpattu = 76 kms.
Tiruvannamalai → Polur → Chetpet road → Nambedu → Parikalpattu = 52 kms.
Vandavasi → Chetpet → Polur road → Nambedu → Parikalpattu = 38 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → நம்பேடு → பரிகல்பட்டு = 61 கி.மீ.
சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 8 கி.மீ.
ஆரணி → சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 34 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 76 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → சேத்பட் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 52 கி.மீ.
வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை → நம்பேடு → பரிகல்பட்டு = 38 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Parikalpattu,
a village 8 kms travelling from Chetpet and getting a turn at Nambedu in the
Polur road. Though Jains has been living several centuries, they built a Jinalaya
in the Last century. It is a beautiful, compact and economic structure. The Jinalaya
has east entranceway with open corridor wall-enclosure. Shri Parswanathar stone
carving is placed in a gallery on the top of the entry. (which was made for
main deity but neglected because a defamation in the stone colour.)
A black
marble made Shri Parswanathar with seven headed snake established on the Gharpagriha
plinth. It is crowned by simple Viman with four Thirthankar statues on each direction.
The
Arthamandap consists of Metal idols of Shri Parshwanathar and Shri Dharanendrar
Yaksh, shri Padmavathy Yakshi on either side platforms. The chamber is secured
tightly by doors. Then a small pavilion and a Mugamandapam with six pillars also
there.
In
the corridor an Altar and a Dwajasthamp also erected. All jain rituals and
temple poojas are conducted regularly in the well maintained Jinalaya. Contact no. Shri Bahubali Jain - +91 9489953939
சேத்பட்டிலிருந்து 5 கி.மீ. போளூர் சாலையில் பயணித்து நம்பேடு என்ற ஸ்தலத்திலிருந்து தெற்கில்
3 கி.மீ. சென்றால் பரிகல்பட்டு (தேவிமங்கலம்) என்னும் கிராமத்தை அடையலாம். அங்கே பல
நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து வழிபாடுகளுக்கும் வெளியூரில்
உள்ள ஜிநாலயத்திற்கு செல்ல வேண்டி வந்ததால் சென்ற நூற்றாண்டில் அழகான சிறிய, பராமரிக்க
எளிதான முறையில், ஓர் ஜிநாலயம் நிறுவி அதனை ஸ்ரீபார்ஸ்வ ஜினருக்காக அர்ப்பணித்துள்ளனர். தற்போது 8 சமணக்குடும்பங்கள் இருப்பினும் நித்திய
பூஜை மற்றும் அனைத்து பூஜைகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தின்
நுழைவுவாயிலுக்கு மேற்புறம் தேவமாடம்போல் அமைத்து
அதில் ஸ்ரீபாரஸ்வநாதரின் கற்சிலை தலைமீது ஐந்துதலை நாகத்தின் குடையுடன் அழகாக அமர்த்தப்பட்டுள்ளது.
(அச்சிற்பத்தில் வண்ணத்தில் இழைபோல் தோஷம் இருப்பதாக கருதி, மூலவருக்காக வடிக்கப்பட்டதை, மேற்புறம் வைத்துள்ளனர்) திறந்த ஆலய திருச்சுற்று மதிற்சுவர் அவ்வாயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆலய
கருவறையில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் கரும்பளிங்கு கல் சிலை ஏழுதலை நாகத்துடன் அழகாக வடிக்கப்பட்டு
வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் எளிய விமானம் நாற்புறமும் தீர்த்தங்கரர்
உருவத்துடன் சிகர கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து
அர்த்தமண்டபத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் உலோகச்சிலை, மறுபுறம் ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி
உலோகச்சிலைகளும் மேடையை அலங்கரிக்கின்றன. அந்த பகுதி கனமான கதவுகளோடு உள்ளது. அதன்
முன் சிறிய மண்படமும், முகமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய
திருச்சுற்றில் பலிபீடமும், துவஜஸ்தம்பமும் நிறுவப்பட்டுள்ளது. நல்ல பராமரிப்புடன் உள்ள
இவ்வாலயத்தில் காணும் பொங்கலன்று விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
தொடர்புக்கு: ஸ்ரீபாகுபலி ஜெயின் - +91 9489953939
தொடர்புக்கு: ஸ்ரீபாகுபலி ஜெயின் - +91 9489953939
No comments:
Post a Comment