Monday, November 17, 2014

THENNATHUR - தென்னாத்தூர்


Shri MAHAVEERAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம் 




Location  lies on the map in the coordination of (12.43037, 79.44909)  put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click THENNATHUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   தென்னாத்தூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Agarakorakottai → Desur → Thennathur = 39 kms.

chetpet → Vandavasi road → Endal cross road → Thennathur = 16 kms.

Villupuram → Gingee → Pennagar → Thennathur = 63 kms.

Tiruvannamalai  → Gingee → Pennagar → Thennathur = 65 kms.

Vandavasi → Chetpet road → Endal cross road → Thennathur = 22 kms.



செல்வழி:-

திண்டிவனம் → அகரகொரக்கோட்டை → தேசூர்  →   தென்னாத்தூர் = 39 கி.மீ.

சேத்பட் → வந்தவாசி சாலை → ஏந்தல் கூட்டுரோடு →  தென்னாத்தூர்  = 16 கி.மீ. 

விழுப்புரம் → செஞ்சி →  பென்னகர் / சாலை →  தென்னாத்தூர்  = 63 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →  பென்னகர் / சாலை →  தென்னாத்தூர்  = 63 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை → ஏந்தல் கூட்டுரோடு →  தென்னாத்தூர்  = 22 கி.மீ. 




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




வந்தவாசியிலிருந்து தென்மேற்காக 22 கி.மீ. தொலைவிலும் சேத்பட்டிலிருந்து தென்கிழக்காக 16 கி.மீ. தொலைவிலும் மடம், சோலைஅருகாவூர், இசாகுளத்தூர் என்னும் ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமம் தென்னாத்தூர் ஆகும். அருகில் சமண குகைப்பள்ளியான சீயமங்கலக்குன்று உள்ளது. மேலும் முற்காலத்தில் நாளிகாபுரம் என்றும் தென்னாத்தூரை அழைத்துள்ளனர். ஆலயத்தின் கருவறை சீயமங்கலத்தின் எல்லையிலும், குடகரை போன்ற மற்ற பகுதி இவ்வூர் எல்லையிலும் அமையுமாறு கட்டியுள்ளனர். ஆகவே இரண்டும் நேர்கோட்டில் அமையாமல் உள்ளதைக் காணலாம்.

அக்கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்திருந்தாலும் சில நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ரீமகாவீரருக்கு ஒரு ஜிநாலயம் எழுப்பி சமர்ப்பித்துள்ளனர். நல்ல கட்டமைப்பும் தோற்றமும் கொண்ட இந்த ஜிநாலயத்தை அவ்வூர் மக்கள் நன்கு பராமரித்து வருகின்றனர். தற்போது மனத்தூய்மைக்கம்பம் எழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கீழ்திசை நோக்கிய அவ்வாயலத்தின் நுழைவுவாயில் திருச்சுற்று மதிற்சுவருடன் காட்சியளிக்கிறது. குடவரையின் முகப்பில் இருபுறமும் உள்ள ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் புடைப்புச் சிற்பங்கள் அமைதியான முகத்துடன் அருளாசி வழங்குகின்றன. வெளியே வாகன வண்டியின் (பட்டரை) இருப்பிடம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே இரு பலிபீடங்களும் திறந்த வெளி திருச்சுற்றின் நடுவே ஆலயத்தின் வேதிப்பகுதி அமைந்துள்ளது.

மூலவரான ஸ்ரீமகாவீரரின் உருவம் சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் கற்பலகையில் அழகாக வடிக்கப்பட்டு வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. லாஞ்சனம் இல்லாததால் மிகவும் பழமையான சிற்பமாக கொள்ளலாம். அதன் மேற்பகுதியில் இருதள விமானம் சிகர கலசத்துடன் ஓவ்வொரு அடுக்கிலும் நான்கு தீர்த்தங்கரர் சிற்பங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. இடைநாழிப்பகுதிக்கு அடுத்து அர்த்தமண்டபம் ஆகும்.

அர்த்தமண்டபத்தின் நடுவே தினபூஜை மேடையில் அரஹந்தரின் கற்சிலை அபிஷேக வழிபாட்டுக்காக அமர்த்தப்பட்டுள்ளது. அதன் இருபுறம் உள்ள மேடையில் உலோகச்சிலைகள், முக்கிய தீர்த்தங்கரர்கள் பலரும், 72 திரிகால தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள் , 14  ரிஷபஅனந்தர் தொகுப்பு (அனந்த விரத நோன்பிற்குரியவர்கள்), நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, மகாமேரு, நந்தீஸ்வர தீப வடிவம் மற்றும் முக்கிய யக்ஷ,யக்ஷியர்கள் சிலைகள் அனைத்தும் அழகாக அலங்கரிக்கின்றன. இவ்வாலயத்தில் உள்ள திரிகால தீர்த்தங்கரர் வடிவம் 24+24+24 என மூன்று அடுக்காக வார்க்கப்பட்டுள்ளது சிறப்பாகும். மேலும் முனுசூவிரதர் சலவைக்கல் பிம்பம், ஸ்ரீபார்ஸ்வ பகவான், நவதேவதா போன்ற கற்சிலைகளும் அதில் அடங்கும்.

அடுத்துள்ள மகாமண்டபத்தில்  ஸ்ரீமகாவீரரின்  ரு துவாரபாலகர்  கற்சிலைகள் இருபுறமும் நிறுவப்பட்டுள்ளது. முகமண்டபத்துடன் ஆலயம் முடிவடைகிறது.

ஜிநாயலங்களில் நடைபெறும் தின பூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, முக்குடை பூஜை, நவராத்திரி விழா மற்றும் கடைசி தினத்தன்று ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவீதி யுலா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீமணி ஜெயின் - +91 8681842740



Thennathur a Jains’ habitat is, 22 kms southwest of Vandavasi, 16 kms southeast of Chetpet near to the Madam, Solaiarugavur and Esakulathur villages. And also adjacent to the historical place Seeyamangalam cavern temple. The sanctum area belongs to Seeyamangalam village administration and the remaining is in Thennathur area. So the two structures are not in line of alignment.

Many Jains were in the village in ancient times. So they built a Jianalaya several centuries ago and dedicated to Shri Mahaveer Jinar. Since, they maintained the temple in good manner. Now the natives proposed to erect a Manasthamp for empowering the temple.

The open corridor of the temple is surrounded by a wall and entrance gate in the eastside. Everyone would get the blessings of Shri Parshwanathar by two standing carvings in the entranceway (Kudavarai) while entering the temple. A temple-cart shed is built on the outside of the entry. The main Vedi-block was constructed with two altars.

Shri Mahaveer thithankar, a stone plate with eight features carving, is established upon a plinth. It belongs to several centuries ago by no-lanchan carving.   It was crowned by two tiers Viman, Shikhar and Kalash on the top. The two stages consist of four thirthankar idols on four directions.

Arthamandap contains three platforms, the center one is for Daily pooja a stone made statue of Arihanthar, on either side the metal idols of 72 thirthankars cluster, 24 thirthankars cluster, 14 Rishbh-ananthar cluster, Navadevatha, panchaparameshti, Mahameru, Nandheeswara dheebha model and Yaksh, Yakshies are arranged orderly. In addition to the metal models marble Munisuvirat, Stone carving of shri Parshwanathar, Navadevatha were included. The three tiered 24 thirthankars in 72 jinar model is unique one.

Two Dwarabalagar stone sculptures are installed either side of aisle in the Mahamandap. A Mugamandap with tight secured iron gates also lies in the block.

All Jain pooja and rituals like Daily pooja, Nandheeswara pooja, Mukkudai pooja, Navarathiri rituals are conducted regularly. A festival for Shri Parshwanathar has been celebrated on the last day of Navarathri every year. 

Contact No. Shri Mani Jain  - 91 8681842740



No comments:

Post a Comment