Friday, November 14, 2014

THIRUNATHAR KUNDRU (GINGEE) - திருநாதர் குன்று (செஞ்சி )


  CHADURVIMSADHI ROCK TEMPLE - சதுர்விம்சதி  ஜினாலயம் 




Map for Jain pilgrimage centres:   Click THIRUNATHAR KUNDRU
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  திருநாதர் குன்று கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Gingee → Thirunathar kundru = 31 kms.

chetpet → Gingee → Thirunathar kundru = 31 kms.

Villupuram → Gingee →  Thirunathar kundru = 42 kms.

Tiruvannamalai  → Gingee → Thirunathar kundru = 42 kms.

Vandavasi → V. pettai → Mailam road → Deevanur turn →   Gingee → Thirunathar kundru = 52 kms.



செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி →    திருநாதர் குன்று = 31 கி.மீ.

சேத்பட் → செஞ்சி →    திருநாதர் குன்று = 31 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →    திருநாதர் குன்று = 42 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →    திருநாதர் குன்று = 42 கி.மீ.

வந்தவாசி → வெ. பேட்டை → மைலம் சாலை → தீவனூர் → செஞ்சி →  திருநாதர் குன்று = 52 கி.மீ.






யேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா
திருஷ்ட்வா மரேந்த்ரைர் முதா
கல்யாணே வ்ர­பாதயோ ஜினவரான்
சம்பூஜிதா ஸ்தாநிஹ
த்ரைலோக்யாதிபதி ந்யஜா ம்யதிசயோ
மேதான் சதுர்விமசதிம்
சாந்த்யர்த்தம் ஜகதாம் சராசரகுரும்
திர்த்தங்கரான் சாம்ப்ரதம்.
----

   நிலவுல கெழுந்த  நீதியினை அளித்த  
  அலகில் பெருங்குணத்து ஆதிஇடபன்  
  விஜயவீரன் அஜித பட்டாரகன்  
  அம்பவழ மேனிச் சம்பவநாதன்  
  அரத்தகு சேவடி அபிநந்தநனும்  
  உரைத்தகு மேனி உத்தமசரீரன்  
  தொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்  
  பரம மூர்த்தி பத்மபிரபனும்  
  ஏர்பெறு காட்சி சுபாரீசநாதன்  
  சந்திரவீறொளி சந்திரபிரபன்  
  புரையறு தவத்துப் புஷ்பதந்தன்  
  சிங்கம்ஏந்து அணைச் சீதளநாதன்  
  திருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்  
  மலர்மிசை நடந்த வாசுபூஜ்சியன்  
  மேமல் மேனி விமலபட்டாரகன்  
  அருள்நெறி யளித்த அனந்த சித்தன்  
  தருமலை உடைய தருமபட்டாரகன்  
  தவநெறி யளித்த சாந்திபட்டாரகன்  
  கொந்தார்மலர்மழை குந்து பட்டாரகன்  
  அந்தர வினையின் அரபட்டாரகன்  
  தொல்லை வினை கெடுத்த மல்லிபட்டாரகன்  
  முகடுபெற  வுயர்ந்த முனிசுவிரதர்  
  அரிட்ட நெறியின் நமிபட்டாரகர்  
  அஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி  
  பட்ட வினைபகல் பாரிஸநாதன்  
  சித்தர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்தமானன்  
  என்றிவர் இருபத்து நால்வரையும்  
  நாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த  
  மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!!  




In olden days Gingee, in Villupuram district, was called as Simmapurinadu. In and around the place has got rich Jain heritages. The town is composed by three parts called Chakrapuram, Krishnapuram, Sirukadampur. Thirunathar kundru rock is in the Singapuram alias Sirukadampur area. It is about 2 kms from the centre of the town. Anciently it was a forest area.

Thirunathar kundru has it’s importance due to bas-relief work of 24 Thirthankars carvings (same is influenced in Kazhugumalai relief work in Madurai district) and two stone inscriptions one in Tamil Brami and another in Tamil letters. A Sculpture of Shri Adhinathar at the bottom in sitting posture and Shri Mahaveerar on the top northside in Standing posture.

Tamil Brami inscriptions belong to 4th (or 6th) Century scripts and reveal the event of Holiness. Chandrananthi, Jain monk has been took Sallekana (fastings) for 57 days before death. The next one in Tamil letters recording the matter ie Holiness. Elayapattarar, Jain Muni observes 30 days fasting before getting demise.

And the bas-relief sculptures are carved to commemorate the fasting up to death of Jain monks. There are 24 Jinars carved on a big rock forehead near the natural cave. Thirthankaras are arranged in two rows in sitting posture. These carvings contain two kshamaras (whisks) on both side of a Thirthankara in cross style and tri-umbrella protrudes, with limit, over each sculpture. The unique feature of this place rarely found.


Every year nearby Jains celebrate the holy rock with special Pooja and anointed the carvings in the month of Chithirai or Thai.   


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிப்பகுதியை சிம்மபுரிநாடு என்று அழைப்பர். சமணப்பாரம்பரியம் மிக்க பரப்பாகும். அத்தலத்தை சக்கராபுரம், கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். சிங்கபுரம் என்ற சிறுகடம்பூரில் உள்ளது திருநாதர்குன்று. நகரின் மையத்திலிருந்து வடமேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இக்குன்று முற்காலத்தில் காடுகளாக இருந்துள்ளது. 

அக்குன்றில் சதுர்விம்சதி தீர்த்தங்கரரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பாறை உள்ளது. (மதுரை மாவட்டப் பகுதியில் உள்ள கழுகுமலையில் தான் இதுபோன்று 24 தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்களின் தொகுப்பு உள்ளது.) மேலும் 2 இடங்களில், அடிவாரத்தில் ஸ்ரீஆதிநாதரின் அமர்ந்த நிலை முக்குடைகளுடன் சற்று சிதைந்த நிலையிலும், மேலே வடபகுதியில் நின்ற நிலை ஸ்ரீமகாவீரரின் சிலைகளும் உள்ளன. (இலாஞ்சனம் அக்காலத்தில் பொறிக்கும் பழக்கம் இல்லை போலும்) அப்பகுதியில் கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழந்ததற்கான சான்றாக இரு கல்வெட்டுகள் அக்குன்றில் காணப்படுகின்றன. புனிதர் சந்திரநந்தி என்ற சமணத்துறவி ஒருவர் 57நாட்கள் சல்லேகனை நோன்பிருந்து உயிர் துறந்ததை தமிழ் பிராமி எழுத்திலும், அடுத்து கி.பி. 9ம் நூற்றாண்டைச் சார்ந்த மற்றொன்றில் புனிதர் இளைய பட்டாரர் என்ற துறவி 30 நாட்கள் சல்லேகனை விரதமிருந்து உயிர் துறந்ததையும் தமிழில் செதுக்கியுள்ளனர். 


முனிகள் வாசம் செய்த அந்த குகைகோவிலில் , பாறையின் நெற்றியில் இரண்டு அடுக்குகளாக 12 தீர்த்தங்கரர்களின் இரு தொகுப்பு சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பத்மாசன கோலத்தில் இருபுறமும் சாமரைகள் குறுக்கே பிணைக்கப்பட்டும் (வேறு இடங்களில் இந்த கலைஅம்சம் பின்பற்றபடவில்லை) தலைக்கு மேல் அளவான புடைப்பில் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டு மிக அழகாக காட்சி தருகிறது. மேலும் அந்த அமைதியான சூழலில் பல முனிகள் அமர்ந்து தவம் செய்துள்ளதை தெளிவாக தெரிவிக்கிறது. அச்சிற்பங்கள் அங்கு சல்லேகனா இருந்து உயிர் நீத்த துறவிகளின் நினைவாக செதுக்கப்பட்டுள்ளது.


அருகில் உள்ள செஞ்சி சமணர்கள் சித்திரை (தை) மாதத்தில் ஒரு நாள் அச்சிற்பத்தொகுதிக்கு அபிஷேக , பூஜைகள் செய்து வழிபடுவதை வளமையாக கொண்டுள்ளனர்.


1 comment:

  1. Excellent presentation Sir.Very valuable documentation
    thank you Sir

    ReplyDelete