Wednesday, November 26, 2014

TIRUMALAI (Mahaveerar Jinalayam) - திருமலை (ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம்)



Shri MAHAVEERAR JAIN TEMPLE - ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம் 



Map for Jain pilgrimage centres:   Click TIRUMALAI
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  திருமலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 78 kms.

chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 25 kms.

Arni → Polur road → Vadamathimangalam → Tirumalai = 20 kms.

Villupuram → Gingee → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 93 kms.

Tiruvannamalai  → Polur  → Arni road → Vadamathimangalam → Tirumalai = 48 kms.

Vandavasi → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 55 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 78 கி.மீ.

சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 25 கி.மீ.

ஆரணி → போளுர் சாலை   → வடமாதிமங்கலம் → திருமலை = 20 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி  சாலை → வடமாதிமங்கலம் → திருமலை = 49 கி.மீ.

வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை →  மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 55 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜிநாலயங்களில் ஒன்றாக திகழும் திருமலை திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூரிலிருந்து ஆரணிசெல்லும் வழியில் உள்ள வடமாதிமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஊராகும். அவ்வூர் குகைக்கோவில், பாறைச்சிற்பக்கோவில் மற்றும் கட்டடக் கோவில் மூன்றும் ஒருசேர அமைந்துள்ள சமண புண்ணியத் தலமாகும். மேலும் பாறைச்சிற்பங்கள், குகைப்பாழிகள், ஓவியங்கள், வரலாற்று கல்வெட்டுகள் அனைத்தும் உள்ள மிகவும் பழமையான மலைத்தொடராகும். சோழர், பல்லவர், சேரர், ஹொய்சளர், சம்புவராயர் போன்ற மன்னர்களின் வரலாற்றை கொண்டுள்ள கல்வெட்டுகளும் உள்ள ஒரு சமண நினைவகம்.

கி.பி. 7 ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழ்ந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பழங்காலத்தில் சமணம் தழைத்திருந்த போது அப்பகுதி வைகாவூர், ஸ்ரீசைலபுரம் என்றும், மலைப்பகுதிக்கு திருமலை என்றும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்தும் திருமலை என அழைக்கப்பட்டுள்ளது.  திருமலை என்னும் மலைத்தொடரில் அடிவாரத்தில் இரு ஜிநாலயங்களும், மலைமீது ஸ்ரீநேமிநாதரின் 16 அடி பாறை சிற்பக்கோவிலும், ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயமும், பாதச்சுவடுகளும்  உள்ள சிறப்பான சமண ஸ்தலமாகும்.

மேலும் நேமிநாதரின் சாசன யக்ஷியான ஸ்ரீதர்மதேவி தனது முற்பிறவியில் சமண முனிவருக்கு பணிவிடைகள் செய்து ஆகாரமளித்ததின் காரணமாக கணவனால் வஞ்சிக்கப்பட்டு தனியே பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள் என்றும், இறந்த பின்னர் அடுத்த பிறவியில் தர்மதேவி யக்ஷியாக பிறந்து திருமலையில் தனது குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணுடன் வாழ்ந்து வந்தாள் எனவும் வரலாறு பகர்கின்றது. மேலும் அவள் முற்பிறவிக்கணவன் யக்ஷியான செய்தி யறியாமல் அவளை நெருங்கவும்,  அவள் தான் தற்போது யக்ஷியானதைச் சொல்லி தனது  சொரூபத்தை காட்டியதும்,  அதன் ஒளியைக்கண்டு மயங்கி மடிந்ததும்; பின்னர் அவன் சிங்க வாகனமாக மாறியதன் வரலாற்றை சித்தரிக்கும் தத்ரூபமான சிற்ப வடிவத்தினை கொண்டுள்ள மலையாகும். அச்சிற்பத்தொகுப்பு கி.பி. 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

 தற்போது அத்தலப்பகுதி இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.


Tirumalai is small village is an historical importance place for jains, which is situated 4 kms from Vadamathimangalam (a spot in Arni-Polur road), Polur taluk, Tiruvannamalai dist., Tamilnadu. It has jain heritages of all category ie cavern, rock and structured temples. And remarkable for Jain-pallies (learning center), caves, mural paintings and stone inscriptions. The inscriptions reveal the rule of Cholas, Pallavas, Cheras, Hoysalas and Sampuvarayar kings had always given partronage to the monuments. So many research scholars coming regularly for analyse the memorable events. 

Since 7th Century AD jains has been living this village. Anciently it was called as Vaigavur, Srisailapuram and the hill area is Tirumalai. Tirumalai, range of mountains, consists of two Jinalayas at the bottom and 16 feet high Shri Neminathar stone carving and Shri Parswanathar shrines at the top with holy foot-prints.

The protector goddess of Shri Neminatha thirthankar, called as Shri Kooshmandini (Dharmadevi) freezes with the hill. On the previous birth, she was abandoned by her husband with two daughters for devoutness among Jain munis. After getting demise she became an Yakshi named as Shri Kooshmandini, on her rebirth. But the previous birth husband wants to resume his married life with her. Then she explained that she acquired the state of Yakshi. After heard the story, he was unconscious and demised. Suddenly he got rebirth as lion and become a seat for the Yakshi. A beautiful carving of Shri Dharmadevi on the rock influences the story. It belongs to 10th Century AD art.


All are safeguarded and maintained by Archeology survey of India.  


அடிவாரத்தில் உள்ள முதற்கோவில் ஸ்ரீபஞ்சபரமேஷ்டியர்கள் ஆலயமாகும். (அன்று காண அனுமதியில்லை) பின்னால் மூன்றடிகிணறு யென்ற கிணற்றின் பள்ளம் உள்ளது. தருமதேவி தம் குழந்தைகளின் தாகத்தைத்தீர்க்க அக்கிணற்றின் நீரை கொடுத்ததாக கூறுவர். அதனையடுத்து மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தில் நுழைந்ததும் தெரிவது ஸ்ரீமகாவீரரின் ஆலயமாகும். அவ்வாலயம் கி.பி. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் ஆளுயர ஸ்ரீமகாவீரரின் சுண்ணாம்புச் சுதையில் செய்யப்பட்ட அமர்ந்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது. அதன் பின்னால் முற்காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றது. அதன் மேற்பகுதியில் மூன்றுதள விமானம் சிகர கலசங்களுடன் உள்ளது. அதில் 24 தீர்த்தங்கரர்களின் உருவங்கள் லாஞ்சனையின்றி காணப்படுகின்றது.

அர்த்தமண்டபத்தில்  ஸ்ரீமகாவீரரின் கற்சிலையொன்று சமவசரண ஜினரின் எட்டுஅம்சங்களுடன் உள்ளது. அவ்வாலயத்தில் மகாமண்டபம் வரையில் உயரமாகவும், முகமண்டப பகுதி தாழ்வாகவும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாலயத்தில் ராஜராஜசோழன் காலத்திய (கி.பி. 1006) கல்வெட்டும், ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டும் உள்ளது.


At the slope of Tirumalai hill, a Rajagupuram which comprises of three tier structure with compound wall has a Panchaparameshti shrine near the entrance. A well called as MoondradiKinaru, was used by the near by people in ancient times. The story of shri Dharmadevi indicate that she had been used the well for feeding her children on her previous life. Next, the complex has Shri Mahaveerar Jinalaya with Garbhagriha, Arthamandap, Mahamandap with steps to reach and Muhamandap on the floor level. The sanctum has lime mortar idol of shri Mahaveerar about 4 feet high on the plinth. Art of fresco paintings on the back of the idol. It was crowned by three stage viman, consists of twenty four thirthankar idols without lanchan on four directions.

Apart from, a granite carving of shri Mahaveera with eight features placed in the Arthamandap porch. Two inscriptions of King Rajaraja Chola (BC 1006) and King Rajendra Chola period are at the bottom. 



குந்தவை நாச்சியார் ஜிநாலயம்:
அதன் வழியே உள்ள படிக்கட்டுகளில் ஏறி மலைபக்கம் சென்றால் ஸ்ரீகுந்தவை நாச்சியார் கட்டிய ஸ்ரீநேமிநாதர் ஆலயத்தின் குடவரை வரவேற்கிறது. அதனுள் சென்றதும் ஸ்ரீசதுர்முகி கற்சிலை மேடையுடனும், தனியே ஒரு பலிபீடமும் திருச்சுற்றில் உள்ளது. அவ்வாலயம் கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம். மகாமண்டபம், முகமண்டபம் போன்ற கலை அம்சங்களுடன் விளங்குகிறது. மேற்பகுதியில் அறுகோண வடிவில் விமானத்தின் அடித்தளம் உள்ளது. அதனால் முன்னர் விமானம் இருந்து சிதைந்து போயிருக்கலாம்.

Kunthavai Nachiar Jinalaya:
Shri Neminathar Jinalaya was built by Shri Kundhavai nachaiyar of Chola reign adjacent to and few feet above the Mahaveerar temple. It has few steps to reach. A Kudavarai (entranceway) structure is attached with corridor enclosure. A Chadhur mugi viman-model and altar are placed in the corridor. The 11th Century AD Jinalaya consists of Garbahiruha, Anthralam, Arthamanp, Mahamandap and Mugamandap porches. On top of santum has hexagonal basement structure, might be the residuals of demolished viman.




ஆலயக் கருவறையில் ஸ்ரீநேமிநாதர் கற்சிலை வேதிகையில் உள்ளது.(உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை) வெளியே மண்டபத்தில் ஸ்ரீநேமிநாதரின் கற்சிலை முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன்  பின்பகுதியில் மூங்கில் இலைகள் செதுக்கப்பட்டுள்ளதால், அவர் மூங்கில் மரத்தடியில் அமர்ந்து கேவலக்ஞானம் பெற்றதை நினைவுறுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் கலைப்பாணி கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததால் குந்தவை பிராட்டியார் செய்து வைத்த முதல் மூலவராக கொள்ளலாம். ஸ்ரீபிரம்மதேவருக்கும், ஸ்ரீஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன. மேலும் அவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டின் மூலம் அதன் மண்டப பகுதி 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

அவ்வாலயத்திற்கு தென் பகுதியில் ஒரு நினைவு பீடம் உள்ளது. அது சமண முனிகள் ஸ்ரீவாதீப சிம்மர் சல்லேகனா விரதமிருந்து முக்தியடைந்ததை குறிக்கும் முகமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் சமண சித்தாந்தவாதியாக நெடுங்காலமாக அப்பகுதியில் வாழ்ந்துள்ளார். மேலும் க்ஷத்திர சிந்தாமணி என்னும் அறநூலினை அர்ப்பணித்துள்ளார்.

The sanctum got shri Neminathar idol on the plinth. (It was no-admission zone during the visit) Another idol of Shri Neminathar, stone carving, with Mukkudai is seated on the porch. Bamboo leaves etch on the back of the idol indicates the enlightenment-tree of Shri Neminatha Jinar. It might be the first installed Moolnayak idol because it belongs to 11th Century AD fashion of art. Shri Brahmadevar and Shri Jwalamalini idols were also established in the Jinalaya. The front porch was built in 16th Century AD. 


On the southern corridor of the temple on pedam is installed on a platform, to commemorate the Shrivatheebha simmar Muni. He attain moksha after taking upto-demise fasting at Tirumalai hundred years back. He also dedicate a jain sithantham named as Kshetra Sinthamani.


பாறைச் சிற்ப கோவில்:

அவ்வாலயத்திற்கு  வட பகுதியில் உள்ள மலையில் பாறைச்சிற்பங்கள் தொகுதிகளாக உள்ளன. அவற்றிற்கு பிற்காலத்தில் சுவர் எழுப்பி சன்னதிகளாக மாற்றியுள்ளனர். அக்குறுகலான படிகளில் ஏறிச் சென்று பார்த்தால் ஸ்ரீதர்மதேவி (கூஷ்மாண்டினி தேவி) புடைப்புச்சிற்பம் நான்கடிக்கு கூடுதலாக உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. (அவர் அருகில் உள்ள சுனையில் முற்பிறவியில் அமிழ்ந்து உயிர் துறந்த பின் ஸ்ரீநேமிநாதரின் ஸ்ரீகூஷ்மாண்டினி யக்ஷியாக தோன்றினாள் என கதையில் கூறப்பட்டுள்ளது.) 
மறுபுறம் பகவான் பாகுபலிநாதரின் திருவுருவம் உடலில் வாஸந்தி கொடியுடனும், தலையில் ஜடாமுடியுடனும், இருபக்கத்திலும் பிராமி, சுந்தரி என்ற இரு சகோதரிகளும், மேலே இந்திரனும், வித்தியாதரர்களும் தரிசிப்பதாக செதுக்கப்பட்டுள்ளது.


Along the northern side of temple, bas-relief sculptures are on the top surfaces of the rock. Then it was closed by wall and made as shrines. On raising with the staircases Shri Kooshmandini, at a height of 4 feet, mount on lion and with two girls and a maid carving visible beautifully. Bahavan Bahubali itches has bunch of hair on head and crawling vein over body. Two sisters of Brami and Sundari carvings are on either side. 



அடுத்துள்ள ஸ்ரீஆதிநாதரின் (ஸ்ரீநேமிநாதர் என்றும் சொல்லப்படுகின்றது) சிற்பம் அமர்ந்த கோலத்தில் முக்குடை சாமரைதாரிகளுடன் வடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஸ்ரீபார்ஸ்வநாத பகவானின் சுமார் நான்கடி உயர நின்ற கோலத்திலான சிற்பம்  ஐந்து தலைநாகத்துடனும், கமடன் உபசர்க்க பாவனையுடனும், ஸ்ரீதரணேந்திரர், ஸ்ரீபத்மாவதி உருவங்களுடனும் செதுக்கப்பட்டுள்ளது. கி.பி. 10ம் நூற்றாண்டின் கலை செல்வங்கள் அனைத்தையும் அருகில் சென்று தரிசிக்கும் வண்ணம் படிகள் அமைத்திருப்பது அனைவரும் செய்த பாக்கியமாகும்.

Shri Adhinathar bas-relief with Mukkudai over the head and Shamarai maids are on either side in the sitting posture. Shri Parshwanathar Bahavan, 4 feet hieght carving with five-headed snake on the back in the standing posture. Kamadan, Shri Dharanendrar, Shri Padmavathy also in the cluster. The bas-reliefs are incised in the 10th Century AD. 



குகைப்பகுதி:
அடுத்துள்ள குகைப்பள்ளிகளுக்கு படிகளில் சென்றால் அங்கே சிறிய மேடைகளும், ஓவியங்கள் மேற்புறத்திலும், சுவற்றிலும் காண்கின்றன. திருமலைப் பகுதிகளில் கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. அக் குகை பள்ளிகள் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்பக்காலத்தில் உள்ள குகைகளை பிற்காலத்தில் பல அறைகளாக தடுத்து அதில் மேடைமீது சுண்ணாம்புச் சிலைகளை வைத்துள்ளனர். ஆனால் அவை காலப்போக்கில் அழிந்து மேடை மட்டும் உள்ளது. அதில் பல ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றது. அக்குகைப்பகுதிக்கு கீழே தனி அறைகளில் மூன்று தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் இலாஞ்சினை இல்லாமல் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகில் உள்ள கல்வெட்டில் சேரமன்னன் அதியமானுக்கு பின் தோன்றிய சிற்றரசன் பற்றிய செய்தி யுள்ளது.


After reaching cave chamber consists of three Vedi-pedams has no idols might be damaged in the due course; Mural drawings are on the ceiling and side walls but mutilated in many spots. Belongs to 7th Century AD, reveals the existences of Jains in the caves. Underneath of the rock three shrines are bifurcated. Three thirthankar idols were placed there. Nearby a inscription belong to the Chera reign of King Adhiyaman period.



அக்குகை பள்ளிகளுக்கு கீழே கிழக்கில் மேலும் இயற்கையான குகைப்பகுதியும், ஒரு நீர்ச்சுனையும் உள்ளது. அதன் அருகிலும் கல்வெட்டுகள் உள்ளன. அக்குகைகளில் அக்காலத்தில்  துறவிகள் வாழ்ந்துள்ளதை அதனருகே உள்ள மருந்துக்குழிகள் தெரிவிக்கின்றன.
திருமலை அக்கால சமண ஆன்மீக வரலாற்றை தெரிவிக்கும் மையமாக உள்ளதில் ஐயமில்லை.


Along the natural caves and water-puddle more inscriptions are present hereby. Medical-pits are ditched there for treating the people by the Jain monks.

Tirumalai, the divine village, disclosed the glory of Jainism since ancient times.

No comments:

Post a Comment