Sunday, December 28, 2014

ANANTHAPURAM (ARNI) - அனந்தபுரம் (ஆரணி)


Shri ANANTHANATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீஅனந்தநாதர் ஜிநாலயம்




Location:


lies on the map in the coordination of 12.66649, 79.27131ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click SAIDAPET
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சைதாப்பேட்டை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Ananthapuram (saidapet) = 78 kms.

Kanchipuram → Arcot → Arani → Ananthapuram (saidapet) = 72 kms.

Vellore  → Arni → Ananthapuram (saidapet) = 31 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Ananthapuram (saidapet) = 93 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Ananthapuram (saidapet) = 60 kms.

Vandavasi → Arni → Ananthapuram (saidapet) = 44 kms.

செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 78 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 72 கி.மீ.

வேலூர் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 31 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 60 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 44 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Ananthapuram is a part of Arni town near saidapet locality. An old Jinalaya, unpredictable age, was dedicated to Shri Anandhanatha Jinar and maintained by the native descendants of Jains. The locality also called in the name of the Moolavar. Regular repair and renovations might conceal the antiques of the temple. 

It got Gharbahriha, Arthamandap and other aspects of Dravidian temple art design. North facing Jinalayas’ entranceway is attached with the alround compound wall and also an altar placed in front of the vedi-block alongside of the open corridor.

A black granite stone, totally etched, statue was installed on the plinch. The pedestal, Prabha back-circle are also incised along with the stone. It has a lid with two tiers Viman having four Jinar idols in each stages. Next to the gharbahriha, the chamber has metal idol of important pantheons placed on either side platforms. .....

ஆரணியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பகுதிக்கு அருகில் அனந்தபுரம் என்ற இடத்தில் ஸ்ரீஅனந்தநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீஜிநாலயம் ஒன்று உள்ளது. அவ்வாலயம் அங்குள்ள சமண வழிக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பல சீரமைப்புகளைக் கண்டதால் அவ்வாலயத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. 

வடதிசை நோக்கிய அவ்வாலயத்தின் நுழைவு வாயிலுடன் அதன் சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் திராவிட பாரம்பரிய கலைஅம்சங்களான கருப்பக் கிருஹம்,  அர்த்தமண்டபம், திறந்த திருச்சுற்று, பலிபீடம்  போன்றவற்றுடன் விளங்குகிறது. 

ஜிநாலய கர்ப்பக்கிருஹ வேதிகையில் ஸ்ரீஅனந்த நாதரின் முழுஉருவ கருங்கற் சிலை பீடம், பிரபை வட்டத்துடன் செதுக்கப்பட்டு ஆகம விதிப்படி நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் துவிதள விமானத்துடன், ஒவ்வொரு தளத்தின் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளும், சிகர கலசங்களுடன் அமைக்கப் பட்டுள்ளன. கர்ப்பக்கிருஹத்தின் அடுத்த பகுதியில் இருபுறமும் உள்ள மேடைகளில் ஆலய தெய்வங்களின் முக்கிய உலோகச் சிலைகளை அமர்த்தியுள்ளனர். ....


The prayer pavilion has a platform at the center for placing daily pooja idols as usual. On either side platform consists of stone carved statues of Old Moolavar, Shri Anandhanathar, Shri Brahmadevar were established. Another platform has Shri Kooshmandini, Shri Padmavathy, Shri Jwalamalini are installed. A beautiful cement mortar statue of Shri Padmavathy also placed as separate shrine.

The old Moolavar might be 600 years old sculpture art. It has samavasaran Jinars' eight aspects in its carving. Also some portions are defacing due to depreciation. Now painting work is going on vigorously. 


All Jain poojas and rituals are conducted and festivals are celebrated regularly. Have a visit when we are travelling on the enroute. 

Contact No. Shri Nagaraj +91 9442424001

-------------


வழிபாட்டு மண்டபத்தின் நடுவில் தின பூஜைக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.  அதன் இருமருங்கிலும் உள்ள மேடைகளில் பழைய மூலவரான ஸ்ரீஅனந்தநாதர் சிலையும், ஸ்ரீபிரம்மதேவர் சிலையும் அமர்த்தப் பட்டுள்ளன. மேலும் தனி மேடையில் ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீஜ்வாலாமாலினி தேவி யர்களின் கற்சிலைகள் அலங்கரிக்கின்றன.  மேலும் ஸ்ரீபத்மாவதி தேவியின் சுதைச் சிற்பம் தனி சன்னதியாக நிறுவப்பட்டுள்ளது. 

பழைய மூலவர் சிலை மிகவும் தொன்மையானதாகும். அதன் கலையம்சங்கள் 600 ஆண்டுகளை கடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அதன் சில பகுதிகள்  தேய்வடைந்தும் காணப்படுகிறது. தற்போது ஆலயத்தில் வண்ணப்பூச்சு வேலை நடைபெற்று வருகிறது.


அனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது. ஆரணிக்கு அருகில் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவ்வாலயத்திற்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.

தொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001

No comments:

Post a Comment