Monday, December 29, 2014

PUDHUKAMUR - புதுகாமூர்


Shri MAHAVEERAR  JAIN TEMPLE -  ஸ்ரீ மஹாவீரர்  ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.68118, 79.29116)ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click PUDHUKAMUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  புதுக்காமூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Pudukamur = 78 kms.

Kanchipuram → Arcot → Arani → Pudukamur = 72 kms.

Vellore  → Arni → Pudukamur = 31 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Pudukamur = 93 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Pudukamur = 60 kms.


Vandavasi → Arni → Pudukamur = 44 kms.



செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → புதுக்காமூர் = 78 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → புதுக்காமூர் = 72 கி.மீ.

வேலூர் → ஆரணி → புதுக்காமூர் = 31 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → புதுக்காமூர் = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி → புதுக்காமூர் = 60 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → புதுக்காமூர் = 44 கி.மீ.







 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





A Jinalaya was dedicated to Shri Mahaveerar by the native jains of surrounding at Pudhkamur, a locality in Arani town. It resembles like a north-india Jains’ temple. (esp. as Madhya Pradesh temple) Two octagon shaped structures are unified by line walls and a staircase. One chamber is used as prayer pavilion and another has two tiers of Garbagrihas. The bottom one has Shri Mahaveerar statue and top one has Shri Santhinatha Jinar statue is closed upon by prism shaped Viman and a Kalash on the peak. North facing entrance gate was enclosed by alround wall structure. One side of the open corridor has garden with plants.

The Mahaveerar statue is made of black marble stone of absolute carving in the meditating (sitting) posture. The beautiful polished idol was established on a plinch, is also associated with metal idols of some important Thirthankars, Siddha model, Nandheeswara dheepa model, Navadevatha, Panchaparameshti.

On the top chamber has Shri Santhinathar, white marble stone of absolute carving in standing posture, is on a platform.

All poojas and rituals are conducted as per Jain customs and procedures.  We should have a visit while we are travelling on the enroute. 


ஆரணி நகரின் ஒரு பகுதியான புதுக்காமூரில் வசிக்கும் சமண இல்லறத்தார்கள் ஸ்ரீமகாவீரருக்காக ஒரு ஜிநாலயத்தை கட்டி அர்ப்பணித்துள்ளனர்.  வட இந்திய ஜிநாலய கலையம்சத்துடன் (மத்திய பிரதேச ஜிநாலய வடிவம் போல்) கட்டப்பட்டுள்ளது.  எண்கோண வடிவ இரு கட்டமைப்புகளை ஒன்றாக இணைத்து அதன் நடுப்பகுதியில்  மாடிப்படிகள் அமைத்துள்ளனர். முன்  பகுதியை வழிபாட்டு மண்டபமாகவும், பின் பகுதியை இரண்டு தள கருப்பக்கிருஹங்களாகவும்  பாவிக்கப்பட்டுள்ளது.  கீழ் தளம் ஸ்ரீமகாவீரருக்காகவும், மேல் தளம் ஸ்ரீசாந்திநாதருக்காவும் அமைத்து அவற்றின் மீது கூம்பு பட்டை வடிவ விமானமும், அதன் உச்சியில் கலசமும் வைக்கப் பட்டுள்ளது.  வடக்கு நோக்கிய வாசலுடன் ஆலய சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது.  ஆலய திருச்சுற்றின் மேற்கு பகுதியில் நந்தவனமும் உள்ளது.

அடித்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீமகாவீரரின் சிலை, அமர்ந்த தியான நிலையில், கருமை நிற பளிங்கு கல்லால் முழுவடிவ சிற்பமாக செதுக்கப் பட்டு வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் வடிவங்களும், நவதேவதை, பஞ்சபரமேட்டிகள், சித்த பகவான், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் போன்றவைகளும் அலங்கரிக்கின்றன. 

மேல்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீசாந்திநாதர், நின்ற நிலையில், வெண் பளிங்கு கல்லால்  முழுவடிவ சிற்பமாக செதுக்கப்பட்டு  மேடையில் நிறுவப்பட்டுள்ளார்.

இவ்வாலயத்திலும் மற்ற ஜிநாலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் சமண ஆகம விதிமுறைப்படி அந்தந்த பருவத்தில் நடைபெறுகிறது.



No comments:

Post a Comment