Shri Neminathar Jain Temple - ஸ்ரீநேமிநாதர் ஜினாலயம்
Location lies on the map in the coordination of (12.5244, 79.12645)ie
put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click RENDERIPATTU
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ரெண்டேரிப்பட்டு கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Gingee → Chetpet → Polur → Rendripattu = 80 kms.
chetpet → Polur → Rendripattu = 28 kms.
Arni → Polur road → Rendripattu = 25 kms.
Villupuram → Gingee → Chetpet → Polur → Rendripattu = 95 kms.
Tiruvannamalai → Polur → Arni road → Rendripattu = 37 kms.
Vandavasi → Chetpet → Polur → Rendripattu = 57 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 80 கி.மீ.
சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 28 கி.மீ.
ஆரணி → போளூர் சாலை → ரெண்டேரிப்பட்டு = 25 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு = 95 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → ஆரணி சாலை → ரெண்டேரிப்பட்டு = 37 கி.மீ.
வந்தவாசி → சேத்பட் → போளூர் → ரெண்டேரிப்பட்டு =57 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து
துவாரகாவதி நகரத்து ஹரி வம்சத்து சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த
திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு
ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன்
கூஷ்மாண்டி (தர்மதேவி) யக்ஷியர்களால்
சேவிக்கப்பட்டவரும் வரதத்தர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம்
கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட சுக்ல சப்தமியில் 72 கோடி 700 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம
ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Renderipattu, a
jain hamlet in Tiruvannamalai district, 2 kms from Polur town in the Arani
road. Many centuries the village has Jain families. In olden times the native
jains done their worships and religious rituals to the nearby villages Kunnathur,
Tirumalai, etc. Last century they decided to built a temple in the village
itself and construct a beautiful Jinalaya. But the moolavar Shri Neminathar
statue was brought from Visharam, near Arcot. It denotes the 9th-11th Century Jain sculpture art.
The Jinalaya is
very compact size of ease-maintenance. It has Garbahriga, Arthamandap and
Mugamandap proportionately. East facing vedi-block has north side entranceway
and full wall enclosure. A open corridor
and Nandavanam on its southside.
The Moolavar
statue of Shri Neminathar stone plate carving, a bas-relief, has 4 feet height
with samavasaran Jinar's eight features of beautiful itchings is on the plinth. Shamara
(whisk) maids has Prabha circle on their back is an unique art. Above the sanctum a simple Dravidian style
viman with Shikara and Kalash was constructed. Shri Neminathar is in the Sugasana
Dthyan posture.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமண வசிப்பிடங்கள் கொண்ட கிராமங்களில் ஒன்றான இரெண்டேரிப்பட்டு , போளுர் நகரத்திலிருந்து ஆரணி சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக சமணர்கள் அவ்வூரில் வசித்து வந்தனர். தங்களது ஆலய தொழுகைக்காகவும், சமய சடங்கிற்காகவும் அருகிலுள்ள குன்னத்தூர், திருமலை போன்ற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு ஜிநாலயத்தை கட்டமைத்து ஸ்ரீநேமிநாதருக்கு அர்ப்பணித் துள்ளனர். ஆனால் அம்மூலவர் சிலையானது ஆர்க்காடுக்கு அருகில் உள்ள விஷாரம் என்னும் ஊரிலிருந்து தருவிக்கப் பட்டதாகும். அதன் சிற்பக் கலைப்பாணி கி.பி. 9‡11 நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது.
சிறிய அளவில் பராமரிக்க எளிதாக உள்ள அவ்வாலயத்தில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், முகமண்டபம் போன்றவை கச்சிதமான அளவில் அமைக்கப்பட்டுள்ளது. வடபுற வாயில், திருச்சுற்று மதிற்சுவருடன் அமைக்கப்பட்டுள்ள கீழ்திசை நோக்கிய ஜிநாலயமாகும். திறந்த திருச்சுற்றின் தென்புறம் ஒரு நந்தவனமும் உள்ளது.
ஆலயக் கருவறையில் 4 அடி உயரமுள்ள ஸ்ரீநேமிநாதரின் கற்பலகை புடைப்புச் சிற்பம், சமவசரண தீர்த்தங்கரரின் எட்டு அம்சங்களுடன் , சுகாசன தியான கோலத்தில் வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதில் உள்ள சாமரைதாரிகளின் பின்புறம் உள்ள பிரபா வட்டம் தனித்தன்மையான வடிவமைப்பாகும். அந்த வேதிஅறையின் மேல் எளிய அழகான விமானம் சிகர, கலசத்துடன் காட்சியளிக்கிறது.
Arthamandap consists of center platform has Daily pooja metal idol of Shri Neminathar. On either side raised structure has metal alloy idols of Thirthankars, Nandheeswara Dheep, Yaksha, Yakshis and Ashtamangal models. In the Mugamandap two Dwalabalagar stone statues are established on either side of aisle.
At front of the vedi-structure an altar is placed in the open corridor. Also a new absolute incised Statue of Shri Neminathar in the Dhyan sitting posture was seated on a platform has small roof on the overhead.
All Jain poojas and rituals like Daily pooja, quartely Nandheeswara pooja, Annul festivals like Mukkudai, Navarathri, are conducted regularly with the assistances of the local Jain families.
அர்த்தமண்டபத்தின்
நடுமேடையில் தினபூஜை உலோக பிம்பமாக ஸ்ரீநேமிநாதர் அமர்ந்துள்ளார். இருபுறம் உள்ள மேடைகளில் தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீபம்,
யக்ஷ, யக்ஷியர்கள் மற்றும் அஷ்டமங்கல மாதிரி வடிவங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றிற்கு வெளியே முகமண்டபத்தில் இருபுறமும் ஆழகிய
இரு துவாரபாலகர்களின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆலய
திறந்த திருச்சுற்றின் வேதிஅமைப்பிற்கு முன்னர்
பலிபீடமும், தென்புறத்தில் ஸ்ரீநேமிநாதரின்
முழுமை உருவமாக வடிக்கப்பட்ட கற்சிலை, மேடையில் நிறுவப்பட்டு மேலே கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வூரில்
வசிக்கும் அனைத்து சமண குடும்பங்களின் உதவியோடு தினபூஜை, நந்தீஸ்வர பூஜை, முக்குடை, நவராத்திரி போன்ற பண்டிககைளும்
செவ்வனே நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment