Tuesday, March 17, 2015

CUDDALORE - கடலூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  -   ஸ்ரீ ஆதிநாதர்  ஜிநாலயம்



Location:

lies on the Google map in the coordination of (11.72101, 79.77063) ie put the latitude, Longitude on the search box



Map for Jain pilgrimage centres:   Click CUDDALORE
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கடலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Pudhuchery → cuddalore   = 65 kms.

Vandavasi → Tindivanam → Pudhuchery → cuddalore   = 101 kms.

Tiruvannamalai  → Tirukovilur → Panruti → cuddalore  = 107 kms.

Tiruchy  → Madapattu → Panruti → cuddalore   = 184 kms.


Gingee → Tindivanam → Pudhuchery → cuddalore   = 97 kms.


செல்வழி:-

திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 65 கி.மீ.

வந்தவாசி  → திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 101 கி.மீ.

திருச்சி → மடப்பட்டு → பண்ருட்டி → கடலூர் → கோலியனூர் = 184 கி.மீ.

திருவண்ணாமலை  → திருக்கோவிலூர் → மடப்பட்டு → பண்ருட்டி → கடலூர் = 107 கி.மீ.


செஞ்சி → திண்டிவனம் → புதுச்சேரி → கடலூர் = 97 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



கடலூர் என்னும் சமண திருத்தலம் வங்காள விரிகுடா கடலின் ஒரு துறைமுகத்தில் அமைந்துள்ளது.  1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த தருமசேனர் என்னும் சமண துறவியை திருவாவுக்கரசராக அறிந்திருப்போம். அவர் ஆரம்ப காலத்தில் திருப்பாதிரிபுலியூரில் அதாவது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் உள்ள சமணப் பள்ளியில், சைவ மதத்தில் பிறந்திருந்தாலும் திருமண வாழ்வில் உள்ள துன்பங்களை களையும் பொருட்டு தன்னை ஐக்கிய படுத்தியுள்ளார். அங்கு ஆகமங்கள் பல கற்று துறவு நெறியில் பல ஆண்டுகள் வாழ்ந்து பெளத்த மதத்தினரோடு வாதப் போரில் வென்று இருள்நீக்கியாராய் இருந்தவர் தருமசேனராக (சேன கணத்தில் ஒருவராக) அழைக்கப்பட்டார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரித்திர உண்மை. அவ்வாறெனில் அக்காலத்திற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாய் அங்கு சமணம் தழைத்தோங்கி இருந்தது தெளிவாகும்.  அதன் பல அடையாளங்கள் தற்போதும் அதனைச் சுற்றி ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்துக் கொண்டே உள்ளது. தருமசேனர் அப்பராக அவருடைய தமக்கையால் மாறிய பின்னர் சைவ மதம் அவரால் அப்போது ஆண்ட  அரசர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல சமண அடையாளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஆதிநாதரின் கட்காசன நிலையில் வடிக்கப்பட்ட தொன்மையான ஒரு கற்சிலையை மூலவராக கொண்ட ஒரு ஜிநாலயம் கடலூர் துறைமுகத்திற்கு அருகே  19ம் நூற்றாண்டில் முற்காலத்தின் நெருக்கடிகளில் மதம் மாறாத பழைய பரம்பரையைச்  சேர்ந்த விரு­ப நைனார் குமாரர் விஜயபால நைனாரால் அப்போதைய வெள்ளைக்கார ஆட்சியாளரிடம் ஆலய இடம் ஒதுக்கியமைக்கான உரிமையை பெற்று கட்டப்பட்டது.


நடுத்தர அளவில் அமைந்த அவ்வாலயம் தமிழக ஜிநாலயங்களின் அனைத்து அம்சங்களும் பெற்று திகழ்கிறது. கீழ் நோக்கிய ஜிநாலயம் கருவறை வேதிகையில் கருங்கல் பலகையில் நின்ற கோலத்தில் முழுஉருவ சிலையாக தலையில் சுருள் முடிகளுடன் (புதல்வர் பாகுபலியின் தோற்றத்தில்) வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதன்  பீடத்தில் அதிநாத ஜிநரின் நான்கு க்ஷேத்ரபாலகர்கள் உருவங்களும், யக்ஷன் உருவங்களும், நான்கு சிங்கங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் வேலைப்பாடுகள் கி.பி. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். பூமிக்கு அடியிலிருந்து 1860 ல் தோண்டி எடுக்கப்பட்டது  ஆகும். (மேலும் அதிக அடையாளங்கள் புதையுண்டு கிடப்பதை அகழ்வாராய்ச்சி செய்தால் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.)   



Cuddalore is a port town of Bay of Bengal sea in Tamil nadu. More than 1500 years back Dharumasenar alias Thirunavukararasar a saint had been living and adorning Jainism. Though he was born in Shaiva family but he adapt the Jain philosophy and learnt the scriptures by joining in a Jain Palli (mutt) at Thirupathiripuliyur ie ancient Padaliputhram. He was praised by other saint of the mutt. He won the Buddist by attending a debate and became called as Dharumasenar, title given by the Jain palli. After re-adaption of Shaivam by Dharmasenar, the Jainism was averted and punished the Jains by the ruler of that time. So we concluded the Jainism was glory during and before. The remnants of Jain monuments are abondan in the area, were identified by the researchers. If the excavation takes place in the area we will got more Jain vestiges.

After getting the permission for the site from the then Collector in 1881 AD by Shri Vijayabala nainar s/o Shri Virushaba nainar, a descendant of Jain origin, unearthed, Shri Adhinathar fully carved granite Statue in a standing posture, belongs to 6th century BC,  was installed in a new Jinalaya near the port.

The medium sized layout Jinalaya got Dravidian styled structures. The Rishbadev, Moolavar stone idol comprises with curled hair (like his son Shri Bahubali) was established on a plinth. Four Kshetrabalagar, four side entry security guards of samavasarn, two Yakshas and four lions are engraved at the bottom of podium. The designs were influenced the art of 6th century BC. It was unearthed in 1860 at nearby place.




அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் உலோகச் சிலைகள் ஏறு வரிசையில் மாடங்கள் அமைத்தும்இருபுற மேடை மீதும் அழகாக அமர்த்தப்பட்டுள்ளன.  தின பூஜைக்கான சிலைகள் கருவறை மேடையில் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து முக மண்டபமும் திருச்சுற்றும் அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிருஹத்தின் மேல் ஏக தள விமானம் திராவிட கலை பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் நாற்புறமும்,  ஜினர் சிலைகள் சாமரை தேவர்களுடனும்மூலையில் இரு ரிஷ­ப சிலைகள் அமர்ந்த நிலையிலும் சுதை வேலைபாடுடன் காட்சி தருகிறது. சிகர பத்ம கலசம் உச்சியில் உள்ளன.  வேதி பகுதியின் வெளிப்புறம் பித்தி கம்பங்கள்பின்புறம் தேவ மாடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள்  ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலை உள்ளது.  ஆலய திருச்சுற்றின் வடபுற சுவரின் வழியே சென்றால் கிழக்கு நோக்கிய சன்னதியில் ஸ்ரீபார்ஸ்வநாதர்,  ஸ்ரீதரணேந்திரர்,  ஸ்ரீபத்மாவதி  உலோகச்சிலைகள் மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அதனை அடுத்து தென்புறம் நோக்கிய படி நான்கு சன்னதிகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.  முதலாவதாக ஸ்ரீக்ஷேத்ர பாலகர்அதனை யடுத்து ஸ்ரீகூஷ்மாண்டினிஸ்ரீமகாவீரர் (உலோகச்சிலையில்)ஸ்ரீபிரம்மதேவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்  முகமண்டபத்தின்  முன்பகுதியில் பலிபீடமும் மேடையுடன் காணப்படுகிறது.
மற்ற ஜிநாலயங்களைப் போன்று தினபூஜைநந்தீஸ்வர தீபம்முக்குடை போன்ற விசே­ பூஜைகள்பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தர்மகர்த்தா திரு. ஜ. தேவகுமார் குடும்பத்தினரால் நிருவகிக்கப் படுகிறது.

தொடர்பு கொள்ள: திரு. தேவ. ஜெயசுந்தர்  ‡   செல். +91 7502088802




Metal idols of Jinalaya are exhibits on a platforms and a vertical gallery in the Artha Mandapam. Daily pooja statues are seated under the main deity. The mugamandap has an altar at the front edge. A single stage proportionate Viman was crowned the garbahriham displays four Jinars with whisk maids and twin bulls at the corners of each direction. Shikhar, padmam and Kalash are on the peak of tower. On the back of garbhagriha a small idol of Shri Parshwanathar is seated inside a Deva madam.

Opening of northern wall, the annexture of the temple, got five shrine rooms. On the east facing Shri Parshwanathar idol with Shri Dharanendran and Shri Padmavathy idols are on a stepped podium. Remaining four shrines of facing south are Shri Kshetrabalagar, Shri Kooshmandini, Shri Mahaveerar and Shri Brahmadevar with Shri Poorna and Shri Pushkala devis were installed consecutively. All are surrounded by compound wall.

The temple is administered by trustees of Shri J.Devakumar’s family, Cuddalore port.

The poojas, rituals and festivals are conducted regularly. A definite visit by the passersby might safeguard the treasure for future.

Contact No. Shri D. Jayasundar +91 91 7502088802






No comments:

Post a Comment