Sunday, April 10, 2016

SHIRLAL - ஷீர்லால்

SHRI ANADHANATHAR JINALAYAM  -  ஸ்ரீஅனந்தநாதர் ஜிநாலயம் 

 



Location: with latitude, longitude of (13.29759, 75.05614)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.29759, 75.05614)




Bangaluru → Hassan → saklespur→ Dharmasala → Belthangady → Aladangady → Bajagoli -→ Shirlal = 380 Kms.

Mysore → Srirangapatna → Hassan→; saklespur → Dharmasala →; Belthangady -→ Aladangady -→Bajagoli →; Shirlal = 319 Kms.


-----------

ஷிர்லால் திகம்பர் ஜைன் பஸ்தி

சரித்திரப்புகழ் மிக்க வராங்கம் ஸ்தலத்தை விட்டு மாலை 5.45 மணியளவில் கிளம்பினோம். அடுத்து ஷிர்லால் திகம்பர ஜைன் மந்திர் செல்ல முடிவெடுத்திருந்ததால் கார்காளா சாலையில் 5 கி. மீ. க்கும் மேலாக பயணித்ததும் கொடுஹோல் எனும் இடத்தில் இடது புறம் உள்ள வழிகாட்டிப் பலகையை பார்த்ததும் திருப்பினோம்.

உள்ளே சென்றதும் நீண்ட நாட்களுக்கு  முன் சென்றதால் வழி சரியாக புரியவில்லை. திருப்பத்தில் பைக்கில்  சென்ற ஒருவரிடன் விசாரித்தோம். அவரே அவ்வழியில் செல்வதாக சொல்லி விட்டு முன்னே வழிகாட்டிச் சென்றார்.


மேற்குத் தொடர்ச்சிமலையில் சஹ்யாத்ரி குன்றிற்கு அடிவாரத்தில் அமைந்த சிறிய குக்கிராமம் ஷிர்லால். விவசாயம் முனைப்பாக நடைபெறுவது தெரிந்தது. அதனால்  விளைபொருட்களுக்கு பஞ்சமில்லை.  சாலை அகலமாக இருந்தாலும் இருபுறமும் உயர்ந்த ரப்பர், பாக்கு, யுக்காலிப்டசு, அசோகம் போன்ற மரங்களால் சூழப்பட்டிருந்தது. கீழ்புறம் மரங்களுக்கு இடையே வெளிகள் அதிகம் இருந்தாலும் முழுவதும் நிழலாக இருந்தது. பொழுது அந்தியை சந்திக்க தொடங்கியது. சரியாக 8 கி.மீ. சென்றதும் அவர் காட்டிய இடத்தில் ஆலயம் தென்பட்டது. கையை அசைத்து நன்றியை தெரிவித்ததும் அவர் தொடர்ந்தார்.


----------------------------------------------- 


Shirlal is a small village situated below the Sahyadri Hills (Western Ghats) in the Coastal region of Karnataka State. The village is well known for its Agricultural resources.

With an approximation of 100 Jain families surrounding the area of Shirlal and nearby villages who worship Shirlal Jain temple shri Ananthanatha Swamy as their main deity and Shri Padmavati Devi as their goddess for over 300 years.





உள்ளே சென்றதும் வேனை  விட்டு இறங்கியதும் வலதுபுறம் மூன்று உயரசிலைகள் தூரத்தில் தென்பட்டன. பண்டிட்ஜி வந்த அழைத்ததும் ஆலயத்திற்கான வழியில் சென்றோம். உள்ளே ஸ்ரீ அனந்தநாதஸ்வாமி மூலவராக அமர்ந்திருந்தார்.

கருமைநிறக்கல்லால் ஆன சிலைக்கு பின்புறம் பிரபாவளி. அதில் அவருக்கு முன்பாக மோட்சமடைந்த 13 ஜினர்களின் சிறிய உருவங்கள் புடைப்பாக செதுக்கியுள்ளனர்.

மேலும் அதே போல் கருங்கல்லில் 24 தீர்த்தங்கரர் தொகுதி, மற்றும் ஸ்ரீ பார்ஸ்வநாதரின் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

அதற்குமுன் உள்ள அர்த்த மண்டபத்தின் நடுவே ஸ்ரீ பத்மாவதி சிலையும் சுற்றி பெட்டிக்குள் வெண்சலவைக்கல் ஜினர் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்ருதஸ்கந்த உலோகச்சிலையும் காணப்பட்டது.



With a history of the Shirlal Basadi (Jain Temple) was renovated in the year 1949 under the leadership of Late Shri. R. Siddappa Hegde and his spouse Late Smt. Laxmimathi Amma with the support of the Jain community.
From the year 2000 the temple evolved into a new phase of development under the leadership and interests of Shirlal Rathnavarma Poovani. The renovation of the Jinamandira, construction of a spacious Gopura was done. A community hall with a capacity of 750 members, also a house for the Purohit was built.






சுற்றியுள்ள கிராமங்களில் ஏறக்குறைய நூறு ஜைனக் குடும்பங்கள் வசிக்கின்றனர். அங்குள்ள ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமி, ஸ்ரீ பத்மாவதி மாதாவை அவர்கள் தவறாது வந்து வழிபடுவதை கடந்த 300 ஆண்டுகளாக தொடர்கின்றனர் என்பது பண்டிட்ஜின் வாயிலாக வந்த வரலாறு.

இதன் தொன்மை மூன்று நூறுகளைக் கடந்திருந்தாலும், 1949 ம் ஆண்டு ஆர்.ஸித்தப்ப  ஹெக்டே மற்றும் அவரது துணைவியார் லக்ஷ்மிமதி அம்மா அவர்கள் தலைமையில் முழுவதுமாக புதுப்பித்துள்ளார்கள்.

அதன் பின்னர் பரம்பூஜ்ய 108 விஸ்வநந்தி முனி மகராஜ் சாதுர்மாசத் தங்கல் செய்ததும் பிரசித்தி பெறலாயிற்று.  பின்னர் 2003 ம் ஆண்டு 750 பேர் அமரக்கூடிய சமுதாயக் கூடம் அமைத்துள்ளனர்.

அதனை அடுத்து பல முனிமகராஜ்களும், சாதுக்களும் வந்து சாதுர்மாசத்தில் தங்கி பிரவசனம் செய்துள்ளனர்.


In the year 2007 Paramapoojya Vardhamana Sagar Muni Maharaj visited this holy place and impressed by the uniqueness of this temple he named as Athishaya Shri Kshethra Shirlal.

In the year 2011 the three 12 feet statues of Bharata, Bahubali and Adinatha Swamy sculptured at Jaipur were brought and erected. These 3 statues in Shirlal together is a very unique feature of any Jain temple. we made a visit to the beautiful Jinalaya.





அவ்வாலயத்தை விட்டு வெளியே வந்தததும் பக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயரமான  மூன்று சிலைகள்; 100 மீட்டர் தூரத்திற்கு  15 அடி பாதை அமைக்கப்பட்டு, இருபுறமும் பூச்செடிகளுடன் காணப்படுகிறது. அருகில் சென்றதும் பெயர் பலகையை கண்டால் அவை ஸ்ரீ அதிநாதர், அவரது புதல்வர்கள், வலதுபுறம் ஸ்ரீ பரதர், இடதுபுறம் பகவான் பாகுபலி (சற்று கூடுதல் உயரத்துடன்)  என்பது புரியும்.

2011 ஆண்டு, மூவரின் 12 அடி உயர கருமை நிறக்கல்லால் ஆன பிரம்மாண்ட  சிலையை அழகிய மேடையமைத்து, அபிஷேகம்  செய்ய சார வசதியுடன் நிறுவியுள்ளது இத்தலத்திற்கு பெருமையை  சேர்க்கிறது.  இப்பகுதியில் இது போன்று மூவருக்கான சிலை எந்த ஒரு ஜினாலயத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அச்சிலைகளுக்கு மஹாமஸ்தகாபிஷேகமும் நடைபெற்று வருவது மேலும் சிறப்பாகும்.


தங்குமிடம் இருந்தாலும் உணவு வசதி இல்லை. 

*********************





















































No comments:

Post a Comment