Shri SHEETHALA NATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ சீதளநாதர் ஜிநாலயம்
Location:
lies on the Google map in the coordination of (12.20115, 79.2479) ie put
the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres:
Click for KATTUCHITHAMUR
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :
காட்டுசித்தாமூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு
/ கேரளா/ கர்நாடகா)
ROUTE:-
Tindivanam → Gingee → before Pennathur → Kadaladikulam turn left → Kattuchithamur =
60 kms.
Kanchipuram → Vandavasi → Chetpet → Pennathur → Gingee road → Nedungampoondi road (kamagaram) → Kattuchithamur = 106 kms.
Villupuram → Vettavalam road → Kulakarai palama street. right
turn → Nallan petrapillai → Kattuchithamur =
43 kms.
Tiruvannamalai → Villupuram road → Kulakarai palama street. right
turn → Nallan petrapillai → Kattuchithamur =
28 kms.
Gingee → before Pennathur → Kadaladikulam → Kattuchithamur =
28 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → பென்னாத்தூர் → கடலாடிகுளம் (இடது திருப்பம்) → நல்லான் பெற்ற பிள்ளை (அருகில்) → காட்டுசித்தாமூர் = 60 கி.மீ.
காஞ்சிபுரம் → வந்தவாசி → சேத்பட் → பென்னாத்தூர்
→ செஞ்சி சாலை → நெடுங்கம்பூண்டி(வலது திருப்பம்) → நல்லான் பெற்ற பிள்ளை (அருகில்) → காட்டு காட்டுசித்தாமூர் = 106 கி.மீ.
விழுப்புரம் → வேட்டவலம் #குளக்கரைபாலமா வலது திருப்பம் → காட்டுசித்தாமூர் = 43 கி.மீ.
திருவண்ணாமலை → வேட்டவலம் வேட்டவலம் #குளக்கரைபாலமா இடது திருப்பம் → காட்டுசித்தாமூர் = 28 கி.மீ.
செஞ்சி → பென்னாத்தூர்
→ கடலாடிகுளம் (இடது திருப்பம்) → நல்லான் பெற்ற பிள்ளை (அருகில்) → காட்டுசித்தாமூர் = 28 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சீதள தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து பத்திரலபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து திரடரதன் மகாராஜாவிற்கும் சுனந்தா தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன்வண்ணரும்
90 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஒரு லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும் கல்ப விரும் லாஞ்சனத்தை உடையவரும் பிரம்ம யக்ஷன் மானவி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் அநகாரராதி முதலிய 81 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஆஸ்வயுஜ மாதத்து சுக்ல பட்ச அஷ்டமியில் 18 கோடாகோடி 42 கோடி 32 லட்சத்து 42 ஆயிரத்து
905 முனிவர்களுடன் வித்யுத்வர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ சீதளநாத தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
வேட்டவலத்திலிருந்து வடக்கே நல்லான் பிள்ளை பெற்றால் எனும் கிராமத்திற்கு அருகில்
உள்ள குக்கிராமம் காட்டுசித்தாமூர் ஆகும். இங்கு சமணர்கள் பல நூற்றாண்டுகளாக குடியமர்ந்துள்ளனர்.
விவசாயம் முதற் தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்துள்ளனர். அருகிலுள்ள சோமாஸ்பாடி, காட்டு
மலையனூர் ஜினாலயங்களுக்கு சென்று முக்கிய தினங்களில் வழிபாட்டை பல ஆண்டுகளாக நடத்தி
வந்தனர்.
தற்போது வசிக்கும் பதினைந்து சமணக் குடும்பங்கள் ஒன்றிணைந்து சென்ற 06.03.2015
அன்று ஒரு ஜினாலயத்திற்காக பூமிபூஜை நடத்தி புதிய ஜினாலயத்தை கட்ட துவக்கியுள்ளனர்.
உடன் இரண்டு மாத கால அளவில் கட்டி முடித்து
22.05.2015 அன்று பஞ்சகல்யாண விதியும் நடத்தியுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
கீழ்திசை நோக்கிய கருவறையும், அர்த்தமண்டபமும் கொண்ட சிறிய ஜினாலயத்தில் கர்ப்பக்கிருக
வேதிகையில் ஸ்ரீசீதளநாதர் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். அதன் முன் கட்டப்பட்டுள்ள
அர்த்த மண்டபத்தில் கருவறைக்கு இடது புறம் ஜிநவாணி தேவியும்; வலது புறம் ஸ்ரீதரணேந்திரர்
மற்றும் ஸ்ரீபத்மாவதி யக்ஷ, யக்ஷியும் வளைவு மாடத்தில் அழகாக காட்சி அளிக்கின்றனர்.
கருவறைக்கு மேல் ஏகதள விமானம் பத்ம கலசத்துடன் காட்சியளிக்கிறது.
நுழைவாயிலுக்கு மேற்புரம் கோட்டபஞ்சரம் போன்ற அமைப்பின் மாடத்தில் ஜிநர் சிலையும்,
இருபுறமும் சாமரை தேவர்களும் சுதவேலைப்பாடுடன் அலங்கரிக்கின்றனர். மேலும் அதன் இருபுறமும்
சிங்க உருவங்களும் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நாற்கோடியில் கர்ணகூடங்கள்
காட்சியளிக்கின்றன.
மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஜினாலயத்தை சுற்றி தென், கீழ் புறம் சுற்றுசுவர்
நிற்கிறது. முன் புறமும், வடபுறம் திறந்த வெளியாக உள்ளது.
தினமும் இருவேளை நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் சமண பண்டிகை நாட்களிலும்,
பருவகால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
ஆலயத்திற்கான ஸ்தலத்தை அந்த ஊரின் பூர்வீக பரம்பரைச் சேர்ந்த ஆ. நாகராஜ், பெங்களூர்
அவர்கள் தானமாக அளித்து புண்ணியம் சேர்த்துள்ளார்கள்.
இஜ்ஜினாலயம் பூர்த்தி பெற அன்பர்களின் காணிக்கையை எதிர் நோக்கு கின்றனர். சமணர்கள்
அனைவரும் தமது சக்திக்கு ஏற்ப காணிக்கை தொகையை
அனுப்பி ஆலயத்தின் மீதமுள்ள முக்கியமாக சுற்றுச் சுவர், பிரகார தளவரிசை, பலிபீடம்,
மேலும் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி சன்னதிகளும் நிர்மாணிக்க துணைபுரியலாம்.
தமிழகத்தின் ஒரே ஸ்ரீசீதளநாதரின் ஜினாலயம்
என்பது குறிப்பிடத்தக்கது.
அனுப்ப வேண்டிய வழிகள்:
காசாலையாகவோ, வரைவோலையாகவோ அனுப்பி அல்லது
நேரடியாக வங்கி சேமிப்பு கணக்கிலோ செலுத்தி ரசீத்து பெற்றுக் கொள்ளலாம்.
SHREE SEETHALA THEERTHANKARAR JINAYAM
KATTUCHITHAMUR.
Corporation Bank, Nallan pillai petral 342.
SB a/c No. .034200101011814
IFSC code: CORP0000342
MICR code: 606017003
------------------
|
|
|
|
|
|
|
|
|
Kattuchithamur small village lies near Nallan pillai petral ie 11 km north
direction from Vettavalam. Ancient days many Jain families are lived there. Now
only few jain habitats are there. Agriculture is main occupation of them.
They are doing their worship and rituals at Somaspadi and Kattumalaiyanur. So they decided to construct
a Jinalaya for their convenience. They started the construction inicial pooja
on 06.03.2015 and finished hastely after 26 months. That is most appreciable
one for now-a-days.
East facing Jinalaya got Shri SEETHALA JINAR on the plinth of Garbagruha. Thy
grace the devotee those who worshiped. In
from the Garbagruha a Arthamandap having Sri Jinavani on the right of
sanctum and Sri Dhranendar, Sri Padmavathy matha on the left side inside the arched Gallery.
Above the sanctum single stage Viman with Padmam and Kalash on the peak.
Above the Entry gate on the top of
Mandap, a Jinar in the sitting posture inside a Kostapancharam (designed Gallery)
with two Shamara devars in either side. Apart from that two Lions are sitting
on both side. A Garnakoot structure also on four corners of the top of Mandap.
On a ridge of earth the temple was
built with two side compound walls. Front compound section construction is
waiting for…..
Two time pooja on daily basis. All Jains festivals and seasonal rituals are
going on regularly at the temple.
Mr A. Nagaraj origin of that village donate the base ground of his own land
for the temple.
This is only one Jain temple dedicate to Shri Seethalnathar in Tamilnadu.
So all the Jains in india should donate liberally for the remaining unfinished
work of that templ. ie two side compound
wall, corridor pavement, altar and addition to Sri Brahmadevar, Sri Dharmadevi shrines.
Make a payment thro Cheque, Draft in the name of SHREE SEETHALA
THEERTHANKARAR JINAYAM, KATTUCHITHAMUR.
Corporation Bank, Nallan pillai petral 342.
Or direct remittance through the a/c below.
SB a/c No. .034200101011814
IFSC code: CORP0000342
MICR code: 606017003
----------------------------------------
காட்டுச் சித்தாமூர் ஏரிக்கரை கால்வாய்க்கு அருகில் சுமார் 700 ஆண்டுகளாக அவ்வூர் சமணர்களின் வழிபாட்டில் உள்ள ஒரு ஸ்ரீபிரம்மதேவர் சிலையுள்ளது. அத்துடன் 150 ஆண்டுகளாக வழிபட்டு வரும் மற்றொரு ஸ்ரீபிரம்மதேவர் சிலையும் அருகில் அமர்ந்துள்ளது. இரு காவல் தெய்வங்களாக, ஐயனார் என்று கருதி அவ்வூரைச்சார்ந்த சமணரல்லாதோரும் வணங்கி வருகின்றனர்.
அச்சிலைக்கு பின்புறம் உள்ள ஓர் சிறிய பாறையில் ஸ்ரீஆதினாதர் புடைப்பு சிற்பம் அழகாக காட்சியளிக்கிறது. காட்டுச் சிந்தாமூர் சமணரான திரு. நிரஞ்சன், சென்னை அவர்கள் அதனை பெருமுயற்சியுடன் ஜீலை 2014 ல் செதுக்க துவங்கி சில மாதங்களில் முடித்துள்ளார். முற்கால சிற்பக்கலை பாணியில் 6 அடி உயர அச்சிற்பம் திருமேழிநாதர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது உழவுத் தொழிலை வளர்த்தவர் என்ற கருத்தில் வழங்கியுள்ளனர். அச்சிற்பத்தின் மேடைபோன்ற பகுதியில் கீழ்புறம் ஏர்கலப்பையும், காளயுருவும் செதுக்கப்பட்டுள்ளன.
அச்சிலைக்கும் மாதத்தில் சில நாட்கள் பூஜைகள் அவ்வூர் சமணர்களால் செய்யப்படுகிறது.
காட்டுச் சித்தாமூர் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீசீதளநாதரையும், ஸ்ரீஆதினாதரான அப்புடைப்பு சிற்பத்தையும் தரிசிக்க தமிழக சமணர்கள் ஆண்டிற்கு இருமுறையேனும் சென்று வந்தால் அப்பொக்கிஷங்கள் பாதுகாப்பில் இருக்கும்.
|
|
|
|
|
|
|
|
|
Apart from the Jain temple at Kattuchithamur. There is Brahmadevar idol of
700 year ancient was also on the lake side of the village. It was worshiped by
the ancestors of Jain families and Non-Jains too. One more Brahmadevar Statue of 150 years also erected adjacently.
A rock cut bas relief also carved on a
boulder behind the Brahmadevar.
The fine sculpture work was done by Mr. Niranjan, noble man, origin of
Kattusithamur Jain family. He started from July 2014 and finished on several
months. The six feet carved relief of Shri
Adhinatha is named as Thirumezhinathar, ie promoter of Agriculture. On
the bottom of the relief an plough and a bull also carved beautifully.
The villagers also doing some pooja and rituals bimonthly.
Every Jain should visit to the old monument and the Jain temple
periodically, should safeguard the treasure.