அந்தரிக்ஷ் பார்ஸ்வநாத் ஜைன் பவாலி மந்திர்
Anthariksh Parswanath jain Pavali Mandir
It lies in Google map with coordination of (20.19647, 76.90086)
Pavali Digambar Jain Mandir :
The temple constructed in Hemadpanti style with black
stone.
This temple has an inscription which dates back to
1412.
Two images of Parshvanatha in white marble are said to
have been placed in the Pavali temple about 20 years ago.
Temple rich with exquisite sculpture and carvings.
11 images were excavated from the cellar below the
audience hall in 1928.
The old bricks of the temple float on water.
The well water is medicinal and is know to cure many
skin diseases.
------------------
-------------------
பவாலி ஜெயின் மந்திர்
தங்கிய சத்திரத்திலிருந்து அரை கி.மீ. பஸ் நிலையத்திற்கு தெற்கில்
உள்ளது.
செல்லும் வழியில் சிவந்த நிற 25 அடி உயர மானஸ்தம்பம் வரவேற்கிறது.
அதன் பக்கத்து சாலையில் 300 மீ. சென்று திரும்பினால் பவாலி
மந்திர் .
ஸ்ரீ பார்ஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம்
கருமை நிற கற்களால் பேலூர் ஆலயம் போன்ற சிற்ப வேலைப்பாடுகளை
கொண்ட புராதன ஜிநாலயம். (ஹேமத்பண்டி என்ற கட்டிய சிற்பக்கலை வழியில் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.)
1412ல் இடப்பட்ட கல்வெட்டு குறிப்பும் உள்ளது.
நுழைவாயில் முன் மண்டபத்தில் அழகிய சலவைக்கல்லில் வண்ணம் தீட்டப்பட்ட
துவாரபாலகர்கள், சிம்மம், யானை போன்ற உருவச்சிலைகள் அழகாக காட்சியளிக்கின்றன.
மூலவராக 4 அடி உயர வெண் பளிங்குக்கல் பார்ஸ்வநாதரின் இரு சிலைகள்
நிறுவப்பட்டுள்ளன.
கருவறை மண்டபத்தை முற்காலத்தில் அஸ்திவாரத்திற்கான பள்ளம்
தோன்றிய போது பதினொரு புராதன சலவைக்கல் சிலைகள் கிடைத்துள்ளன.
அவை ஆலயத்தின் வடபுற திருச்சுற்றில் தேவ மாடங்களை அலங்கரிக்கின்றன.
அவ்வாலய பழைய செங்கற்கள் தண்ணீரில் மிதக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்குள்ள கிணற்றுத் தண்ணீர் பல வியாதிகளைக் குணமாக்கும் மருத்துவ
குணமுள்ளதாக சொல்லப்படுகிறது.
நுழைவாயிலின் இடதுபுறம் பாதங்கள் , சந்திரநாதரின் 2 அடி பிரதிமை
(சலவைக் கல்) நிறுவப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment