எல்லோரா ஜைன குகை குடவரை ஜினாலயங்கள்
Ellora Rock-cut Jain cave Mandirs
எல்லோரா
இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சாரநந்திரி குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன.
இக்குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன.
இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை.
12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது,
அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும்.
சமணக் குகைகள் சமணத் தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இவை மற்ற குகைகளைப் போன்று பெரிதாக இல்லாவிடினும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சோட்டா கைலாஷ், இந்திர சபா, ஜகன்னாத சபா ஆகிய கோவில்கள் இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.
குகை எண் 30 ல் மலையைச் குடைந்து எடுத்த ஜிநாலயத்தில் மூலவர் ஜினராக இருந்தாலும் லாஞ்சனம் தும் இல்லை.
7ம் நூற்றாண்டின் சிற்பக் கலையில் மேலும் சில ஒரு புடைப்புமும் உள்ளன.
குகை எண் 31 ன் கருவறையில் நான்கு அடி உயர ஜினர் சிற்பம் உடைக்கப்பட்டதற்கான தடயத்தை காணமுடிந்தது.
இடதுபுறம் பகவான் பார்ஸ்வ ஜினரின் 6 அடி உயர சிலை செதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில சீரழிந்த நிலையில் உருவங்கள் தென்படுகின்றன.
32 : இந்த குகை இந்திர சபை என குறிப்பிட்டுள்ளனர்.
மிகவும் பெரிய குகை ஜிநாலயம் எனலாம்.
மகாவிரர் மூலவராக
அர்த்த பத்மாசன நிலையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
5 .5 அடி உயர இச்சிலையுடன்
12 அடி உயர பார்ஸ்வநாதர் கட்காசன நிலையில் வடிக்கப்பட்டுள்ளார்.
குகை எண் 33 ல் பார்ஸ்வ ஜினரும், நேமிநாதரும் செதுக்கப்பட்டிருந்தாலம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது'
குகை எண் 34 ல் அர்த்த பத்மாசன நிலையில் பார்ஸ்வநாதர் மூல நாயகராக குடையப் பட்டுள்ளது.
மேலும் பல ஜினர் சிலை களும், யக்ஷ, யக்ஷியர் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. பிரம்மதேவர் போன்ற உருவங்கள் பல சிதைவு களுக்கு ஆட்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
முகலாயர் படையெடுப்புக்கு பின் பல வகையில் இக்குகை பல சீரழிவுகளை கண்டிருக்கிறது.
மானஸ்தம்பம், சதுர்முக கூடம் , யானை உருவம் போன்ற பெரிய சிற்பங்களும், தூண்களில் நகாசு வேலைகளும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
விளக்குகள் இன்றியுள்ளதால் கையில் டார்ச் உடன் செல்வது உசிதம்.
மேலும் இரு ஜினாலயங்கள் எல்லோராவில் உள்ளன. ஒன்று அடிவாரத்திலும், மற்றொன்று பிரதான குகை மலைக்கு பின்புறமும் 400 படிகள் ஏறும் விதமாகவும் உள்ளது.
-----------------------
Ellora - 1
Ancient caves of Ellora are famous all over the world
for the fantastic art of sculpture and colorful paintings.
Here are 34 caves, among them Jain caves are only five
(cave no. 30 to cave no.34).
Jain Cave no 30: In sanctuary (garbhagrah) Tirthankar's
sculpture but not clear which Tirthankar.
There are other idols on left and right side wall.
Jain Cave no 31: Main idol is destroyed (4 feet in
height) and on the left side wall there is Lord Parshvanath idol (6 feet in
hight).
Jain Cave no 32: This cave known as 'Indrasabha'. This
cave is bigger then other caves. In sanctuary Lord Mahaveer in semi sitting
posture (Ardh Padmasana, 5.5 feet in hight). There is another sculpture of Lord
Parshvanath in standing posture (12 feet in hight).
Jain Cave no 33: Lord Parshvanath and Lord Neminath but
all sculptures are destroyed.
Jain Cave no 34: Lord Parshvanath in semi sitting
posture. Lord Parshvanath Jain Temple: There is a Parsvanath Temple on hill In
the back of these caves. Lord Parshvanath with nine serpent hoods. 16 feet in
height and 9 feet in width. A 200 student Hostel with Medical Facilities with
Guest is available.
Jain caves at Ellora are made during 7th to 10th
century by kings of Rashtrakoot & Ela family.
This hill is also called Charanadri Hill. It is said
that the ascetic saints with capacity of moving in sky came here for penance
(Tup).
-------------------------
Another two temples are there, one is gurukul and other cave temple is on the back of main caves.
No comments:
Post a Comment