Gajpantha Siddhakshethram
கஜபந்தா சித்த க்ஷேத்ரம்
This is a salvation place of seven 'Balbhadra' (name of
balbhadre is Vijaya, Achal, Sudharma, Suprabh, Nandi, Nandimitra, Sudarshan)
and eight million Jain saints.
The hill has 450 steps.
There are 3 Caves with Digambar Jain idols on the hill
and 2 Digambar Jain Temples.
The caves are also know as 'Chamar Leni Caves',.
In the ninth century of the Vikram era, Chamraj Odiyar,
the king of the Mysore state renovated this tirth. Therefore, it is also called
Chamarleni.
One of them was Muni Gajsukumar. That is the reason why
this place is called Gajpantha.
Works of art and Sculpture: This
temple on the hill. near the Nana village in the forest, presents a very
beautiful scene.
The idol installed in the temple is serene, peaceful
and serious.
-----------------------
----------------
சத்திரத்திலிருந்து மலை ஏற்றம். இருபுறமும் அடர்ந்த சிறிய
மரக்கூட்டத்திற்கிடையே 9 அங்குல உயர கருங்கல் படிகளினூடே உச்சி நோக்கி பயணம் .
முதலில் ஏறுவதற்கு சிரமமாக இருந்தாலும் உடல் களைப்பு நீளும்
தருணத்தில் இடையிடையே அமைந்துள்ள 7 x 12 அங்குல
உயர படிகள் மூச்சிரைப்பை குறைத்தன.
சித்த க்ஷேத்ர குகைகளை சென்றடைய 450 படிகள் வகை செய்தன.
ஏழு பலபத்திரர்கள் மற்றும் 8 கோடி முனிவர்கள் மோட்ச ஸ்தலமாகும்.
எழுமர்களில் முக்கியமான கஜகுமாரர் ஆவார். அதனால் இப்புனித
பூமி கஜபந்தா என பெயரை கொண்டுள்ளது.
மிகத் தொன்மையான இத்தலத்தை 9ம் நூற்றாண்டில் மைசூர் மகாராஜா
சாம்ராஜ் உடையார் சீரமைப்பு செய்தாரானதால் சாமரேணி எனப் பெயர் பெற்றது.
அதனை சுற்றியுள்ள மலைப் பகுதியும், பள்ளத்தாக்குகளும், அதில்
வாமும் பழ மரங்கள் , பூச்செடிகள் பச்சை வண்ணத்தில் பிற வண்ண புள்ளிகளாக கண்ணை கவர்ந்து,
மன நிறைவையளிக்கின்றன.
ஐந்தடி யுயர பார்ஸ்வநாதர் புடைப்புச் சிற்பம் ஒரு குகையிலும்
உள்ளது.
வீடுபேறை எட்டியுள்ளவர்களில்; முக்கியமாக விஜய, அசல், சுதர்ம,
சுப்ரப், நந்தி, நந்தி மித்ரா, சுதர்சன் எனும் ஏழு பல பத்திரர்களும் எட்டு கோடி முனிவர்களும்
(பலர் யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் ) பிறவா நிலைக்கு சென்று உறைகின்றனர்.
சமவ சரண அமைப்பும் ஒரு குகையில் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலத்தில் பல தீர்த்தங்கரர் சிலைகளும் சன்னதி அறைகளில்
நிறுவியுள்ளனர்.
Excellent informations about Gajabandha.
ReplyDeletegood information
ReplyDelete