Pisanhari Ki Madiya Jain Temple in Jabalpur
பிஷான் ஹரி கி மடியா ஜினாலயம் ,
ஜபல்பூர்.
SHRI PARSHVANATH DIGAMBER JAIN MANDIR PISANHARI
MADIYA,
JABALPUR, M.P.
1008 Shri Parshvanath Digamber Jain Mandir Pisanhari
Marhiyaa
Is Atishaya Kshetra (Place of Miracles)
It lies in the coordination of (23.151806, 79.885639) in the google map.
Distance from chenni central to Madiya is 1400 KM
Address :
1008 Shri Parshvanath Digamber Jain Mandir Pisanhari Madiyaa
Pisanhari Marhiyaa Trust Committee
Jabalpur [M.P.]
Contact No.: 7379915287
------------------
Nearby City :
Situated near the city of Jabalpur on Jabalpur-Nagpur
road at a distance of 5 Km from Bus Stand and 8 Km from Railway Station.
About Pisanhari Madiya
Pisanhari Marhiyaa Dig. Jain Atishaya Kshetra Jabalpur
is a famous pilgrimage place known since last 500 years for its extra ordinary
story of development and dedication of an old woman, who worked hard for
construction of a Jain temple here by her own income and labor, situated on a
little hill – 300 Ft. in height.
1008 ஸ்ரீ பார்ஸ்வநாத் திகம்பர் ஜைன் மந்திர் பிஷான்ஹரி மடியா. அதிசய க்ஷேத்ரா, ஜபல்பூர். மத்திய பிரதேசம்.
ஜபல்பூர் பஸ்நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் மடியா (ஜி) க்ஷேத்ரம் அமைந்துள்ளது.
It is said that there lived an old woman in the city of Jabalpur at that time. Grinding of wheat floor by hand driven grinder was the only source of income for her. Once she heard preaches of a Jain saint [monk] and getting inspired by monk, she decided to construct a Jain-temple. But there was the problem of money being poor, so she decided to work hard instead of bringing from others. The power of firm decision made her strong enough to work harder to collect money for construction of her dream temple, even being old enough her dedication filled high level of energy in her and this continued up to the sufficient collection of money.
And, one day people saw her with an axe on the top of hill cleaning and preparing the land for temple making it plane and free from bushes and stones. Looking this, the public rushed towards the hill with necessary equipments and tumblers to make sure their contribution in this holy work-the construction of temple. But that old woman worked restlessly even after getting the cooperation of society, after working hard whole day she stayed there in the night as night watchman and used that time for the planning and for necessary arrangements of next day.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வயதான பெண்மணியின் அர்ப்பணிப்பு உணர்வும், தனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானவுமே முன்னூறு அடி உயர குன்றில் இந்த ஜினாலயம் உருவாக காரணமாக இருந்துள்ளது.
ஜபல்பூர் நகரில் வயதான பெண்மனி ஒருவர் தினமும் கை ஆட்டுக்கல்லில் கோதுமை மாவு அரைத்து விற்பனை செய்து ஜீவனம் செய்து வந்துள்ளதாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று இங்கு வழக்கத்தில் உள்ளது. அந்த நாட்களில் ஒரு சமணத்துறவி அவ்வூருக்கு விஜயம் செய்து தினமும் ஜினவற போதனை செய்து வந்துள்ளார். அதனை தினமும் முழுஈடுபாட்டுடன் கேள்வியுற்ற அப்பெண்மணியின் மனம் ஈர்க்கப்பட்டு, அருகனின் மீது பக்தி மேலோங்க, தான் ஒரு ஆலயம் எழுப்ப உறுதி பூண்டார்.
அவரது சொற்ப வருமானம் ஆலயம் எழுப்பும் அளவிற்கு போதவில்லை. அதனால் இரவு பகல் பாராமல் மிகக் கடினமாய் உழைத்து பணம் சேமிக்கலானார். தனது வேட்கைக்கு பிறர் உதவி பெற தன்மானம் இடங்கொடுக்கவில்லை. அவரது மன உறுதியே முதிர்ந்த வயதிலும் கடுமையாக உழைக்கச் செய்தது. அதுவே கட்டுமானத்திற்கு போதிய பணத்தை சிறுகச் சிறுக சேர்க்கவும் வழிவகுத்தது.
ஒருநாள் அப்பெண்மணி அக்குன்றின் மீதேறி முட்களையும், புதர்களையும் வெட்டி இடத்தை சமப்படுத்துவதை அவ்வூர் மக்கள் கண்டனர். அவர்களும் அவ்விடத்தை சீரமைப்பு செய்யும் எண்ணத்துடன்; அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி போன்ற கருவிகளுடன் அப்பெண்மணியின் புனித பணிக்கு மனமுவந்து உதவிட முன் வந்தனர்.
Thus, one day the temple completed and collection also vanished, that old woman had no money to install gold pots on the top of pinnacle. So she thought again and again, she was not ready to collect money from public for this purpose and at last she decided to place the both stones of her floor grinder on the top of pinnacle. Thus she sacrificed her only source of income and those stones are still present there glorifying her dedication. But this is disappointing that we don’t know her name, history failed in keeping safe her name. To keep her memory long lasting, this holy place is named “Pisanhari ki Marhiyaa”, she was called by her business-Pisanhari (the woman preparing wheat floor on hand operated stone-mill).
Atishaya – Here is a pond that was dry in previous time, after arrival of Poojya Ganesh Prashadji Varni, due to his spirituality this pond became full of water, that pond is still present and called ‘Varni Kund’.
ஊர் மக்கள் உதவி செய்வதோடு, தன் ஆலயப்பணியை நாள் முழுவதும் தொடர்ந்ததோடு, அவற்றை பாதுகாக்கும் பொருட்டு இரவு வேளையில் அங்கேயே தங்கி, நாளைய பணிக்கான திட்டமும் தீட்டி வந்தார். வெயில், மழையைப் பொருட்படுத்தாது பணியைத் தொடர்ந்தார் தன் இலட்சியம் நிறைவேறும் வரை.
ஆலயப்பணியும் நிறைவுற்றது, ஆனால் பெண்மணியின் கையில் உள்ள பணமும் கரைந்து விட்டது. ஆதனால் கலசம் நிறுவ பணம் இல்லாததால், பிறரிடம் எவ்வுதவியை மேலும் பெற எண்ணாது, தனது மாவாட்டும் ஆட்டுக்கல்லின் குழவிகள் இரண்டையும் கலசமாக மேல்நிறுத்த முடிவு செய்தார். அலயப்பணி முடிந்தது.
அவரது பிழைப்பிற்கு ஆதரவானதை தியாகம் செய்தமையால், அவ்விரண்டு கற்களும் இன்றும் அவரது அர்ப்பணிப்பை விமானத்தின் மீதமர்ந்து அவர் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது
.
இவ்வுத்தம பக்தையின் பெயரை மட்டும் இவ்வரலாறு ஏனோ மறந்து விட்டது. அது மிகவும் வருத்தத்திற்குரியதே. அவரது அயராத உழைப்பினை நினைவுறுத்தும் முகமாக “மாவரைக்கும் பெண்ணின் ஆலயம்” என்றே அழைக்கப்படுகிறது.
மேலும் அதிசய க்ஷேத்ரம் என்பது ஒருகாலத்தில் இங்கிருந்த ஊரணி வற்றியிருந்தது அச்சமயத்தில் அங்கு விஜயம் செய்த கணேஷ் பிரஷாத்ஜி வர்ணி என்ற முனிவரின் தெய்வீக ஆற்றலால் ஊரணி நிரால் நிறைந்தது. அந்நிகழ்வால் தற்போது வற்றாது வழங்கிவரும் அவ்வூரணிக்கு வர்ணீ குந்து என்றும் அழைக்கின்றனர்.
Main Temple & Idol :
Main temple consists two idols of V.S. 1587 [the year of construction of temple] most ancient idols of this Kshetra and were installed first in temple.
Temple Kind of & Timings :
Digambar – From 6 A.M. to 9 P.M.
Other Temples :
There are another temples also worth seen including Samavsaran Mandir, Maan-Stambh [column of dignity], Bhagvan Baahubali, Shri Nandishwar Dweep Jinaalaya and many more.
Natural Scenario :
This Kshetra is full of natural greenery, eye catching beautiful hilly area . This place provides proper environment for meditation, practice of penance and sacred activities.
பிரதான ஜினாலயமும், இரு ஜினப்பிரதிமைகளும் V.S. 1587 ஆண்டு நிறுவப்பட்டதாக மேலும் வரலாறு தெரிவிக்கிறது.
ஜினாலயப் பிரவேச நேரம் – காலை 6 முதல் இரவு 9 மணி வரை. (ஆனால் 7 மணியே பாதுகாப்பானது)
மேலும் சமவசரண ஜினாலயம், மானஸ்தம்பம், பகவான் பாகுபலி, ஸ்ரீநந்தீஸ்வரதீப ஜினாலயம் போன்றவை அதன் அடிவார்த்தில் அழகு செய்கின்றன.
அழகிய பசுமை தாவரங்களாலும், கண்கவரும் இயற்கை மலைப்பிரதேச அழகினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் தியானம் செய்ய, தவ வாழ்வினை மேற்கொள்ள, புனித நடவடிக்கைக்கான சுழலையும் பெற்றுள்ளது எனின் மிகையாகாது.
Facilities :
Dharmshala with 60 or more rooms exist here-ready to provide necessary facilities to pilgrims eg. Light-water-hand pump-beds etc. Other hotels and mess are available in city.
Means of approach :
Busses and tempo are available here for Jabalpur bus stand and railway station, from city also to reach the Kshetra and nearby pilgrimage places. Jabalpur is having Airport also.
Nearby Pilgrimage Places :
Bahoriband-75 Km
Atishaya Kshetra Panagar – 18 Km
Kundalgiri (Koniji) – 40 Km
Siddha Kshetra Kundalpur – 135 Km
-----------------
பாரதத்தின் எப்பகுதியிலிருந்து வந்து செல்ல பஸ்வசதி, ரயில் வசதியும் உள்ளது. விமானத்தளமும் உள்ளது.
யாத்திரீகர்கள் தங்குமிடமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரில் அமைந்துள்ள குருகுலப்பள்ளியிலும் ஆலயமும் தங்குமிடமும் உள்ளது மேலும் வசதியைச் சேர்க்கிறது
அருகிலுள்ள ஜினாலயங்கள்:
பஹோரிபந்த் - 75 Km
அதிசய க்ஷேத்ரம் பனாகர் – 18 Km
குண்டல் கிரி (கோனிஜி) – 40 Km
ஸித்த க்ஷேத்ரம் குண்டல்பூர் – 135 Km
===============
---------------------------------------------
கோயில் உருவான வரலாற்றோடு பதிந்துள்ள விதம் மிகவும் அருமை. கோயிலுக்கு நேரில் சென்ற உணர்வை இப்பதிவு ஏற்படுத்தியது. ஆங்கிலத்திலும் சேர்த்துத் தருகின்ற உங்களின் பாணி போற்றத்தக்கது. தொடருங்கள். வாய்ப்பிருக்கும்போது நானும் பதிவுகளைக் காண்பேன்.நன்றி.
ReplyDelete