Sunday, January 14, 2018

Sonagiri Valley Jinalayas - சோனாகிரி பள்ளத்தாக்கு ஜினாலயங்கள்.


Sonagiri Ground level Jinalayas

சோனாகிரி தரைமட்ட ஜினாலயங்கள்.




Name :

Shri Digamber Jain Siddha Shetra Sonagiri.
Is an Siddha Kshetra (Place of Salvation).

Address :

Shri Digamber Jain Siddha Shetra Sonagiri
Place & Post – Sonagiri, Dist. – Datia (M.P.) Pin – 475685
Phone 07522 – 262307, 262310



It lies in the Google Map in the coordination of  (25.72371, 78.38054)


Nearby City :

Datia 15 km (By Road) 15 km (By Train)
Jhansi 45 km (By Road) 48 km (By Train)
Gwalior 75 km (By Road) 72 km (By Train) 



























Facilities :

Delhiwali Dharmshala 20 normal rooms, 25 semi-deluxe rooms, 25 deluxe rooms, Mess facility, all other required items like utensils, bed, tent etc. available.

Beespanthi Kothi 20 normal room, 15 semi-deluxe rooms, 15 deluxe rooms, all other required items like utensils, bed, tent etc. available.

Tyagi Vrati Ashram 10 normal room, 4 deluxe rooms

Terapanthi Kothi 30 normal room, 40 semi-deluxe rooms, 15 deluxe rooms, Mess facility, all other required items like utensils, bed, tent etc. available.

Kund-Kund Nagar 45 normal room 45 deluxe rooms, Mess facility, all other required items like utensils, bed, tent etc. available.

Others – Three Jain Mess

Means of approach :

Bus of Sonagiri Kshetra is available at Sonagiri Railway Station.

Road – On Dabra-Datia Road Sonagiri stands, Kshetra is 5 km ahead from here. This also lies on Gwalior-Jhansi Road. Tempo & Tongaes are available here for Kshetra.
Train – Sonagiri Railway Station lies on Agra-Jhansi line. Kshetra is 3 km ahead from here.
Airport – Gwalior & Jhansi

Nearby Places :

Gopachal Atishaya Kshetra famous for high colossus of Lord Adinath and others the wonderful creation by artists, a must for devotees to see.
Chanderi, Papouraji, Thuvonji, Devgarh and many sacred places are here in nearby area.

----------------------






















Other more than 77 temples on the Sonagiri hill, there are 26 temples in the village, most of them are old enough.


Many are dedicated to Shri Chandraprabu jinar, the remaining are for Shri Adhinathar, Santhinathar and Shri Mahaveerar. Beatiful pratimas are installed on the Plinth of various temples.

Muni sangh also at the plain level of the village. More Jinalaya were decorated with mirror lining work over the wall and roof.

Apart from other temples;

At Kund-Kund Nagar, on 25 feet high plate form, a colossus of Lord Bahubali in standing posture 18 feet in height has been installed, below it a hall is built to practice the meditation.

Attractive models of Sammedshikar, Girnar, Champapur and Pavapur are constructed here. These are the places of salvation (Nirvana Kshetra) of 24 Teerthankars, images are pleasing to eyes.

In all the Dharmashalas separate temples are built, details are as below: -

Bhattarka Kothi Principal deity Bhagwan Shantinath
Beespanthi Kothi (Temple of Mirrors) Principal deity Bhagwan Anantnath
Terapanthi Kothi Principal deity Bhagwan Parsvanath
Tyagi Vrati Ashram Principal deity Bhagwan Chandraprabhu
Kund-Kund Nagar Principal deity Bhagwan Bahubali
Delhiwali Dharmshala Principal deity Bhagwan Chandraprabhu

Natural Scenerio :

Pure natural environment, hilly are and scene of beautiful temples with high spires looks very attractive, pleasing to eyes & mind.



 



















சோனாகிரி குன்றின் மீது 77 ஜினாலயங்களுக்கு மேல் இருந்தாலும், அதன்  அடிவார பள்ளத்தாக்கு பகுதியிலும்  26 க்கும் மேலான ஆலயங்கள் அலங்கரிக்கின்றன.


பெரும்பாலனவை ஸ்ரீ சந்திரப்ரபு ஜினருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அடுத்து பல ஜினாலயங்கள் ஸ்ரீ ஆதிநாதருக்கும்,  சாந்திநாதருக்கும் மற்றும் ஸ்ரீ மஹாவீரருக்குமானதாக அமைத்துள்ளனர்.


முனி சங்கம் ஒன்றும் பள்ளத்தாக்கு கிராமத்தில்  உள்ளது. பல  ஜினாலயங்களின் சுவர்களும்,  கூரைகளும் கண்கவர் கண்ணாடி வேலைப்பாடுகளுடன்  ஜொலிக்கின்றன.


அனைத்திலும் சிறப்பாக குந்தகுந்த நகர் பகுதியில், 25 அடி யுயர மேடையில் 18 அடி யுயரமுள்ள பாகுபலி நாதரின் கட்காசன சிலை வெண்மை நிறத்தில் உச்சியில் காட்சியளிக்கிறது. அச்சிலைக்கு அடியில் தியான பயிற்சிக்கான கூடமும் அமைத்துள்ளனர்.


அப்பகுதியில் விதேக க்ஷேத்ரத்தில் ஸ்ரீசீமந்தபகவான் சமவசரணத்தில் ஆச்சார்ய குந்தகுந்தர் மண்டியிட்டு வினாக்களுக்கான விடையை பெறுவதான முறையில் மாதிரி வடிவம் அமைத்துள்ளனர்.


அருகில் சீமந்தர பகவான் மையத்திலும், சுற்றி 20 தீர்த்தங்கரர்கள் சலவைக்கல் பிரதிமைகளும் தனித்தனி விமானத்தில் அமைத்துள்ளது அழகாக காட்சியளிக்கிறது. பெரிய பிரவசன கூடத்தில் அமைத்துள்ளனர்.

ஆகமங்கள் தோன்றிய வரலாற்றை குறிக்கும் மாதிரி வடிவமும் கட்டப்பட்டுள்ளது.

மேலும் அடிவாரத்தில் சம்மேதசிகர்ஜி, கிர்னார், சம்பாபுரி மற்றும் பாவாபுரி போன்ற 24 தீர்த்தங்கரர்கள் முக்தியடைந்த புனித ஸ்தலத்தின் மிகச்சிறிய மாதிர வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது கண்ணை கவருகின்றன.

ஒவ்வொரு தர்மசாலாவிலும் தனி ஜினாலயங்கள் அமைக்கப்படுள்ள வற்றின் விபரங்கள்:

பட்டாரக கோத்தி ஆலயத்தில் மூலவராக பகவான் சாந்திநாதரும்,
பீஸ்பந்தி கோத்தி(கண்ணாடி கோவில்)யில் மூலவராக பகவான் அனந்தநாதரும்,
தேராபந்த் கோத்தியில் ஸ்ரீ பார்ஸ்வ ஜினரும்,
தியாகி விரதி ஆஸ்ரமத்தில் பிரதானமாக பகவான் சந்திரப்ரபு நாதரும்,
குந்த்  குந்த நகரில் பகவான் பாகுபலியும்,
தில்லிவாலி தர்மசாலாவில் பிரதான தெய்வமாக பகவான் சந்திரப்ரபு நாதரும்

 வேதிகையில் நிறுவப்பட்டுள்ளனர்.



தூய்மையான இயற்கை சூழல், மலை மற்றும் அழகிய நெடிய விமான கலசங்களைக் கொண்ட ஆலயங்கள்  அனைத்தும் கண்களுக்கு மிக அழகாகவும், மனதிற்கு மகிழ்வையும் தந்தது எனின் மிகையாகாது.

1 comment:

  1. அருமையான கோயில்களுக்குச் சென்றேர்ம், இப்பதிவின் வழியாக. நன்றி.

    ReplyDelete