Shri ARA, MALLI, MUNUSHUVIRATH JINALAYA
ஸ்ரீ அர, மல்லி, முனிசூவிரத ஜிநாலயம்
Location: with latitude, longitude of (13.07355, 75.00081)
click for map put on the search box the above figure.
while travelling open navigator on the smart phone find your location and destination as ()
Bangaluru → Hassan → saklespur → Dharmasala → Moodbidri = 352 Kms.
Mysore → Srirangapatna → Hassan → saklespur → Dharmasala → Moodbidri = 285 Kms.
தேரம்மா ஷெட்டி பஸ்தி
இவ்வாலயம்
உருவாக்கிய சிரேஷ்டியின் பெயரால் அழைக்கப்படுகிறது. மிகப்புராதனமான இவ்வாலயத்தின் தோற்றத்திற்கான
அடையாளங்கள் ஏதுமில்லை. ஏறக்குறைய 14-15 ம் நூற்றாண்டில் கட்டியிருக்கக்கூடும்.
பிற
ஜினாலயங்கள் போன்றே முகமண்டப கட்டுமானம் தனியாகவும், பின்னர் திருச்சுற்றுக்கு நடுவே
நவரங்க மண்டபம், அந்தராளம், கருப்பகுடி என்ற நான்கு பகுதி அமைப்புடன் காணப்படுகிறது.
கருப்பகுடி
மைய வேதியில் ஸ்ரீ முனுசூவ்ரத நாதரின் கருமை
நிறக்கல், அர்த்தபத்மாசனச் சிலை காணப்படுகிறது.
புட்டப்பகுதிக்கு மட்டுமான பத்மமேடையில் அமர்ந்து
அழகாக காட்சியளிக்கிறார். அவருக்கு பின்னால் வெண்கலத்தினாலான பிரபாவளி பூக்கொடிகள்
போன்ற புடைப்பு வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. முன்னால் இரு தூண் போன்ற வடிவத்தில்
குமிழ்கள் போன்ற சாத்துப்படி சட்டம் போன்று காணப்படுகிறது. அதில் எந்த ஒரு கோடுகளோ, எழுத்துக்களோ காணப்படவில்லை.
அவருக்கு
வலது புறம் சற்று தள்ளிய அந்தராளத்திற்கான நுழைவாயிலுக்கெதிரே தெரியும் படி வெண்பளிங்குக்கல்லால்
ஆன ஸ்ரீ அரநாதர் சற்று சிறிய அளவில் அவரைப்போன்றே அமர்ந்த நிலையில் சிறிய பிரபாவளியுடன் காட்சியளிக்கிறார்.
அதேபோல் இடது புறம் ஸ்ரீ மல்லிநாதர் வெண்சிலை அமர்ந்தநிலையில் அமைத்துள்ளனர்.
அனைத்திற்கு
ஒரே மேடை அமைத்து, அதில் 24 தீர்த்தங்கரர்களின் அம்மூவரை விட சிறிய அளவிலான வெண் சலவைக்கல்லால்
ஆன சிலைகள் சிறிய பிரபாவளியுடன் அழகாக காட்சியளிக்கின்றன.
ஒவ்வொரு
ஆலயத்திலும் தெய்வச்சிலை பிரதிஷ்டாபூமிகள் அமைப்பு விதவிதமாக காட்சியளிப்பது இத்தலத்தின்
தனித்துவமாகும்.
மேலும்
மேல்தளத்திலும் ஒரு கருவறையும், அதில் ஸ்ரீ மல்லிநாதர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாலயமும்
பக்தர்களின் காணிக்கையை பராமரிப்புச் செலவினங்களுக்காக எதிர்நோக்கியுள்ளன.
Deramma shetty Basadi
It was named by the founder of the temple. Very ancient look but no exact evidence of identity inside the basadi. May be in between 14-15th Century B.C.. It has separate Mugamantap. Inside circumbulatory navaranga, anthralla and Garbhakudi.
Shri Munushuvirat Jinar, made of black Marble in artha padmasana on one third lotus base. Behind a bronze prabhavali is exibits. Shri Ara jinar and Shri Mallinath jinar of white marble with bronze prabavali also installed on both side of Munisuvirat.
Apart from, connected platform got 24 white marble jinars with small parabavali on back seated linely is fabulous.
On the top floor has Shri Mallinath jinar shrine is unique. A run through stairs raised on the side. The beautiful Jinalaya maintained by the donations received from visited devotees.
*************************************
No comments:
Post a Comment