Thursday, August 23, 2018

GURU BASADI MOODBIDRI - மூடுபத்திரை குரு ஜிநாலயம்.


குரு பஸ்தி
சித்தாந்த பஸ்தி..

Shri Parshwanathar Jinalaya  -  ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயம்






Location: with latitude, longitude of (13.07415, 75.00079)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07415, 75.00079)


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.






அதே போல் மிகப்புராதன மான சில ஆயிரம்  ஆண்டுகளைக் கடந்து நிற்கும்  12 அடியுயர ஸ்ரீ பார்ஸ்வநாதரை மூலவராக கொண்ட குருபஸ்தியும் பிரசித்தி பெற்றது.

செவிவழிச் செய்தியான அதன் வரலாற்றைக் காண, காலச்சக்கரத்தில் சற்று பின்னோக்கி பயணிப்போம்.

ஏறக்குறைய 8ம் நூற்றாண்டில் மிக்க வளமும், பயிரும் விளைந்த இத்தலத்தில் ஜைனர்கள் அதிகம் வசிக்க வில்லை. அவ்வாறான வேளையில் சரவண பெளகுளாவிலிருந்து மூடுபத்திரைக்கு வந்திருந்த ஒரு முனிவர், அடர்ந்த மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதியில் பசுவும், புலியும் தன் கன்றுகளுக்கு பசு புலிக்குட்டிக்கும்,  புலி கன்றுக்குட்டிக்கும் பால் ஊட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார், அந்த விலங்குகளிடம் சிநேக உணர்வைக் கண்ட அவர் இங்கு ஏதோ ஒரு தெய்வீக  ஆற்றல் மறைந்திருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார். அம்மூங்கில் புதர்களுக்கிடையே கூர்ந்து கவனித்து வந்த போது 12 அடியுயர பார்ஸ்வநாதரின் கருங்கல் சிலையை கண்டுள்ளார். பல நூறு ஆண்டுகளைக் கடந்த இச்சிலைக்கு கி.பி. 714 ம் ஆண்டு அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்துள்ளார். பின்னர் அப்பகுதி மக்களால் அச்சிலையை சுற்றி ஒரு ஆலயமும் எழுப்பப்பட்டது.


அன்று அவ்வதிசய நிகழ்வினை நினைகூறும் வகையில் எழுப்பப்பட்ட ஆலயமே இந்த குருபஸ்தியாகும். பல கால மாற்றங்களைக் சந்தித்திருந்தாலும்  வழவழப்பான கல்லினால் ஆன அதே மூலவர்  இன்றும் வேதியில்  அமர்ந்து அருள் பாலித்து வருவது சிறப்பானதாகும்.


மடம் அருகிலிருந்தாலும் புதிய பட்டாரகராக தேர்வு செய்யப்பட்டவருக்கு இவ்வாலயத்தில் தான் பட்டாபிஷேகம் வைபோகம்; தற்போதும் நடைபெற்று வருவது மேலும் சிறப்பானதாகும். அதனால் குருபஸ்தி என்ற காரணப்பெயரைப் பெற்றது.


இவ்வாலய மூலவரை சண்டோக்ர பார்ஸ்வநாதர்(அர்த்தம் தெரியவில்லை) என்றும் வணங்குகின்றனர். இவ்வாலயத்தில் தான் ஸ்ரீதவளா, மஹாதவளா, ஜயதவளா என்ற பண்டைக் கால ஓலைச்சுவடிகளாக ஜைன சித்தாந்தங்கள் உள்ளன. அதனால் சித்தாந்த பஸ்தி என்றும் அழைக்கின்றனர்.

மேலும் அக்காலத்தில் வாழ்ந்த சிரேஷ்டிகள்/ஷெட்டிகள்** கடல் கடந்து வாணிபம் செய்த வணிகர்கள், தாங்கள் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியாக வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், முத்து, பவளம் போன்ற இரத்தினங்களாலும் தங்கம், வெள்ளி, ஸ்படிகம், கருடமணி போன்ற விலையுயர்ந்த கற்கள், உலோகங்களாலும் 34 ஜின படிமைகளை செய்து வணங்கி வந்துள்ளவைகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வதிசய ஸ்தலத்தையும், அச்சிலைகளைக் காண பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.



மிகப் பெரிய கூடத்தினைக் கொண்டும் நவரங்க மண்டபம், அந்தராளம், கர்ப்பகுடி போன்ற கட்டமைப்புடன் காணப்படுகிறது. மேலும் பளுங்குக்கல்லால் ஆன சலவைக்கல் ஜினப் பிரதிமைகள் உத்திரம், இரு தூண் போன்றமைந்த பெட்டி அடுக்குகளில் அனைவரையும் கவரும் வண்ணம் காணப்படுகிறது.

பெரும்பாலும் இத்தலத்து அனைத்து ஆலயங்களிலுமே இவ்வமைப்பு காணப்படுகிறது.

ஆனால் அதில் சில களவாடப்பட்ட  நிலையில் ரத்தினம் மற்றும் மணிகளால் ஆன ஜின பிம்பங்களைக் கொண்ட சிற்றாலயப்பகுதி மூடப்பட்ட  நிலையிலுள்ளது.

( **கன்னட சிரேஷ்டிகள்/ஷெட்டிகள் சிலர் இடம்பெயர்ந்து வியாபார நிமித்தமாக தமிழகம் வந்தவர்கள் கும்பகோணத்தில் குடியமர்ந்துள்ளனர். அவ்வணிக சமணக் குடும்பங்களை இன்றும் ஷெட்டியார்/செட்டியார் குலம் என்றே அழைக்கின்றனர்.)




அதற்கடுத்ததாக…




































































As the coronation of the Bhattarakas takes place here, it is called Guru Basadi. Once upon a time a Digamber Muni went to the forest for ablution. There were thorns of bamboo and bamboo bushes all over the area. Returning after ablution her saw a wonderful sight. Side byside, a cow and a tigress were  drinking water from a stone receptacle. The calf of the cow was sucking from the tigress udder, and the young of the tigress was sucking from the cow’s udder, oblivious of their natural animosity. The Muni, guessing that there is some virtue about these environs, set to look for its origin. He was wonderstruck to see a statue of Bhagawan Parshwanatha lying in the bamboo bushes. He got the bamboos cut down and the installed the statue there.  That is the present day Parshwanatha swamy Basadi.

Elegant look Guru basadi has separate Mugamandap with Four round shape pillars with ornament scultures of Deva and devis. Next to that a Navrang mandap and Garbhakudi.
Garbhakudi got ancient 12 feet high polished granite stone shri Parshwanathar statue in the pilinth. In front of garbhagriha metal idols of Thirthankars are placed inside the galleries.


Each structure got sloped roof tiled by Mangalore tiles. 

There is a separate section of safe room inside the basadi. This shrine got most precious stone Jinar idols made up of Navarathnas, Spadicas, Garudamani and etc. Unfortunately several idols were stolen by robbers. Due to this incident the section is closed now.  

No comments:

Post a Comment