Kote basadi - கோட்டி பஸ்தி
Shri Neminathar Basadi - ஸ்ரீ நேமிநாதர் பஸ்தி
கோட்டி
பஸ்தி
மூடுபத்திரை
ஜைனத் தெருவிலுள்ள ஜினாலயங்களில் இதுவும் ஒன்று.
ஸ்ராவகர் கோட்டி ஷெட்டி என்பவரால் 1401 ம் ஆண்டு கட்டப்பட்ட ஜினாலயம்.
வெளியிலிருந்து காணும் பழைய காலத்திய பள்ளிக்கூடம் போன்ற முன் கட்டமைப்பு
தோற்றம். சமணப்பள்ளி என்பதால் அவ்வாறு அமைந்ததோ.. உள்ளே நுழைந்தால் மற்ற ஜினாலயங்கள்
போன்று நவரங்கள் மண்டபம், அந்தராளம், கர்ப்பகுடி என்ற அமைப்புகளைக் கொண்டது.
ஸ்ரீ
நேமிநாதரின் 3 அடியுயர கட்காசனத்தில், சாணக்கல்லாலானது போன்ற வண்ணத்துடன் வழவழப்பாக
ஜொலிக்கிறது. அதனைச் சுற்றி வெண்கலப் பிரபாவளி, சரவிளக்குகள், மேலும் அந்தராளப்பகுதியில்
சரம் அமைத்தாற் போன்ற மாடங்களில் பல ஜினர் உலோக பிம்மங்கள் பிரபாவளியுடன் காட்சி அளிக்கின்றன்.
மேலும்
அனைத்து ஆலயங்களிலும் ஸ்ருதஸ்கந்தம், கணதரர் போன்ற உலோகச் சிலைகளும் காணப்படுகின்றன.
தேவ-
சாஸ்திர- குரு என்ற ஜைன ஆகமங்க சிந்தாத்தத்தை
நினைவு கூறும் வகையில் எல்லா ஜினாலயங்களிலும்
காணப்படுகிறது.
ஸ்ருதஸ்கந்தம்
தமிழகம் ஆலயங்களில் உள்ள வடிவத்திலிருந்தாலும், உலோகத்தினாலான செங்கோல் போன்ற
புடைப்பு வடிவம் கணதரருக்கான குறியீடாக அமைத்திருப்பது புதுமையாக தென்பட்டது. பண்டிட்ஜி
அவ்வடிவத்தை கணதரர் என்று குறிப்பிடுகிறார்.
அக்கட்டுமானத்திற்கு
பாதுகாப்பாக இரும்புக் கம்பிக் கதவுகள் அமைத்துள்ளனர். திருச்சுற்றில் நாகராஜர் மற்றும்
நாகங்களின் புடைப்புச் சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. கூடங்கள் தூய்மையாக இருந்தாலும்,
திருச்சுற்று முழுவதுமாக புற்கள், முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
பெரும்பாலான
ஜினாலயத்திற்கு ஸ்ராவகர் உரியாளராக இருந்ததால், அரசின் நில உச்ச வரம்புச் சட்டம் நடைமுறைக்கு
வந்த போது, அவற்றின் பெரும்பாலான சொத்துக்கள்
பறிபோய் விட்டது துரதிருஷ்டமே. அதனால் சொற்ப வருமானத்தில் தான் அனைத்து ஆலயங்களும்
பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இரு
தளங்கள் இருந்தாலும் மேற்தளத்திற்கு அனுமதி
இல்லை.
பக்தர்களின்
காணிக்கையே பிரதான வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.
(பாதுகாப்பு கருதி உலோகச் சிலைகளை அருகாமைப்புகைப்படங்கள் எடுக்க வில்லை)
-----------------------------------------------
It
is known from the edicts here that this Basadi was built in A.D. 1401 by the
Shrevaka Kote shetty.
3
feet sandstone fine polished Bhagawan Neminatha swamy idol is the Moolanayaka.
The sanctum sanctorum is square and the whole basadi is rectangular. The
structure are four Mandapas in all; ie mugamantapa, navranga, anthrala,
garbhakudi structure.
Two-storied
and second storey is wholly of stone but no admission for top floor.
All
Jinalaya are private temples with
individual properties. Unfornately during Govt Ceiling Act time, lionshare
of asset was taken by the then Government. So maintanence of the big temples is
difficult to overcome the expenses. So, only the donations of visited devotees,
make good the essential expenses of the temple.
No comments:
Post a Comment