Bhagawan Parwanathar Basadi
பகவான் பார்ஸ்வநாதர் பஸ்தி
It lies in the Google map with coordination of (13.70418, 75.65233)
26.07.2018
வியாழன்
நிட்டூரிலிருந்து மதியம் 1 மணியளவில் சிம்மனஹத்தே நோக்கி புறப்பட்டோம். திப்டூர், அரசிகெரெ, காதூர், தரிகெரெ கடைசியாக பெருமனகெல்லியில்
புனே சாலையிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்காக திரும்பினோம். இரவு அங்கேயே தங்க முடிவு
செய்ததால், பயணத்தில் அருகில் ஏதாவது சமணச்சின்னம் தென்படுகிறதா என கூகுள் வரைப்படத்தில்
தேடியபோது லக்காவல்லி என்ற இடத்தில் ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் இருப்பதாக காட்டியது.
லக்காவல்லி
மிகச்சமீப ஆண்டில் கட்டப்பட்ட நூதன ஜினாலயம்…
பெருமனகெல்லி திருப்பத்திலிருந்து 16 கி.மீ. பயணித்தவுடன் லோகஸ்வரூபத்துடன்
ஒரு பெயர்பலகை தென்பட்டது. கன்னடத்தில் எழுதியிருந்ததால் படிக்க இயலவில்லை. அம்புக்குறி காட்டியவழியே சென்றதும்
100 மீட்டரில் வலதுபுறம் நகரா வடிவமைப்பில் அடர்மஞ்சள் வண்ணத்தில் விமானம், கலசத்துடனும்,
பின்புறம் ஒரு மானஸ்தம்பமும் தென்பட்டது.
அனைவருக்கும் அமெரிக்காவை கண்டுபிடித்த மகிழ்ச்சி. மிகச்சமீபத்தில்
கட்டியதான கட்டமைப்புடன் தென்பட்டது. இன்னும் சுற்றுச்சுவர் கூட கட்டப்படாமல் முன்புற
வேலி, இரும்புத்தட்டி கதவுடன் இருந்தது. Van லிருந்து இறங்கியதுமே எதிரிலுள்ள சமணர்கள் இறங்கி வந்து எங்களைப்பற்றி
கன்னடத்தில் வினவினார்கள். நாங்களும் புரிந்து கொண்டது போன்று தமிழ்நாடென்றதும், அரைகுறை
தமிழில் ஒரு மூதாட்டி பேசினார். நாங்கள் பேசியது அவர் புரிந்து கொண்டார். அதுவே பெரும்
பாக்கியம்.
திறவுக்கோலை எடுத்து வந்து சாலையின் பின்புறப்பார்வையிலிருந்த ஜினாலயத்தின் முன்புற நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்றார். 30 அடிக்கும் குறைவான மானஸ்தம்பத்தின்
அடிப்பகுதியில் ஜினர் புடைப்புச்சிற்பத்துடன்
பத்மாவதி, தரணேந்திரன் வடிவங்களும் திசைக்
கொன்றாக வடித்திருந்தனர். மேற்புற மொட்டை விமானத்தின் நாற்புறமும் ஜினர்சிலைகள் அமர்ந்தநிலையில்
காணப்பட்டன.
சற்றொப்ப 1500 ச.அடிக்கும் கூடுதலான பிரார்த்தனைக் கூடம் மஹாமண்டபம்
போல் காட்சியளித்தது. தரையில் சலவைக்கல் பதித்து வழவழப்பாக இருந்தது. அதன் முடிவில்
கர்ப்பக்கிருஹம்; 5 அடி உயர மேடையில் 3 உயர
கருமைநிறக்கல்லில் அழகிய அமர்ந்தநிலை பார்ஸ்வநாதர் முழு உருவத்துடன் நிறுவப்பட்டிருந்தார்.
பின்புறம் பித்தளை உலோகத்தில் அடைப்பான பிரபாஒளி
சாமரைதாரி, யாளிவாய் உச்சியுடனும், அதன் மேல் ஒற்றைகுடையுடனும் காணப்பட்டது. மேலும்
சில உலோகச்சிலைகளும் வரிசையாக அமர்த்தப்பட்டிருந்தன.
மூலவருக்கு வலதுபுறம் ஸ்ரீ தரணேந்திரரின் 2 அடி உயர கருமைநிறகல்லால்
ஆன சிலை, சிறிய நாலுகால் மண்டப, விமான கலசத்துடனும்; அதே போன்று மறுபுறம் ஸ்ரீபத்மாவதி
சிலை விமான கலசத்துடன் மேடையில் காணப்பட்டது. மேலும் கூஷ்மாண்டினி மற்றும் சில உலோகச்சிலைகளும் இருந்தன.
இம்மூன்று அமைப்புகளும்
தெளிவாக தெரியும் படி 15 அடியுயரத்தில் கூரைத்தளம் அமைத்திருந்தனர். கருவறைக்கு
மேலும் சன்னதி இருப்பதாக கூறியதும்.
மூலவரை வணங்கிவிட்டு. திருச்சுற்றை வலம் வரும்போது கடைசியாக சிறிய சன்னதியில் க்ஷேத்ரபாலகர்
சிலை வைக்கப்பட்டிருந்தது.
கருவறைக்குப் பின்புறம்
அமைந்த படிக்கட்டில் ஏறி மேற்தளம் சென்றோம். மானஸ்தம்பத்தின் உச்சிமண்டபம் தென்பட்டது. கீழேயுள்ள கருவறைக்கு மேல்தளத்தில் விமானத்தின் அடியில் கிழக்குமுகமாக
மற்றொரு கருவறையில் ஸ்ரீ சந்திரப்ரபு நாதர் நின்றநிலையில் நிறுவப்பட்டிருந்தது. (லாஞ்சனம் ஏதுமில்லை)
அவரையும் வணங்கிவிட்டு கிழே இறங்கினோம். பயணத்திட்டத்தில் இல்லாத
ஒரு புதிய ஜினாலய தரிசனம். மகிழ்ச்சியுடன்
அச்சீமாட்டியிடம் விடைபெற்ற போது அந்திமாலைப் பொழுது துவங்கிவிட்டது.
சிம்மனஹத்தே சாலையில் பயணித்தை துவங்கியுடன் பத்ராநதி அணைக்கட்டை காண முடிந்தது.
நீர்ப்பிரவாகம் பெருக்கெடுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. சுற்றுலாத்தலமானதால் படகுப்பயணத்துடன்
சுற்றுலாவந்தவர்கள் கூட்டம். சற்றுநேரம் அக்காட்சியைக்
கண்டுகொண்டே மெதுவாக நகர்ந்தபடி கடந்தோம்.
சிம்மனஹத்தே வந்த போது பகல்பொழுதை இரவு முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தது.
லேசான தூறல். அலுவலகத்தில் தங்குமறையை பெற்றுக்
கொண்டோம்.
பலமுறை வந்து சென்ற ஸ்தலம்.
ஸ்ரீ சந்திரப்ரப ஸ்வாமி, ஸ்ரீ ஜிவாலாமாலினி மற்றும் அங்கிருந்த சிற்றாலயங்களை தரிசித்ததோடு, ஸ்வஸ்திஸ்ரீ லஷ்மிசேன
பட்டாரகரை வணங்கி சற்று நேரம் உரையாடிவிட்டு உறங்கச் சென்றோம்.
Lakkavalli
After getting Dharshan at Nittur,
we travel towards Simhanahadde as per our Program plan. We pass on through Tiptur,
Arisekere, Kadur, tarikere, while getting the
right turn at perumanahalli, I accidently search a jain temple nearby at this location on the Google map. It
indicates a Parshwanath jain temple, Lakkavalli
is on the
way to Simhanahadde.
So we are expecting the exact
place of Lakkavalli. At 16 km from
perumanahalli, on the way we saw a board
in Kannada words with logaswaroop symbol
with right arrow mark. We turn to that street side.
A nakara type Viman and apart a Manasthamp also saw on the
cut road. Stop the vehicle discovering joyfulness. Lay down there and enter
inside the gate. A woman opposite to the temple came and help us to get a darshan inside.
Newly Constructed temple in near-years, has 25 feet
Manasthamp with bas-relief of Jinar, Yaksha, Yakshi at the bottom square and
four thirthankar statues on top the small mantap. After open the main
door, a vast praying hall, nearly area of 1500 s.ft. At the end a Garbahruha
with Sri Parshwanath Jinar black marble statue of height 3 feet was installed in the recent year. A brass arch
prabaoli with Shamara devars and single umbrella at the top.
On its right side a small Shrine Mantap with viman with Shri
Dharanender of black stone statue and on the otherside same as the structure with
Shri Padmavathy matha of black stone statue also installed.
On the top of Garbagriha has a Viman of stripped conical
shape. Under the Viman on the first floor, a shrine room having a black marble
standing posture of Shri Chandraprabu Jinar. On ground floor at the end of
circumbulance a KShetrabalagar
statue also fastened inside a small shrine.
After finishing the Darshan we thank the woman for his
timely help and started toward Simhanahadde. On the way we cross the Badra Dam
with full swing flow of water. Very nice
view of the water current. It is a tourist spot with boating. Many people
enjoying the location.
We reached the Narasimharajapuram in the dusk. Approch the mutt office and got two rooms for
night stay. Then we took a Darshan of shrines of the
Athisayakshetra; Shri Jwalamalini with silver kavasam is very attractive and Shri Chandraprabu, Shri Santhinathar,
Bhagawan Bagubali and so on..
After sepending few
minutes with the Mutt head Shri
Lakshmisena Battarakar , we go to the
rest house for sleep.
No comments:
Post a Comment