Tuesday, August 28, 2018

Moodbidri KALLU BASADI - மூடுபத்திரை கல்லு பஸ்தி


Shri SHRI THALA NATHAR  JINALAYAM  -  ஸ்ரீ ஸ்ரீதளநாதர் ஜிநாலயம்







Location: with latitude, longitude of (13.07365, 75.00029)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.07365, 75.00029)

Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 352 Kms.

Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Moodbidri  = 285 Kms.




கல்லு பஸ்தி, மூடுபத்திரை

முடுபத்திரை ஜைன தெருவிலுள்ள மேலும் ஒரு பஸ்தியான இதன் கட்டுமானம் முழுவதுமாக பெரிய கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் (குல்= கல்) இப்பெயர் பெற்றது. கி.பி. 1234ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டதாக குறிப்புப்பலகை உள்ளது.

துவக்கத்தில் ஸ்ரீ சீதளநாதரை மூலவராகக் கொண்ட இஜ்ஜினாலயத்தில், முற்கால நூல்கள் பல பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நூலகம் போன்று பலரும் படிக்க வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குடவரை தாண்டி நுழைந்ததும் சற்றொப்ப 40 அடியுயர மானஸ்தம்பம் அழகாக காட்சிதருகிறது. அதனை அடுத்து முகமண்டபம் தனியாகவும், மஹாமண்டபம், அர்த்த மண்டபம், கருப்பகிருஹம் போன்றவை தமிழக ஜினாலய மண்டபங்கள் போன்ற கட்டமைப்பை செவ்வக வடிவில்; சதுர கல்தூண்கள், வட்ட  கல்தூண்கள், படிகள் அனைத்தும் கருங்கல்லால் காட்சி அளிக்கிறது. ஆனால் மேற்கூரை அமைப்பு மங்களூர் ஓடு வேயப்பட்டு காணப்படுகிறது.

மூலவராக ஸ்ரீ சாந்திநாதர் பழுப்புநிற சலவைக்கல்லில் வழவழப்பாக நான்கடி உரத்தில் கட்காசனத்தில் முழுச் சிலையாக வடித்து, வேதியில் நிறுவியுள்ளனர். வெண்கலப் பிரபாவளி, செங்குத்தாக அடுக்கான பெட்டிகளின் உள்ளே 24 உலோக ஜினர்ச் சிலைகள், பிரபாவளிகளுடன் காட்சி தருவது இப்பகுதியின் கலையம்சமாக  தெரிகிறது. ஸ்ருதஸ்கந்தம், கணதர கம்ப வடிவமும் உள்ளன.


மேலும் ஸ்ரீ பிரம்மதேவர் குதிரைமீதமர்ந்தும் மற்றும் ஸ்ரீ பத்மாவதி மாதா உலோகச்சிலைகள் அலங்காரத்துடன் மர விமானத்தில்  காட்சியளிக்கின்றன. 


மேலும் ஜினரின் இடதுபுறம் ஸ்ரீசந்திரநாதர் அமர்ந்த நிலை பழுப்புநிற சலவைக்கல் சிலை, உடுக்கை போன்ற வெண்கல மேடையில் அமர்த்தியுள்ளனர். அதற்கான பார்வைச்சாளரம் அர்த்தமண்டபத்தின் வலதுபுற சுவற்றில்   அமைத்துள்ளனர்.

முகமண்டபத்தின்  நுழைவு வாயிலின் வெளிப்புறம் சமவசரணம், சம்சாரஜிவனின் துன்பத்தை விளக்கும் வண்ணச் சித்திரங்கள் காட்சியளிக்கின்றன.

பொதுவாக அனைத்து பஸ்திக்களிலும் துவாரபாலகர்கள் இருபுறமும் சித்திரங்களாக வடித்துள்ளனர்.

----------------------------------------------- 

Kallu basadi, Moodibidri

One more temple in the Jain street of Moodibidri Jain Kasi called as Kallu basadi. That temple was constructed by rumble stones upto roof level. So it is called a Kallu basadi; ie Stone basadi. It was renovated in the year 1234 BC, is revealed by a board on the temple.

Initially Sri Sheethalanath was on the Kandakudi. After few centuries, Shri Shantinathar was seated on the same plinth. A Chandranath jinar also installed on the right side of the Moolnayak but facing rightangled to it. A view finder window also on the side wall of Arthamantap.

At front a huge pillar of height 40 feet welcome us. The Manasthamp has all agam features from bottom platform to Top Kalash. Then inside a Mukhamantap, a Mahamantap, Arthamantap and lastly Garbhakudi were built by big size rumble stone masonary work upto lintel level. It seems like a Tamil Nadu temple art. But above the superstructure wooden beam, planks were scafoled and tiled by Mangalore tiles as usual in this region temple roof work.

A 4 feet pepple colour stone idol of Shri Shantinathar in Katgasana posture is installed on vedi. One more marble stone idol Shri Chandranath Jinar also installed adjacent to that moolnayak towards facing rightangle to it. Vertical storied wooden box galleries has  24 bronze idols with prabavali on back. Sruthaskanth and Gandhar also seated in the middle platform of Arthamantap.


Shri Brahmadevar  on a raising horse and Shri Padmavathy Matha five alloy metal idol seated inside wooden Viman decoratively. 

Uniformly all basadi’s got Portrait art of Dwarabalakar on either  side of the entryway of  Arthamantap.

Though  it seems clean premises, the structure of walls and roof material were in less maintanence.


































No comments:

Post a Comment