Tuesday, August 7, 2018

Nittur


shri Chandraprabusamy digamber Jain mandir, 

ஸ்ரீ சந்திரப்ரபநாதர் திகம்பர் ஜினாலயா




நிட்டூர்

The place lies in the Coordination of (13.32203, 76.86099) set your navigator for.


மதியம் 12 மணியளவில் ஸ்ரீ சந்திரப்ரபு ஸ்வாமி ஜினாலயத்தை அடைந்தோம். வழக்கம் போல் மானஸ்தம்பம் வரவேற்று வணங்கவைத்தது. நாற்பது அடியுயரத்தில் அழகிய விமானத்தில் நாற்புரமும் மூலவரை ஒத்த ஜினரின் அமர்ந்த நிலை  சிலைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.


சற்றொப்ப 1175ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயக்கட்டுமானத்தில்  பெரும்பாலானவை ஹொய்சள ஆலய கட்டிடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டிருந்தது. மிகவும் பாழடைந்த  இடங்களை மட்டும் இக்கால சிமெண்டு கட்டுமானத்தினால்  சீர்செய்து பாதுகாத்துள்ளனர் என்பதை காணும் போதே தெரிகிறது.  பழமையை அப்படியே வண்ணங்கள் கூட பூசாமல் பாதுகாத்திருப்பது வியக்க வைத்தது.


கர்ப்பக்கிருஹம், சுகநாசி (உன்னாழி), நவரங்க (நாலுகால்) மண்டபம் மற்றும் முகமண்டபம்(9 கால்) என நான்கு பகுதிகளாக தோற்றமளித்தது.


துவக்கத்தில் ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்டிருந்த இப்புராதன ஜினாலயத்தை, மிகவும் பாழடைந்து போனபோது 26 ஜனவரி, 1969 ஆம் ஆண்டு சீர்செய்த வேளையில் இவ்வூர் மக்கள் சம்மதத்துடன் பகவான் சந்திரப்ரபுநாதரை பிரதிஷ்டை  செய்துள்ளனர்.

சுகநாசிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் கண்களுக்கு புலப்படவில்லை. நவரங்க மண்டபத்தின் மேல் ஒன்பது கோளவடிவத்தை அமைத்து கூரையில் மரத்தில் மிகநுட்பமான நகாசுவேலை அலங்காரங்களை செய்திருப்பது அழகாக உள்ளது. ஒரு கோள வடிவில் அஷ்ட திக்பாலகர் சிலைகள் தென்பட்டன. அவை மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்பட்டன. (வெளிச்ச மாறுபாட்டினால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.) அடுத்த ஒரு கூரையில் சங்கீத உபகரணங்களான வீணை, தபலா, டோலக் போன்றவற்றை அழகாக செதுக்கியிருந்தார்கள்.


முகமண்டபம் வழக்கம்போலான கட்டுமானத்துடன் காணப்பட்டது. அதே சமயம் அவற்றின் ஒன்பது  தூண்களும் ஹொயசள கலைநுணுக்கத்துடன் ஒவ்வொன்றும் வெவ்வேறு அலங்கார வேலைப்பாட்டுடன் காட்சி அளித்தன.


மேலும் கூரைப்பகுதில் அழகிய வேலைப்பாடுகளுக்கு இடையே தீர்த்தங்கரர்கள் சிலையும், யக்ஷ, யக்ஷி யர்கள்  உருவங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தென்திசை நோக்கி ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷி செதுக்கப்பட்டு, அன்றைக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பட்டுத்துணியுடுத்தி ஆபரண அலங்காரத்துடன் கண்டோம். நல்ல தொரு தரிசனம் கிட்டியது. மேலும் அக்கூடக் கூரையில் ஸ்ரீபத்மாவதியும்  காணக்கிடைத்தது.

மூலவராக 4 அடிஉயர சலவைக்கல்லால் ஆன ஸ்ரீசந்திரப்ரபு நாதஸ்வாமி கட்காசன நிலையில் தரிசனம் தந்து  கொண்டிருந்தார். அவருக்கு  முன்னர் முக்கிய உலோகச்சிலை வடிவங்கள் அடுக்கடுக்காக  காட்சியளித்தன. அதற்கு அடுத்த வெளிப்பகுதிக்கு  வரும்போது மூலவருக்கு  வலதுபுறமாக ஸ்ரீ பிரம்மதேவர் கற்சிலை அன்றைய அலங்காரத்துடனான சன்னதியும், இடது புறம் ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷி  அலங்காரத்துடனான சன்னதியும்,  வழியில் ஸ்ரீ ஜ்வாலாமாலினி உற்சவ மூர்த்தி அலங்காரத்துடன்  வைக்கப்பட்டிருந்தது. நல்ல தெய்வீகமான சூழலை அந்த  நவரங்க கூடம் கொண்டிருந்தது  என்றால் மிகையாகாது.

திருச்சுற்றை வலம் வரும்போது மண்டபங்களின் வெளிச்சுவரில் ஹொய்சளக்கலையில் கும்பபஞ்சரம் போன்ற மாடவடிவில் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பங்களுடன் காட்சியளித்தன. இடைஇடையே கும்பபஞ்சரம் போன்ற  அமைப்பும் அலங்காரவேலைப்பாடுடன் இருந்தது மேலும் அழகூட்டின.


கருவறைக்கு மேல் இரண்டு தளவிமானம் பத்மகலசத்துடன்  காட்சியளித்தது. கிரீவப்பகுதியில் நாற்புறமும் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலையும், அடுத்த  தளத்தில் கர்ணகூடம் சாலையும், பின்புறப்பகுதியில் தீர்த்தங்கரர் சிலையும், அதற்கடுத்த தளத்தில் சாலைக்கு கீழே உள்ள  மாடத்தில் தென்புறத்தில் ஸ்ரீஜ்வாலாமாலினி  சுதைசிலையும், மேற்புறத்தில் ஸ்ரீபிரம்மதேவரும், வடபுறத்தில் ஸ்ரீபத்மாவதி மாதா சுதைசிற்பமும் அமர்ந்த  நிலையில் வடிக்கப்பட்டு பொன்னிற வண்ணம்பூசி காட்சியளித்தன.


சுற்று முடியும் இடத்தில் மண்டப சுவற்றுக்கு வெளியே முன்பிருந்த  மூலவர்  ஸ்ரீஆதிநாதர் புராதன பத்மாசனச் சிலையும்,  முனிவர்கள் சல்லேகனா இருந்து உயிர்விட்டதை தெரிவிக்கும் நிஷாதி  சிற்பங்களும், பாதங்களும், நாகச் சிலைகளும் காட்சியளித்தன.


பூஜை நேரத்தில் சென்றதால் நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் பல நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளை கண்ட திருப்தியுடன் அவ்வாலயத்தை விட்டு அகன்றோம்.


அடுத்து சிம்மனஹத்தே எனும் நரசிங்கராஜபுரம் நோக்கி செல்ல பயணப்பட்டோம்….
----------------------------------------------- 


















































12th Century Jain Temple @ Nittur village, Near Tumkur City, Karnataka.

------------------------

Nittur, a village which is 30 kilometers to the west of Tumkur city, has a 12th century ‘Jaina Basadi’. Reflecting rich influence of Hoysala style of architecture, this basadi is divided into 4 main parts – Garbhagriha, Sukhanasi, Navaranga (4 pillared hall) and Mukhamantapa (9 pillared hall).


The temple at Nittur is said to have been built in the year 1175 A.D. At first the idol of Bhagawan Adinatha was the main deity in this temple. But with the passage of time it was ruined and the present idol of Bhagawan Shanthinatha was installed on 26th of January 1969.

While Sukhanasi is too small to go unnoticed, the insides of Navaranga has 9 beautiful dome-shaped ceilings of varied designs carved out of black soapstone (kappu balapada kallu). Of the 9, 2 ceilings in particular bear witness to excellent craftsmanship. One ceiling which is in the centre of Navaranga depicts Ashta Dikpalakas and Yakshis in a very detailed fashion, which has stood the test of time. And the other ceiling portrays musicians playing different musical instruments such as veene, tabala and kolalu among others. Mukhamantapa, although it is ordinary in nature, has 9 pillars each sculpted in different manner.

We can find very artistic and attractive carvings on the ceiling of the temple. We can also find the carvings of the tirthankaras and the yaksha and yakshi on the ceiling. The idols of Goddess Jwalamalini and Goddess Padmavathy found in the temple are very attractive. People from different parts of the state visit this temple every year to offer special prayers to yakshi Jwalamalini. Every Sunday special pooja is being conducted for Goddess Jwalamalini.

In front of the basadi, there is a 40 feet tall Manasthamba on the top of which one can notice a small structure in which there are 4 vigrahas facing four sides of the direction. On the right hand side wall of the basadi, the old statue of Adhinatha is placed next to a detailed stone inscription in old kannada, whose interpretation is not readily available.

There are also remnants of Nishadi stones within the confines of the basadi, which have been placed in the memory of those who undertook Sallekhana and sacrificed their lives. Unfortunately, these stones lie in a dilapidated state and if conservation efforts are not taken, they may get lost for generations to come.

2 comments:

  1. Pandi ji told that, every Sunday there will be special pooja for Jwalamalini Amman. People of Nittur and other places is gathering here and celebrating the pooja. Lunch also available on that day.

    ReplyDelete